உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்த்தர் மன அழுத்தத்தால் உயிர்மாய்ப்பு – துயரத்தில் குடும்பத்தினர்

  • Nov 4, 2025 - 06:40 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று (திங்கட்கிழமை, 3) உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார். உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவலின்படி, அவர் இதற்கு முன்பும் ஒருமுறை உயிர்மாய்க்க முயற்சி செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் மனஅழுத்தத்தில் கிணற்றில் குதித்து உயிர்மாய்த்துக்கொண்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள்

யாழ் சுன்னாகத்தில் ஆட்டோவையும் எரித்து வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர்.

  • Nov 4, 2025 - 06:30 PM
  • 0 Comments

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு (03-11) இரவு வன்முறைக் குழுவொன்று அட்டகாசம் செய்ததில், பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தகவல்கள் தெரிவிப்பதாவது, குறித்த குழுவினர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்துள்ளனர். இதனால் வண்டி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலும், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டதுடன், உள்ளே இருந்த பொருட்களும் உடைத்து நொறுக்கப்பட்டன. எனினும், விழிப்புணர்வுடன் செயல்பட்ட வீட்டார் உடனடியாக தீயை அணைத்ததன் மூலம் மேலும் பெரும் […]

விளையாட்டு

ஜேக் பால் மற்றும் ஜெர்வொன்டா ‘டேங்க்’ டேவிஸ் ஆகியோருக்கிடையேயான குத்துச்சண்டை போட்டி ரத்து

  • Nov 4, 2025 - 11:24 AM
  • 0 Comments

பிரபல யூடியூபர் மற்றும் குத்துச்சண்டையாளர் ஜேக் பால் மற்றும் இலகு எடை சாம்பியன் ஜெர்வொன்டா “டேங்க்” டேவிஸ் ஆகியோருக்கிடையேயான நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவிருந்த குத்துச்சண்டை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி மியாமி, புளோரிடாவில் நடைபெறவிருந்தது. ஆனால் கடந்த வாரம் மியாமி-டேட் கவுண்டியில் டேவிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கு காரணமாக, ஜேக் பாலின் விளம்பர நிறுவனம் ‘மோஸ்ட் வாலியூபிள் புரொமோஷன்ஸ்’ (MVP) போட்டியை நிறுத்திவைத்தது. MVP நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காலியில் இன்று காலை துப்பாக்கி சூடு ஒருவர் பலி

  • Nov 4, 2025 - 11:14 AM
  • 0 Comments

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று  காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளார் வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில்மரணமடைந்தவர் நகர சபை உறுப்பினர் அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உறவினர் என […]

உலகம் கட்டுரை வணிகம்

பிரான்ஸ் சிறுவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு எதிராக விசாரணை ஆரம்பித்துள்ளது

  • Nov 4, 2025 - 10:57 AM
  • 0 Comments

பிரான்ஸ் அதிகாரிகள் சிறுவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு எதிராக விசாரணை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, உலகப்பிரசித்தி பெற்ற ஆன்லைன் வணிக நிறுவனம் Shein தனது தளங்களில் இவ்வகை பொருட்களை முழுமையாகத் தடை செய்துள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், நிறுவனம் “செக்ஸ் டால் வகை பொருட்கள் மீது முழு தடை” விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய அனைத்து விளம்பரங்களும் படங்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. நிறுவனம் இந்தத் தடை உலகளாவிய அளவில் அமலில் இருக்கும் எனவும் உறுதியளித்துள்ளது. “Shein […]

உலகம்

இஸ்ரேலின் உயர் இராணுவ சட்ட ஆலோசகர கைது செய்யப்பட்டுள்ளார்

  • Nov 4, 2025 - 10:48 AM
  • 0 Comments

இஸ்ரேலின் உச்ச இராணுவ சட்ட ஆலோசகர் யிஃபத் டோமர்–யெருஷல்மி, பாலஸ்தீன கைதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை ஊடகங்களுக்கு கசியவிட்டது மற்றும் உயர் நீதிமன்றத்தில் உண்மையை மறைத்தது குறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த வாரம் ராஜினாமா கடிதத்தில், விசாரணை நடத்தும் இராணுவ அதிகாரிகள் மீதான வலதுசாரி தாக்குதல்களை தணிக்கவே அந்த வீடியோ வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது, ‘அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல், நீதித்துறை தடங்கல் மற்றும் இரகசிய தகவல் […]

இந்தியா உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் வழமை போன்று கடிதம் எழுதியுள்ளார்

  • Nov 4, 2025 - 10:34 AM
  • 0 Comments

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய அரசாங்கம் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கடற்படை நேற்று 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களின் மூன்று மீன்பிடி படகுகளையும் கைது செய்துள்ளது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் தனித்த சம்பவமாக கைது செய்யப்பட்டனர் எனவும் ஸ்டாலின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூர் விவசாயிகளும் இனி கஞ்சா பயிரிடலாம்.

  • Nov 4, 2025 - 10:16 AM
  • 0 Comments

இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த கஞ்சா பயிரிடும் திட்டத்தில், இனி உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே முதலீட்டு சபை (BOI) விதித்த கடுமையான நிபந்தனைகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இம்முதலீட்டாளர்கள் இவ்வருட இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ((MoU)  கையெழுத்திடவுள்ளதாகவும், அடுத்த வருடம் முதல் பயிரிடும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். மொத்தம் […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரை வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கும் அரசு

  • Nov 4, 2025 - 09:47 AM
  • 0 Comments

மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆராய்ந்து மேம்படுத்துவதற்கான சர்வதேச கேள்வி அறிவித்தல் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக பெட்ரோலிய வளங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசாங்கம் இதற்கு முன்பு, மேல்மட்ட பெட்ரோலிய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான சர்வதேச கேள்வி அறிவித்தல செயல்முறையை ஒருங்கிணைக்க அனுபவம் வாய்ந்த ஆலோசனைக் குழுவைத் தேர்ந்தெடுக்க முன்வந்தது. எனினும், புதிய ஆலோசகர் நியமிக்கப்பட்டாலோ இல்லையோ, மன்னார் வளைகுடா ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான புதிய […]

கட்டுரை

வாகன இறக்குமதிகள் சுங்க வருவாயின் மிகப்பெரிய பங்களிப்பாக இருந்து வருகின்றன.

  • Nov 4, 2025 - 08:52 AM
  • 0 Comments

சுங்கத்துறை விரைவில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலத்திற்கு விடும் புதிய மின்னணு ஏல (E-Tendering) முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்முறை, சுங்க ஏலங்களின் வெளிப்படைத்தன்மையையும் திறனையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பாராளுமன்றத்தின் “வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவுக்கு” முன் விளக்கமளித்த சுங்கத்துறை அதிகாரிகள், இவ்வருடம் செப்டம்பர் 30ஆம் திகதி வரையில் எதிர்பார்க்கப்பட்ட வருவாயில் 117% இலக்கை மீறியுள்ளதாக தெரிவித்தனர். அதாவது, திட்டமிடப்பட்ட ரூ.1,485 பில்லியன் வருவாய்க்கு எதிராக, ரூ.1,737 பில்லியன் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp