உள்ளூர் செய்திகள்

யாழ் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

  • Dec 15, 2024 - 02:29 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் காய்ச்சலின் தாக்கம் தீவிரமாகப் பரவி வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுவரை 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நோய் நிலைமை காரணமாக, யாழ்ப்பாணத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்தனர். இதேவேளை திடீர் நோய் நிலைமை காரணமாகச் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டது. அவர்கள் பருத்தித்துறை, […]

இந்தியா உள்ளூர் செய்திகள்

இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்துள்ளமை முக்கியமானது-இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி

  • Dec 15, 2024 - 02:19 AM
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்திருப்பதன் மூலம் தெரிவிக்கப்படும் செய்தியை அங்கீகரிப்பது அவசியம் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி அசோக் சஜ ஜன்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, மாறிவரும் புவிசார் அரசியல் நிலப்பரப்பில் இந்திய இலங்கை உறவுகள் பல திருப்பங்களையும் மாற்றங்களையும் கண்டுள்ளன. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க டிசம்பர் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என இந்திய […]

உள்ளூர் செய்திகள்

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவை- கஜேந்திரகுமார்

  • Dec 15, 2024 - 01:46 AM
  • 0 Comments

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவையுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார் வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று […]

உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

  • Dec 15, 2024 - 01:37 AM
  • 0 Comments

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த அமைப்பினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில், இலங்கையின் அனைத்துப் பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளைக் கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(14.12.2024 )

  • Dec 15, 2024 - 12:24 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி போராட்டம் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் கடும் தொனி வடகிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இராமநாதன் அர்ச்சுனாவினால் ஏற்ப்பட்ட அமளி துமளி! https://youtu.be/4hxq0ATONO8

செய்திகள்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி போராட்டம்

  • Dec 14, 2024 - 07:52 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் இடம்பெற்று வருகிறது. தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த இப்போராட்டம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் […]

செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் கடும் தொனி

  • Dec 14, 2024 - 07:40 PM
  • 0 Comments

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் ஆரும்பமாக இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை […]

செய்திகள்

நாடு சரியான திசை வழியில் செல்ல அனைவரும் உதவ வேண்டும்- தோழர் சுகு

  • Dec 14, 2024 - 08:48 AM
  • 0 Comments

ஒரு நம்பிக்கை கீற்று இலங்கையில் தற்போது உருவாகியுள்ள சமூக அரசியல் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் சமூக மட்டத்தில் ஜனநாயக இடைவெளி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது . மறைந்த தமது பிள்ளைகளை நினைவு கூரும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த வீதிகள் நிலங்களை மக்களிடம் ஒப்படைக்கும் காரியங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன . இன மத வாதத்துடன்எவ்வித சமரசமும் இல்லை என ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தோழர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது . நாட்டின் நிர்வாக […]

செய்திகள்

வடகிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும்

  • Dec 14, 2024 - 07:57 AM
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ,டைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல ,டங்களில் மாலை அல்லது ,ரவு வேளைகளில் மழை அல்லது ,டியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில ,டங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில ,டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் […]

உள்ளூர் செய்திகள்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இராமநாதன் அர்ச்சுனாவினால் ஏற்ப்பட்ட அமளி துமளி!

  • Dec 14, 2024 - 03:12 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (13) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அர்ச்சுனா, ஜெயச்சந்திர மூர்த்தி ராஜீவன், கருணைநாதன் இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், அரச திணைக்கள பிரதிநிதிகள், பிரதேச […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp