உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புத்தகம் இல்லா பள்ளி? ஆறாம் தரத்தில் ஆரம்பிக்கும் கல்வி பதற்றம்

  • Jan 16, 2026 - 09:07 AM
  • 0 Comments

ஆறாம் தர மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களில் கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஆறாம் தர வகுப்புக்கான கல்வி மறுசீரமைப்பு நடைமுறை அடுத்த ஆண்டு 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பழைய பாடத்திட்டத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆறாம் தர மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களில் கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. புதிய பாடத்திட்டத்துக்கான தயாரிப்புகளால், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பூங்காவில் பிடிபட்ட பூச்சிகள்… பின்னால் பதுங்கும் பன்னாட்டு பாதையா?

  • Jan 16, 2026 - 09:04 AM
  • 0 Comments

ஹோர்டன் பிளெயின்ஸ் தேசிய பூங்காவில் உயிரியல் வளங்களை சட்டவிரோதமாக சேகரித்ததாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தம்பதியரைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் சர்வதேச அளவிலான தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், சுற்றுச்சூழல் துறை நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளுடன் இணைந்து தேசிய பூங்காக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் ஒழுங்குபடுத்தப்பட்ட உயிரியல் கடத்தல் வலையமைப்பு இருப்பது இதுவரை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டிட்வா தாக்கம் – தீர்வு தேடி தரையிறங்கும் ஐ.எம்.எப் குழு!

  • Jan 16, 2026 - 08:59 AM
  • 0 Comments

சமீபத்தில் நாட்டை தாக்கிய ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பொருளாதார, உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதிப்புகளை முழுமையாக மதிப்பாய்வு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியம் தனது பணியாளர் குழுவை எதிர்வரும் 22 முதல் 28 வரை கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விஜயம், இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கும் எதிர்கால தாங்கும்தன்மையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கும் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் அரசின் நிதி உக்திகள், பொதுத் முதலீட்டு முன்னுரிமைகள் மற்றும் ஐ.எம்.எப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியா சென்றார் இலங்கை சபாநாயகர்

  • Jan 15, 2026 - 08:19 PM
  • 0 Comments

இந்தியாவின் நியூ டெல்லியில் நடைபெறும் 28-ஆவது பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற அமர்வுகளின் போது தலைமை தாங்கும் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டின் போது, மாநாட்டிற்கு வெளியே இந்திய மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, இலங்கை சபாநாயகருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பாராளுமன்ற பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

போரின் புண்கள் இன்னும் ஆறவில்லை: பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் சர்வதேச சமூகம்

  • Jan 15, 2026 - 08:00 PM
  • 0 Comments

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படும் வரை இலங்கை மீது பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டோரை விசாரித்து தண்டிப்பது இலங்கை அரசாங்கத்தின் கட்டாய கடப்பாடாகும் என்றும், அது நிறைவேற்றப்படாத நிலையில் சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் இலக்கிடப்பட்ட தடைகள், குற்றவியல் விசாரணைகள் மற்றும் வழக்குத் தாக்கல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பில் மின் கம்பத்தில் ஏறி ஒருவர் போராடியதால் பரபரப்பு

  • Jan 15, 2026 - 07:47 PM
  • 0 Comments

கொழும்பு காலி முகத்திடல் மத்திய வீதியில், மின்கம்பத் தூணில் ஏறி ஒருவர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். களனிய பொலிஸாரால் தன்னை அநியாயமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இந்தப் போராட்டத்தை அவர் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையின் குழுவினரும் விரைந்து சென்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவசியமான மருத்துவ உதவிகளை வழங்குவதற்குமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மண்டியிட்டதா மன்னார் காற்றாலை மின்சாரத்திற்கு பச்சைக்கொடி காட்டிய மன்னார்

  • Jan 15, 2026 - 07:39 PM
  • 0 Comments

2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘விண்ட்ஸ்கேப் மன்னார்’ காற்றாலை மின்நிலையம் இன்று (15) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய மின்வலையமைப்புடன் உத்தியோகப்பூர்வமாக இணைக்கப்பட்டது. ‘விண்ட்ஸ்கேப் மன்னார்’ திட்டத்தின் கீழ், இலங்கையின் மின்சார வரலாற்றில் முதன்முறையாக, தலா 5 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய நான்கு காற்றாலைத் தூண்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் […]

முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள்

மொழி வேறு, மதம் வேறு மனிதம் ஒன்று – ஒற்றுமை நாட்டுக்கான ஜனாதிபதியின் அழைப்பு

  • Jan 15, 2026 - 07:20 PM
  • 0 Comments

எந்த மொழியைப் பேசினாலும் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்து பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் உறுதியான நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். தைப்பொங்கல் விழா பாரம்பரிய வரவேற்புடன் ஆரம்பமாகி, பல கலை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் வர்ணமயமாக […]

உலகம்

ஈரானில் வன்முறை நிறுத்தம் – அமெரிக்கா எச்சரிக்கை

  • Jan 15, 2026 - 04:20 PM
  • 0 Comments

ஈரானில் வன்முறைக்குப் பின் மக்கள் போராட்டங்களைத் தடுக்க காவல்துறை எடுத்த நடவடிக்கையில் ஏற்பட்ட கொலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் ஆனால், ஈரானின் அரசுக்கு எதிராக அமெரிக்கா தேவையானால் நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார். மனித உரிமை அமைப்புகளின் அறிக்கையின்படி, நாட்டளாவிய போராட்டங்களை தடுக்க ஈரான் அதிகாரிகள் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையில் ; 2,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டிரம்ப் கருத்து தெரிவித்த நாளில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்களின் ராணுவ […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புயலும் பசியும் பிணையும் நிலையில் – 11 இலட்சம் மக்களுக்கு அவசர ஆதாரம் தேவை-FAO

  • Jan 15, 2026 - 02:56 PM
  • 0 Comments

இலங்கையில் ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு நடவடிக்கைகள், வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1 கோடியே 65 இலட்சம் அமெரிக்க டொலர் சர்வதேச உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிவித்துள்ளது. இந்த புயல் நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ளதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் 22 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 11 இலட்சம் பேர் உடனடி உணவு, விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp