செய்திகள்

வவுனியாவில் அரசியல் கைதிகளுக்காக கையெழுத்துப் போராட்டம்

  • Dec 28, 2024 - 06:00 PM
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியே கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையத்துக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.  

விளையாட்டு

முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!

  • Dec 28, 2024 - 03:29 AM
  • 0 Comments

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் குவித்த அபார சதத்தின் உதவியுடன் அவுஸ்திரேலியா பலமான நிலையில் இருக்கிறது. அவுஸ்திரேலியா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 474 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று மோசமான நிலையில் இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மீதம் இருக்க 310 ஓட்டங்களால் […]

விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடிய இந்திய மகளிர் அணி!

  • Dec 28, 2024 - 03:24 AM
  • 0 Comments

மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் தொடரில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வந்தனர். முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஷெமைன் காம்பெல்லே – சினெல்லே […]

உலகம் செய்திகள்

நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ்!

  • Dec 28, 2024 - 03:19 AM
  • 0 Comments

ஏமனில் உள்ள தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின்இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலை கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் செங்கடலில் வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் கப்பல்களையும் சிறை பிடித்து வருகின்றனர். எனவே அமெரிக்கா உதவியுடன் ஹவுதிகள் மீது […]

உலகம் செய்திகள்

தென் கொரியாவில் மீண்டும் குழப்ப நிலை!

  • Dec 28, 2024 - 03:11 AM
  • 0 Comments

வரவு செலவு திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உள்ளிட்டவை பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். முதல் தீர்மானம் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தோல்வி அடைந்தது. ஆனால் மக்களிடையே […]

இந்தியா செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி!

  • Dec 28, 2024 - 03:04 AM
  • 0 Comments

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது; சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அவருக்கு […]

உள்ளூர் செய்திகள்

ஆய்வாளர்களை நியமிக்கவுள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை!

  • Dec 28, 2024 - 02:58 AM
  • 0 Comments

மருந்துகளின் தரக் கண்காணிப்பு குறித்த விசாரணை திறனை விரிவுபடுத்துவதற்காக, விசேட ஆய்வாளர்களை நியமிக்கவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அறிவித்துள்ளது. தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத மருந்துகளை கண்டறிவதில் எங்களுக்கு காணப்படுகிற தடைகளை போக்குவதற்கும் எங்கள் விசாரணைகளை விரிவுபடுத்துவதற்காகவும் ஆய்வாளர்களை நாங்கள் நியமிக்கப் போகிறோம் என்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்குள் கொண்டுவரப்படும் மருந்துகளின் தரத்தில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல பதிவு […]

உள்ளூர் செய்திகள்

தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்!

  • Dec 28, 2024 - 02:51 AM
  • 0 Comments

தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். ஏனெனில் சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென ஸ்ரீ லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வினவிய போது இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளை துரிதப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. பல தசாப்தகாலமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்படுகிறது. இருப்பினும் எந்த […]

உள்ளூர் செய்திகள்

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலன் குறித்து முக்கிய முடிவு

  • Dec 28, 2024 - 02:44 AM
  • 0 Comments

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்பங்களின் நலன்கள் குறித்து நிவர்த்தி செய்யும் குழுவின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அடையாளம் காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும், பூர்த்தி செய்யப்படாத […]

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் 36 சதவீதமான காணிகள் இராணுவத்தின் வசம்-ஸ்ரீதரன் எம்.பி

  • Dec 28, 2024 - 02:37 AM
  • 0 Comments

கிளிநொச்சியில் 36 சதவீதமான காணிகள் இராணுவத்தின் வசம் உள்ளதாகவும் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36 சதவீதமானமை, போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமலுள்ளமை, மாவட்டத்தின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்பு, பூர்த்தி செய்யப்படாத வீட்டுத்திட்டங்களுக்கான விசேட நிதியீட்டங்களை குறித்த பயனாளிகளுக்குப் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp