உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 22.12.2024

  • Dec 23, 2024 - 12:25 AM
  • 0 Comments

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள் நோர்வே தூதுவர் பிரதமரை சந்தித்தார்   https://youtu.be/WKOY0revRak

உலகம்

காங்கோவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலி

  • Dec 22, 2024 - 10:05 AM
  • 0 Comments

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இகியுடர் மாகாணத்தில் புசிரா ஆறிலேயே இந்த விபத்து நடைப்பெற்றுள்ளது பாய்கிறது. இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று அண்டை நகருக்கு புசிரா ஆற்றில் படகு ஒன்றில் 150க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்தப் படகில் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர். இதில் ஆற்றில் மூழ்கி 38 பேர் பரிதாபமாக […]

உலகம்

ஆப்கனை அதிகாலையில் உலுக்கியது நிலநடுக்கம்

  • Dec 22, 2024 - 09:56 AM
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

செய்திகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது

  • Dec 22, 2024 - 09:42 AM
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணம் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 43.7மூ என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் இந்த பங்களிப்பில் சேவை மற்றும் கைத்தொழில் துறைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இதற்கிடையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு முறையே இரண்டாவது […]

உள்ளூர்

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன்

  • Dec 22, 2024 - 09:30 AM
  • 0 Comments

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ள முடிவில் மாற்றம் செய்யக்கூடாதென்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் அதனை ஏற்க முடியாது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் மாவை சோ.சேனாதிராஜா நீடிப்பதை அங்கீகரிப்பதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கும் பொருட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த 14 ஆம் திகதி […]

செய்திகள்

நோர்வே தூதுவர் பிரதமரை சந்தித்தார்

  • Dec 22, 2024 - 08:36 AM
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனருக்குமிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றள்ளது. இதில் வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. நாட்டில் கல்வி முறைமையை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான அரச சேவைக்காக நிர்வாக முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் […]

உள்ளூர்

கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள்

  • Dec 22, 2024 - 08:23 AM
  • 0 Comments

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர் கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53 வயதுடைய கெலன்பிந்துவௌ, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் […]

செய்திகள் விளையாட்டு

3-வது டி 20 போட்டியிலும் வங்கதேசம் அணி வெற்றி!

  • Dec 22, 2024 - 03:38 AM
  • 0 Comments

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டி20 தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி  நடைபெற்றது. டாஸ் […]

செய்திகள் விளையாட்டு

பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார்!

  • Dec 22, 2024 - 03:33 AM
  • 0 Comments

இந்த மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர், ரே மிஸ்டீரியோ ஆகும். இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். மல்யுத்த ரசிகர்களின் மனதில் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு. ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும். இந்நிலையில், ரே மிஸ்டீரியோ நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு குறித்து அவரின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இருப்பினும், ரே மிஸ்டீரியோவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிவில்லை. ரே மிஸ்டீரியோவின் மறைவு உலகம் முழுவதும் […]

உலகம் செய்திகள்

ஜேர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் புகுந்த கார் – இருவர் பலி

  • Dec 22, 2024 - 03:26 AM
  • 0 Comments

ஜேர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்தார். அங்கிருந்த மக்கள் மீது இடித்து தாக்குதல் நடத்தினார். இதில் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp