செய்திகள்

ரணிலிடம் 13 மஹிந்தவிடம் 15 அரச வாகனங்களாம்

  • Oct 19, 2024 - 01:04 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் வேணடுகோள் விடுத்துள்ளது. அரச வாகனங்களை ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போது; இதுவரை கையளிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 […]

செய்திகள்

இந்தியாவை பற்றி ஜேவிபியின் சில்வா தம்பிக்கு விளங்கேல்ல – செல்வம் அடைக்கலநாதன்

  • Oct 19, 2024 - 12:54 PM
  • 0 Comments

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ‘இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார். அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றனர் மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை […]

செய்திகள்

தமிழ்சினிமா மீது அக்கரை செலுத்தப்படும் என அரசாங்கம் தெரிவிப்பு.

  • Oct 19, 2024 - 12:41 PM
  • 0 Comments

நாட்டில் தமிழ் சினிமாவை ஒரு தொழில்துறையாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மன்றம் ஆகியவற்றிற்கான பணிப்பாளர் சபையை நியமிக்கும் நிகழ்வு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மேலும், தேசிய திரைப்படக் கழகம் நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதோடு தனியார் துறையுடன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்றும் விஜித […]

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் முக்கியமான ஆவணங்களை அரசிடம் கையளிக்க முனைந்த போதும் அரசு பதிலில்லை – உதயகம்மன்பில

  • Oct 19, 2024 - 11:39 AM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில முக்கியமான பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை அரசிடம் கையளிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தினை சந்திப்பதற்கு உதயகம்மன்பில முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளாhர் ஈஸ்ட்டர் தாக்குதல் குறித்த ஆவணங்களை மறைத்த விவகாரம் தற்போது திடீர் திருப்பம் பெற்றுள்ளது பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை பொது வெளியில் பகிரங்கப்படுத்துவதற்கு உதயகம்மன்பில தயாரில்லை என தெரிவித்துள்ளார் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு குறுஞ்செய்தியை அனுப்பியும் அதற்கும் அமைச்சரிடம் இருந்து பதில் இல்லை என உதயகம்மன்பில கவலை வெளியிட்டுள்ளாhர் […]

செய்திகள்

நவரத்தினம் கேசவராஜன் ஈழச்சினிமாவின் ஆழமான ஆளுமை

  • Oct 19, 2024 - 11:14 AM
  • 0 Comments

இனிய 57 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவரத்தினம் கேசவராஜன் பிறப்பு (19 ஐப்பசி 1962 ) இறப்பு( 9 தை 2021) ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். அமைதியான ஆர்ப்பாட்டமற்ற ஊடகவியலாளர் அது மட்டுமல்லாது இவர் விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியுடன் இணைந்து பல குறும்படங்களையும், முழுநீளத் திரைப்படங்களையும் இயக்கினார். ஈழப்போர்க் காலத்தில் அப்பகுதிகளில் உள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை […]

சினிமா

பொய்யா விளக்கு ஆவணத் திரைப்படம் டொரோண்டோவில் திரையிடப்படுகின்றது

  • Oct 19, 2024 - 10:18 AM
  • 0 Comments

முள்ளிவாய்யகால் தமிழினப்படுகொலையின் நேரடி சாட்சியான வைத்திய கலாநிதி வரதராசா நடித்த ஆவணத் திரைப்படமான பொய்யா விளக்கு 19/10/2024 சனிக்கிழமை ஸ்காபுரோவிலுள்ள (மக்கோவான் & பின்ஞ்) வூட்சைட் திரையரங்கில் பி.ப 1:00 மணிக்கு திரையிடப்படுகின்றது தனேஷ் இயக்கிய ‘பொய்யாவிளக்கு’ ஆவணத் திரைப்படம் டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது பொய்யா விளக்கினை தமிழர்கள் மட்டுமன்றி மனித குலத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். நம் நாட்டவரான வைத்திய கலாநிதியான வரதராசாவின் உண்மைக்கதையை தழுவிய இந்த […]

செய்திகள்

விட்டார் விக்னேஸ்வரன் பெற்றார் மணிவண்ணன்

  • Oct 19, 2024 - 07:56 AM
  • 0 Comments

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது வைக்கப்பட்டது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் யாழ் வாடகை வீட்டில் வைத்து (18) நேற்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வில் யாழ் தேர்தல் மாட்ட வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள்; கலந்துகொண்டனர்.

செய்திகள்

கெம்பஸ் தம்பியவை சொல்லுகினம் சுயேட்சைக்கு ஓட்டு போட வேண்டாமாம்.

  • Oct 19, 2024 - 07:40 AM
  • 0 Comments

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் […]

உள்ளூர்

யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவருக்கும் யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குமிடையில் சந்திப்பு

  • Oct 18, 2024 - 04:19 PM
  • 0 Comments

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளை (19) யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்ட்டுள்ளது. இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி சம்லி பலுசேன ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

விளையாட்டு

பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் வெற்றி, சஜித் கான் 7 விக்கெட்டுகளை கொய்தெடுத்தார்.

  • Oct 18, 2024 - 04:01 PM
  • 0 Comments

  பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 366 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ஓட்டங்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆரம்பித்தது அதிரடியாக விளையாடிய […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp