செய்திகள் முக்கிய செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

  • Jan 8, 2025 - 03:56 PM
  • 0 Comments

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுசன் சந்திரஜித் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணிவரை கொழும்பின் பல வீதிகளில் பாதசாரிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

செய்திகள்

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது பஸ் சங்கங்கள் தீர்மானம்

  • Jan 8, 2025 - 03:46 PM
  • 0 Comments

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (08) தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பொலிஸாரின் வரம்பு மீறல் மற்றும் தேவையற்ற அழுத்தங்களை பஸ்கள் மீது பிரயோகிப்பதை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்திருந்தன […]

செய்திகள்

முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்

  • Jan 8, 2025 - 03:38 PM
  • 0 Comments

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்குமாறு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் தமிழ் தேசியம் சார் எண்ணம் கொண்டவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள் மாவீரர்கள் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். […]

செய்திகள்

கண்டியில் தனியார் கச்சேரி நடத்திய சந்தேக நபர்கள் கைது

  • Jan 8, 2025 - 03:20 PM
  • 0 Comments

கண்டி பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரியை சுற்றிவளைத்த பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர் கண்டி தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து, போலியாகத் தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் ,பிறப்பு சான்றிதழ்கள் , தேசிய அடையாள அட்டைகள், கல்வி சான்றிதழ்கள், காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளையோருக்கிடையில் சாதாரணமாக போதை மாத்திரைகள் பரிமாறப்படுகின்றது

  • Jan 8, 2025 - 03:12 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று இரவு (07) கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞன் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து 50 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

செய்திகள்

ரோகிங்ய அகதிகள் படகின் உரிமையாளர் மற்றும் படகோட்டிகள் 12 பேரும் விடுதலை

  • Jan 8, 2025 - 12:00 PM
  • 0 Comments

அண்மையில் இலங்கைக்குள் வந்திருந்த ரோகிங்ய முஸ்லிம் மக்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாதிகளை ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் 31ஆம் திகதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் அவர்களை 14 நாட்கள் விளக்கமறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். எனினும், இன்று (08) அவர்கள் மீதான குற்றச்சாட்டை சிஐடியினர் வாபஸ் பெற்ற நிலையில் அவர்களும் அந்த 12 நபர்களும் விசா இன்றி […]

செய்திகள்

சர்வதேச சட்ட மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது

  • Jan 8, 2025 - 11:53 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகதி;தின் சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணத்தில் சர்வதேச சட்ட மாநாட்டை எதிர்வரும் 25ம், 26ம் திகதிகளில் நடாத்த தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடானது மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது. செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் […]

செய்திகள்

இளங்குமரன் எம்பியால் பிடிக்கப்பட்ட கனரக வாகனம் சுண்ணக்கற்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளது

  • Jan 8, 2025 - 11:43 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்களை சுண்ணக்கற்களுடன் சாவகச்சேரி நீதிமன்று பிணையில் விடுவித்துள்ளது. தென்மராட்சி பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தனர் இந் நிலையில், கடந்த வியாழக்கிழமை சுண்ணக்கற்களுடன் பயணித்த கனரக வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார். அதனை தொடர்ந்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , குறித்த வழக்கின் மீதான விசாரணைகள் நேற்று (07) மன்றில் […]

செய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

  • Jan 8, 2025 - 10:59 AM
  • 0 Comments

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரூந்து சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது இன்று (08) இது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றையதினம் பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார். அத்தோடு, இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 […]

செய்திகள்

சமூக வலைத்தளங்களை நம்பி தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்

  • Jan 8, 2025 - 08:52 AM
  • 0 Comments

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளை நம்பி உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதன் பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp