உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசியல் சிக்கல்கள்: இலங்கையின் எதிர்கால பாதை

  • Jan 25, 2026 - 11:04 AM
  • 0 Comments

இலங்கை தற்போது அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசு, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு தேவையான பல முன்னெடுப்புகளை முன்னோக்கி கொண்டு செல்ல முயல்கிறது. ஆனால், அரசியல் கூட்டணிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் சில நேரங்களில் நிலைத்திருக்கும் நடவடிக்கைகளை சிதறடிக்க செய்கின்றன. பொருளாதாரத் துறையில், நாட்டின் நாணய மதிப்பு கடந்த மாதங்களாக மந்தமான நிலைப்பட்டுள்ளது. அத்துடன் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

விமான நிலையத்தில் வேட்டை: பிடிபட்டது 13 கோடி போதை!

  • Jan 25, 2026 - 10:20 AM
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, சுமார் 13 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று அதிகாலை 4.00 மணியளவில் சலாம் எயார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் வந்திறங்கிய பயணிகளையே விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் கொண்டு வந்த ஐந்து பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் […]

உள்ளூர் செய்திகள்

அபிவிருத்தி லாபச்சீட்டுச் சபையின் நேற்றைய வெற்றி எண்கள் இதோ

  • Jan 25, 2026 - 09:41 AM
  • 0 Comments

அபிவிருத்தி லாபச்சீட்டுச் சபையினால் நேற்று (24-01-2026) நடத்தப்பட்ட குலுக்கல்களின் முடிவுகள் மற்றும் அடுத்த ஜக்பொட் விபரங்கள்:  லாபச்சீட்டு பெயர்  குலுக்கல் இலக்கம் வெற்றி எழுத்து வெற்றி எண்கள் அடுத்த ஜக்பொட் (ரூபா) அத கோடிபதி 2884 E 29, 54, 63, 68 81,855,834/- சனிதா வாசானாவ 5219 R 13, 14, 42, 56 54,228,115/- சுப்பர் போல் 3058 A 02, 31, 59, 80 92,432,293/- கப்ருக்க 2234 – – 623,190,500/- […]

உள்ளூர் செய்திகள்

தேசிய லாபச்சீட்டுச் சபை சனிக்கிழமை குலுக்கல் முடிவுகள் வெளியீடு!

  • Jan 25, 2026 - 09:36 AM
  • 0 Comments

நேற்று (24-01-2026) நடைபெற்ற தேசிய லாபச்சீட்டுச் சபையின் முக்கிய குலுக்கல்களின் வெற்றி விபரங்கள் வருமாறு:  லாபச்சீட்டு பெயர்  குலுக்கல் இலக்கம் வெற்றி எழுத்து / இராசி வெற்றி எண்கள் மகாஜன சம்பத 6084 B 05, 08, 08, 05, 02, 05 கவிசெத 4326 O 02, 14, 49, 62 மெகா பவர் 2432 G 17, 21, 32, 50, 79 தன நிதானய 2114 B 22, 28, 32, 72 […]

கட்டுரை

NPP–JVP பிளவு: ஜனநாயக அச்சம்

  • Jan 25, 2026 - 09:31 AM
  • 0 Comments

ஆளும் கூட்டணியாக உள்ள ஜனதா விமுக்தி பெரமுனா மற்றும் அதன் அரசியல் வாகனமான தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் இப்போது ஊக நிலையைத் தாண்டி வெளிப்படையான பிளவுகளாக உருவெடுத்துள்ளன. அரசின் உள்பகுதியில் நிலவும் ஆழமான கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்துள்ள கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான கடும் சர்ச்சைகளே இந்த உடைவின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைந்துள்ளன. சமீபத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, […]

உள்ளூர் இந்தியா செய்திகள் வணிகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ. 1.20 லட்சத்தை நெருங்கியது – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

  • Jan 25, 2026 - 08:21 AM
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு உயர்வு காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய விலை நிலவரம்: இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து 14,875 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,200 ரூபாய் உயர்ந்து 1,19,000 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இணையச் சட்டம்: மறுசீரமைப்புப் பணி: இறுதிக்கட்டத்தில்

  • Jan 25, 2026 - 07:48 AM
  • 0 Comments

இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தில்(Online Safety Act) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய சட்டத்தில் பாலின ரீதியான துன்புறுத்தல்கள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் இணையவழி மிரட்டல்களைக் கையாள்வதில் உள்ள இடைவெளிகளை அரசாங்கம் இனங்கண்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராக எழுந்த மக்கள் விமர்சனங்களை அடுத்து, முழுமையான மீளாய்வுக்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு, பொதுமக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மின்சார மறுசீரமைப்பு: பொறியியலாளர் எச்சரிக்கை! போராட்டம் வெடிக்கும்!

  • Jan 25, 2026 - 07:20 AM
  • 0 Comments

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட திகதி குறித்த வர்த்தமானியை வெளியிடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமது பிரதான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படாமல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், பொறியியலாளர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளை […]

செய்திகள் உள்ளூர் முக்கிய செய்திகள்

கணக்கில் அடங்காத் துயரம்… காலக்கெடுவில் தீர்வு! – கைகூடுமா காணாமல் போனோர் அலுவலகத்தின் திட்டம்?

  • Jan 25, 2026 - 07:05 AM
  • 0 Comments

காணாமல் போனோர் பற்றிய முறைப்பாடுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தீர்மானித்துள்ளது. இதற்கான விசேட விசாரணைக்குழுக்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து அந்த அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகநாதன் தற்பரன் தெரிவிக்கையில், தற்போது சுமார் 16,500 உறுதிப்படுத்தப்பட்ட முறைப்பாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். விசாரணைகளைத் துரிதப்படுத்த 25 விசேட குழுக்கள் அமைக்கப்படவுள்ளதுடன், முதலாம் ஆண்டில் 5,000 முறைப்பாடுகளைக் கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

லசந்த கொலை முதல் மகர வரை: – மர்மங்கள் விலகாதது காவல்துறையின் பிழையா?

  • Jan 25, 2026 - 06:53 AM
  • 0 Comments

சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கம்: முக்கிய வழக்குகள் தாமதமாவதற்கு காவல்துறையின் புலனாய்வுத் தோல்விகளே காரணம் முக்கியத்துவம் வாய்ந்த பல குற்றவியல் வழக்குகளில் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களுக்குத் தாம் பொறுப்பல்ல என்று சட்டமா அதிபர் திணைக்களம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்கள் மற்றும் நடைமுறையிலுள்ள சட்டங்களின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிற்கு எதிராக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் சமூக ஊடகங்களினால் தூண்டப்பட்டவை என திணைக்களத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp