உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் (ETRA) வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக துரைராசா கஷேந்திரன் (கஜன்) நியமனம்..!

  • Apr 2, 2026 - 09:22 AM
  • 0 Comments

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் (ETRA) வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக துரைராசா கஷேந்திரன் (கஜன்) அவர்களை நியமித்துள்ளதாக ஈழ தமிழர் பெருமன்றம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம்(01.04.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடபட்டுள்ளது. ஈழத்தமிழர் தாயகத்தில் நீண்டகாலமாக செயற்பட்டுவந்த ஊடகவியலாளரும், குடிசார் சமூக செயற்பாட்டாளரும், ஆசிரியருமான துரைராசா கஷேந்திரன் ETRA வின் வட அமெரிக்கத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கனடா, அமெரிக்கா வாழ் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களது அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும், அறியத்தருகிறோம். யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாயைச் சேர்ந்தவர். முல்லைத்தீவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரஜா சக்தி திட்ட முன்மொழிவு தயாரிப்பு கருத்தரங்கு..!

  • Apr 1, 2026 - 12:35 PM
  • 0 Comments

பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகங்களை வலுவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் கீழ் முறையான திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை(31.03.2026) அம்பாறை மாவட்ட செயலக ஆரியத்தன மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ. முனாஸீர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன்போது, கிராமிய மட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை வினைத்திறனாகப் பயன்படுத்துவது தொடர்பிலும், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வர்த்தகத் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மாணவன்..!

  • Apr 1, 2026 - 11:37 AM
  • 0 Comments

வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் வர்த்தகத் துறையில் முதலிடம் பெற்றுள்ளது அம்மாணவனுக்கும் இந்த வெற்றியில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. பரீட்சை திணைக்களத்தின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இயக்கச்சியில் நாளை மாபெரும் போராட்டம்..!

  • Apr 1, 2026 - 11:33 AM
  • 0 Comments

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ தேவைக்காக 25ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இயக்கச்சி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 25ஏக்கர் காணியை இராணுவ முகாமினை அமைக்கும் நோக்குடன் நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காணி சுவீகரிப்பின் முதல்கட்டமாக காணியினை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவை திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் தனியார் காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்கு எதிராக […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விருப்பப்பட்டு கல்வி கற்றால் சாதிப்பது இலகுவான விடயம்..!

  • Apr 1, 2026 - 10:58 AM
  • 0 Comments

வரலாற்று சாதனை படைத்த மாணவன் தெரிவிப்பு கபொத உயர்தரம் 2025ல் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார் குறித்த மாணவன் 2.9400 வெட்டுப்புள்ளிகளுடன் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் சாதனை படைத்த மாணவன் இன்றைய தினம் ஊடகங்களுக்கு தனது சாதனை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் விருப்பப்பட்டு கல்வி கற்றால் சாதிப்பது இலகுவான விடயம் என கூறியுள்ளார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/share/v/1HKA5VUA2v/ நிருபர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவிப்பு..!

  • Apr 1, 2026 - 10:50 AM
  • 0 Comments

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31.03.2026) வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கமைய மாணவர்கள் அந்தந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வரலாற்றுச் சாதனை படைத்த மாணவன் பர்தானுக்கு வாழ்த்துகள்..!

  • Apr 1, 2026 - 10:32 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று எமது சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் எம்.எஸ்.எம். பர்தான் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய உயரிய சாதனையானது, அவரது உறுதியான இலக்கு, அயராத உழைப்பு மற்றும் தளராத தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்தச் சாதனை அவரது குடும்பத்திற்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த காத்தான்குடி மண்ணுக்கும் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அகில இலங்கை ரீதியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்..!

  • Apr 1, 2026 - 10:21 AM
  • 0 Comments

உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் (கணிதப் பிரிவு) தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு(31.03.2026) வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னாரில் பனைத் தோப்பில் பாரிய தீப்பரவல்..!

  • Apr 1, 2026 - 09:51 AM
  • 0 Comments

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பனைத் தோப்பொன்றில், நேற்று (31) காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. எனினும், இச்சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களோ அல்லது வீடுகளுக்கோ, ஏனைய சொத்துக்களுக்கோ பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தலைமன்னார் பொலிஸார், செல்வேரி இராணுவ முகாம் இராணுவத்தினர், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கரைக்கு கொண்டு வரப்பட்ட ஆழ்கடலில் பிடிபட்ட படகு..!

  • Apr 1, 2026 - 09:46 AM
  • 0 Comments

போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்கு திசையில் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்களுடன் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp