முக்கிய செய்திகள்

ஐ.எம்.எப்பின் அனுமதியுடன் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படவுள்ளது

  • Jan 9, 2025 - 02:23 PM
  • 0 Comments

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளாhர்  

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் இடியன் துப்பாக்கியால் அத்தானை சுட்டார் மச்சான்

  • Jan 9, 2025 - 02:04 PM
  • 0 Comments

முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று (08) இரவு நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனையடுத்து, கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவரை […]

முக்கிய செய்திகள்

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்த குற்றவாளி ஞானசார தேரருக்கு 9 மாத சிறைதண்டனை

  • Jan 9, 2025 - 01:49 PM
  • 0 Comments

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது. அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, உத்தரவிட்டார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

யாழில் விபத்து மோட்டார் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

  • Jan 9, 2025 - 01:40 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. […]

முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

  • Jan 9, 2025 - 01:34 PM
  • 0 Comments

; யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு […]

இந்தியா செய்திகள்

உடல் அமைப்பு குறித்து கமெண்ட் அடிப்பது பாலியல் துன்புறுத்தல்!

  • Jan 9, 2025 - 12:36 AM
  • 0 Comments

பெண்ணின் ‘உடல் அமைப்பு’ குறித்து கமெண்ட் அடிப்பது தண்டனைக்குரிய பாலியல் துன்புறுத்தல் குற்றம் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள மாநில மின்சார வாரிய (கேஎஸ்இபி) ஊழியர் இருவர் அளித்த மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பத்ருதீன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட அந்த ஊழியர் மீது சக பெண் ஊழியர் புகார் அளித்திருக்கிறார். அந்த ஊழியர் தனக்கு எதிராக […]

இந்தியா செய்திகள்

தெருத்தெருவாக அலைந்த ஹாரீஸ் ஜெயராஜ்!

  • Jan 9, 2025 - 12:31 AM
  • 0 Comments

முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து பல ஹிட் பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்தான் ஹாரீஸ் ஜெயராஜ். அவரை பற்றிய ஒரு தகவல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்து கஜினி, 7 ஆம் அறிவு, துப்பாக்கி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார். அதில் 7 ஆம் அறிவு படத்தில் போது தர்மர் கதாபாத்திரத்திற்கு இசையமைக்கஇ 6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு இசையமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் 6 […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரானில் கடந்த ஆண்டு 31 பெண்களுக்கு மரண தண்டனை!

  • Jan 9, 2025 - 12:00 AM
  • 0 Comments

ஈரானில் 2024 ஆம் ஆண்டில் 31 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைக்குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பெண்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2008ஆம் ஆண்டு முதல், தொண்டு நிறுவனம் ஒன்று, ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகின்றமை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில், 2024 இல் தான், ஈரானில் பெண்களுக்கு அதிகமாக மரண தண்டனை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பேசு பொருளாக மாறியுள்ள வாகன அலங்காரத்தின் வரம்புகள் என்ன?

  • Jan 8, 2025 - 11:36 PM
  • 0 Comments

பல்வேறு அலங்கார பொருட்களை பொறுத்தி இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் தற்போது நாட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளன. அலங்காரம் மற்றும் பொழுதுபோக்கிற்காக மாற்றியமைக்கப்பட்ட சாதனங்களால் விபத்தின் போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், அவற்றை அகற்ற பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் இவ்வாறு பேசும் பொருளாக மாறியுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு எந்தவித நவீனமயமாக்கலும் செய்ய முடியாதா? ‘க்ளீன் சிறிலங்கா’ திட்டம் அமுல்படுத்தப்படும் சூழலில், பல்வேறு அலங்கார பொருட்கள் மற்றும் மேலதிக உதிபாகங்களை […]

விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை – பும்ரா தொடர்ந்தும் முதலிடம்!

  • Jan 8, 2025 - 11:00 PM
  • 0 Comments

ஆண்கள் டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று (௦8) வெளியிட்டது. டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2ஆவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ் மற்றும் 3ஆவது இடத்தில் தென்னாபிரிக்காவின் ரபாடா உள்ளனர். இந்த வரிசையில் 29 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தை அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் பிடித்துள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp