உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொலிஸாரும் போதையில் உள்ளனர்- பொலிஸ் மா அதிபர்

  • Jan 5, 2026 - 09:29 AM
  • 0 Comments

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சுமார் 500 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த அதிகாரிகளில் சிலரை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கொழு;பில் அமைந்துள்ள பஹலகம காவல்துறை பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி காவல்துறை அதிகாரிகளின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கல்வி மாற்றங்களை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்- இலங்கை ஆசிரியர் சங்கம்

  • Jan 5, 2026 - 09:14 AM
  • 0 Comments

முன்மொழியப்பட்ட கல்வி மாற்றங்களை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன், அவற்றை ஒரு வருடம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய கல்வி மாற்றங்களில் பல குறைபாடுகள் ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், அவசரமாக நடைமுறைப்படுத்துவது பாடசாலைகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் என சங்கம் எச்சரித்துள்ளது. ஆறாம் வகுப்பு ஆங்கில பாடப்பிரிவில் ஏற்பட்ட சர்ச்சை, கல்வி மாற்றங்களில் உள்ள பல பிரச்சினைகளில் ஒன்றே என இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உலக தரத்திற்கேற்ப கல்வியை புதுப்பிக்க வேண்டும்- சஜித்.

  • Jan 5, 2026 - 08:57 AM
  • 0 Comments

நாட்டின் கல்வி மாற்றங்கள் எதிர்காலத்தை நோக்கி அமைய வேண்டிய அவசியம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார் உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப கல்வி முறையை புதுப்பிக்காவிட்டால், இலங்கையின் இலவச கல்வி முறை தனியார் மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை கல்வி முறையில் இணைப்பது இன்றியமையாததாகிவிட்டதாக கூறினார். உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கல்வி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

200 மி. டொலருக்காக பாடத்திட்டங்களை மாற்றவில்லையென்கிறார் பிரதமர்

  • Jan 5, 2026 - 08:37 AM
  • 0 Comments

ஆறாம் வகுப்பு பாடப்பிரிவுகள் தொடர்பான கல்வி மாற்றங்கள் உலக வங்கியின் 200 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான நிபந்தனையாக அவசரமாக கொண்டு வரப்பட்டன என்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் முற்றாக மறுத்துள்ளார். கல்வி அமைச்சின் புதிய கல்வி மாற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விளக்கம் அளித்துள்ளார். மாணவர்களின் இணைய பயன்பாடுகளை சரியான பாதையில் வழிநடத்துவதற்காக டிஜிட்டல் பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குழந்தைகளை […]

உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 25 பேர் பலி, 14 பேர் மாயம்.

  • Jan 4, 2026 - 08:37 PM
  • 0 Comments

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப் பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர். ஜிகாவா மாநிலத்துக்குட்பட்ட அதியானி கிராமத்தில் இருந்து புறப்பட்ட படகு யோப் மாநில கார்பிக்கு செல்லும் போது திடீரென கவிழ்ந்தது. படகில் மொத்தம் 52 பேர் பயணம் செய்தனர். இதில் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவசரநிலை அதிகாரிகள் தெரிவித்ததாவது, படகு லீக்கேஜ் காரணமாக மூழ்கியுள்ளதாகவும், படகில் உயிர் பிழைத்த ஓட்டுனர் மீது கவனக்குறைவுக்கான வழக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொலிஸ் அறிவித்தல் என வதந்தி பரப்பபடுகின்றது- பொலிஸ் தலைமையகம்

  • Jan 4, 2026 - 08:15 PM
  • 0 Comments

சமூக ஊடகங்களில் மற்றும் தகவல் வழங்கும் செயலிகளில் தற்போது பரவி வரும் ‘பொலீஸ் அறிவிப்பு’ எனும் செய்தி, இலங்கை பொலீஸ் வெளியிட்டதல்ல என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகப்பூர்வமானவை அல்ல. தவறான தகவல்கள் மக்கள் மனதில் அவசியமற்ற பயம் ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதனை உத்தியோகப்பூர்வ தகவலாக எண்ண வேண்டாம் என்று பொலீஸ் எச்சரித்துள்ளது. இலங்கை பொலீஸ் நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய […]

இந்தியா உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

  • Jan 4, 2026 - 07:57 PM
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர த்விவேதி, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜனவரி 5 முதல் 8 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார். இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பின்படி, இந்த விஜயம் நட்பான நாடுகளுடன் பாதுகாப்பு உறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்துகிறது. விஜயத்தின் முதல் கட்டமாக, ஜெனரல் உபேந்திர த்விவேதி ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தினங்களில் ஐக்கிய […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் ஆணொருவர் சடலமாக மீட்பு

  • Jan 4, 2026 - 07:32 PM
  • 0 Comments

கொழும்பு தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு வேலைத்தளத்தின் முன்பாக ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தாக்குதலுக்குள்ளானதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தெஹிவளை சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் கல்கிசை பதில் நீதவான் கீத்ம பெர்னாண்டோ முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அநுரவின் ஜே.வி.பி. அமெரிக்காவுக்கு கண்டனம்

  • Jan 4, 2026 - 07:20 PM
  • 0 Comments

மக்கள் விடுதலை முன்னணி, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சுதந்திரமும் இறைமையும் கொண்ட வெனிசுலா நாட்டுக்குள் அமெரிக்கா அத்துமீறி நுழைந்து, மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்றது கடும் இராணுவத் தலையீடும் ஆக்கிரமிப்புமாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. உலகின் எந்த ஒரு சுதந்திர நாட்டைப் போலவே, வெனிசுலாவின் எதிர்காலத்தையும், […]

உலகம் செய்திகள்

வெனிசுவலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்காவின், நியூயோர்க்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

  • Jan 4, 2026 - 07:01 PM
  • 0 Comments

வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி மதுரோவை சிறைபிடித்த அமெரிக்கா, அவரை நியூயார்க் கொண்டு சென்றுள்ளது. அங்கே மன்ஹாட்டனின் மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் அழிவுகரமான ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் மதுரோ எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரியவருகின்றது அதேநேரத்தில், வெனிசுவேலாவில் அரசு நிர்வாகத்தை கவனிக்க துணை ஜனாதிபதி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வெனிசுலா […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp