உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)30.12.2024

  • Dec 31, 2024 - 12:49 AM
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடகில் போராட்டம் தமிழகத்தற்கும் யாழ்ப்பாணத்திற்குமான கப்பல் சேவை 2ம் திகதி ஆரம்பம் புதிய இராணுவ கடற்படை தளபதிகள் நாளை பதவியேற்கவுள்ளனர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மன்னாரில் கையெழுத்து போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட கிராம அலுவலர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழரசுக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லை- இரா.சாணக்கியன் https://youtu.be/JX8YzBkqb1I

செய்திகள்

சிறைச்சாலைகளில் போதைப்பொருட்களுக்கு இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதி பணிப்புரை!

  • Dec 30, 2024 - 10:03 PM
  • 0 Comments

கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார். அத்துடன் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, அதற்காக இணையவழி (ஒன்லைன்) முறையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார். ஒன்லைன் முறையின் ஊடாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து அது தொடர்பான […]

செய்திகள்

தமிழரசுக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லை- இரா.சாணக்கியன்

  • Dec 30, 2024 - 09:49 PM
  • 0 Comments

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும்; இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பாரியளவிலான இரத்தப்பற்றாக்குறையினை குறைக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினருடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் பெரியகல்லாறு இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]

செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட கிராம அலுவலர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

  • Dec 30, 2024 - 09:38 PM
  • 0 Comments

சில நாட்களுக்கு முன்னர் கோறைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதி கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை அச்சுறுத்தலின்றி மேற்கொள்ள வேண்டியும், தாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மன்னாரில் கையெழுத்து போராட்டம்

  • Dec 30, 2024 - 09:31 PM
  • 0 Comments

போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. இதில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், […]

செய்திகள்

புதிய இராணுவ கடற்படை தளபதிகள் நாளை பதவியேற்கவுள்ளனர்

  • Dec 30, 2024 - 09:23 PM
  • 0 Comments

இராணுவம்இ கடற்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சேவை நீடிப்பு நிறைவடைந்துள்ளதோடுஇ விமானப்படை தளபதியின் சேவை நீடிப்பு அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது. அதற்கமைய நாளை புதன்கிழமை இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் ஓய்வையடுத்துஇ இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேலும் கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் காஞ்சன பனகொட கடற்படையின் 26 […]

செய்திகள்

தமிழகத்தற்கும் யாழ்ப்பாணத்திற்குமான கப்பல் சேவை 2ம் திகதி ஆரம்பம்

  • Dec 30, 2024 - 09:14 PM
  • 0 Comments

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக அந்த சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பிறகு மீண்டும் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சேவை நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிறுத்தம் செய்யப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து […]

செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடகில் போராட்டம்

  • Dec 30, 2024 - 08:01 PM
  • 0 Comments

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் ஏந்தியவாறு ‘காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?’, ‘ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா ’15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா’ என பல்வேறு கோஷங்களைஎழுப்பியவாறு வவுனியாவில் போராட்டம் முன்னெடுக்கப்ட்டது இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா அமர்வில் எமக்கான நீதியை பெற்றுத் தர ஐ.நா வலியுறுத்த வேண்டும். 2025ஆம் ஆண்டிலாவது […]

செய்திகள்

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள PAK VS SA டெஸ்ட் தொடர்!

  • Dec 30, 2024 - 02:03 AM
  • 0 Comments

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் அரை சதம் கடந்து, 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் […]

செய்திகள் விளையாட்டு

இந்தியாவுடனான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியா முன்னிலை

  • Dec 30, 2024 - 01:58 AM
  • 0 Comments

இந்தியாவுடனான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியா 333 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எந்த அணியும் வெற்றி பெறலாம் என்ற நிலை காணப்படுகிறது. போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா தனது 2ஆவது இன்னங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மீதம் இருக்க 333 […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp