செய்திகள்

இலங்கை ஜனாதிபதியை இந்திய ஜனாதிபதி, பிரதமர் வரவேற்பு

  • Dec 16, 2024 - 11:38 AM
  • 0 Comments

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை இன்று திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இணைந்து வரவேற்றனர். இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பானது புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.  

இந்தியா செய்திகள்

தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் காலமானார்!

  • Dec 16, 2024 - 03:29 AM
  • 0 Comments

பிரபல தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் தனது 73 ஆவது வயதில் நேற்று காலமானார். அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதய செயலிழப்பு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல தபேலா இசைக்கலைஞரான இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அத்துடன் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் சாகிர் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையும் […]

உள்ளூர் செய்திகள்

இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்!

  • Dec 16, 2024 - 03:11 AM
  • 0 Comments

வலய பாதுகாப்பு தொடர்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள்இ வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்இ தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

  • Dec 16, 2024 - 03:01 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின் போது இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் விவசாயத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உறுதியளித்துள்ளார். இதேவேளை, கடற்றொழில் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாடு ,தனித்துவமான துறைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் , இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு […]

உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் ஜனாதிபதி அநுரவிற்கு அமோக வரவேற்பு!

  • Dec 16, 2024 - 02:38 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, , இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் , இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(15.12.2024 )

  • Dec 16, 2024 - 01:07 AM
  • 0 Comments

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு  மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம் யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி! மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே  இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் https://youtu.be/2svXrqbsfvc

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீர்

  • Dec 16, 2024 - 12:14 AM
  • 0 Comments

32 வயதான மொஹமட் அமீர் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இதுவரையில் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் ‘பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடுவது மிகப்பெரிய கௌரவம். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் அடுத்த தலைமுறைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்ல இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.’என மொஹமட் அமீர் […]

விளையாட்டு

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம் வாய்ந்த நிலையில் உள்ளது

  • Dec 15, 2024 - 11:57 PM
  • 0 Comments

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 405 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தபோது முதல் 3 விக்கெட்கள் மதிய போசன இடைவேளைக்கு முன்னர் வீழ்த்தப்பட்டது. உஸ்மான் கவாஜா (21), நேதன் மெக்ஸ்வீனி (9), மானுஸ் லபுஷேன் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். எனினும் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் […]

உலகம்

அமெரிக்காவில் இனி நேர மாற்றம் இல்லை- டொனல்டு டிரம்ப்

  • Dec 15, 2024 - 11:53 PM
  • 0 Comments

அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பகல் சேமிப்பு நேரம் (னுயலடiபாவ ளுயஎiபெ வுiஅந-னுளுவு) என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க ‘பகல் சேமிப்பு நேரம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது கோடைக்காலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர். இதன் மூலம் அதிகமான பகல் நேரம் கிடைக்கும். பின்னர் கோடைகாலம் முடியும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பர். இதன்படி அமெரிக்காவில் மார்ச் மாதம் 2 ஆவது […]

உலகம்

தாய்லாந்து இசை விழாவில் குண்டு வெடிப்பு 3 பேர் பலி 50 பேர் காயம்

  • Dec 15, 2024 - 11:48 PM
  • 0 Comments

தாய்லாந்தின் வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் நள்ளிரவில் இசை திருவிழா நடந்தது. இதில் சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று குண்டு வெடித்தது. இதனால் திருவிழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்த பகுதி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp