சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

  • Jan 6, 2025 - 10:06 PM
  • 0 Comments

திரு சின்னத்துரை ஜெகநாதன் அன்னை மடியில் 25 பெப்ரவரி 1949 / ஆண்டவன் அடியில் 03 ஜனவரி 2025 யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா (TRONTO) ரொறான்டோவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜெகநாதன் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற S.R சின்னத்துரை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் தவப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான A.K சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகாம்பிகை (Register of Marriage) அவர்களின் ஆருயிர்க் கணவரும், காந்திமலர் […]

செய்திகள்

புலம்பெயர் இலங்கையர்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்களில் பெறலாம்

  • Jan 6, 2025 - 09:47 PM
  • 0 Comments

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் வசதிகள் செய்யப்பட்டு இன்று (06) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜப்பான், கட்டார், குவைத் தூதரகங்கள், மிலானோ, டொறொன்டோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் […]

செய்திகள்

சிங்களப் பெண்ணும் தமிழ் பெண்களும் இணைந்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

  • Jan 6, 2025 - 09:33 PM
  • 0 Comments

ரஸ்சிய இராணுவத்தில் வலிந்து இணைக்கப்படட உறவுகளை மீடக கோரியே சிங்கள பெண் ஒருவரும் தமிழ் பெண்கள் இருவரும் இணைந்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர் ரஸ்சிய்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் தாய்மாரும், கொழும்பு வென்னப்புவவைச் சேர்ந்த தாயொருவரும் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் […]

செய்திகள்

அரிசி விலையை அநுர கூட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றச்சாட்டு

  • Jan 6, 2025 - 08:46 PM
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலையை ஜனாதிபதி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டிய நிலைமை நாட்டு மக்களுக்கு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மேலும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இவ்வாறு […]

செய்திகள்

நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு – ஜனாதிபதி

  • Jan 6, 2025 - 06:35 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என இதன் போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்

செய்திகள்

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் கையெழுத்துப் போராட்டம் தொடர்கின்றது

  • Jan 6, 2025 - 05:42 PM
  • 0 Comments

அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாணத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆறு நாட்கள் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, ஏழாவது நாளாக இன்று யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இக் கையெழுத்து போராட்டத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலரும் கையெழுத்திட்டனர்  

செய்திகள்

கோட்டா அரசின் தேத்தண்ணி செலவு 287,340 ரூபா அநுர அரசின் தேத்தண்ணி செலவு 339,628.55 சதம்

  • Jan 6, 2025 - 05:29 PM
  • 0 Comments

பாராளுமன்ற செலவுத் தலைப்பின் கீழ் சம்பிரதாயமாக நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்திற்காக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வில் 287,340 ரூபா செலவிடப்பட்டுள்ளது பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசராத்திற்கு 339,628.55 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது இதற்கான காரணம் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் அண்ணளவாக 100 வீதத்தினால் அதிகரித்துள்ளன என அநுர அரசு தெரிவித்துள்ளது பாராளுமன்ற தேனீர் செலவுக்கு தான் உணவு தயாரிக்க […]

செய்திகள்

எலிக்காய்ச்சலால் கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு!

  • Jan 6, 2025 - 05:10 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணியால் இருவர் உயிரிழந்திருக்கலாம் என கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார் இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எனவே மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மற்றும் தசைநோ, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சனைகள் போன்றவை காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

செய்திகள்

பொலிஸ் நிலைய சி.சி.டி.விகளை காணவில்லையென பொலிஸார் முறைப்பாடு

  • Jan 6, 2025 - 04:40 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டை பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சி.சி.டி.வி கெமராக்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம், கோட்டை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளது. தற்போது, பொலிஸ் தலைமையகம் கொம்பனி வீதியில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தை அந்த இடத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் இந்த சிசிடிவி கெமராக்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பழைய பொலிஸ் தலைமையகத்தின் 5வது மாடியில் இந்த சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  

செய்திகள்

கிளீன் சிறிலங்காவில் முதலில் தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்ய வேண்டும் -யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

  • Jan 6, 2025 - 04:14 PM
  • 0 Comments

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்று (06) யாழ் பல்கலைக்கழக முன்றலில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp