தரமற்ற நிலக்கரி? நுரைச்சோலை மறுப்பு
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுகின்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எரிசக்தி அமைச்சு மறுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் நிலக்கரி நிறுவனத்திடமிருந்து தர அறிக்கை கோரப்பட்டுள்ள நிலையில், இதுவரை மின் நிலையம் எந்தவிதப் முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சு செயலாளர் மற்றும் இடைக்கால இலங்கை மின்சார சபை தலைவர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, குறித்த தரமற்றதாக கூறப்படும் நிலக்கரி கேள்வி கோரல் தொடர்பான அறிக்கை […]








