களமாடினார் இளங்குமரன் எம்.பி
சட்டவிரோதமாக சுண்ணக் கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சந்தேக நபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்திலிருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்குச் சொந்தமான பாரவூர்தி மூலமாக சட்டவிரோதமான முறையில் சுண்ணக் கற்கள் அகழ்ந்து செல்வதற்கு எதிராக பிரதேச மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது இது தொடர்பில் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் மக்கள் முறையிட்டிருந்தனர் அதனை தொடர்ந்து […]









