முக்கிய செய்திகள் விளையாட்டு

இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

  • Jan 11, 2025 - 12:00 AM
  • 0 Comments

அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தொடர்ந்து 239 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 34.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

  • Jan 10, 2025 - 11:45 PM
  • 0 Comments

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் மூவர் காயமடைந்துள்ளனர். காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

உள்ளூர் செய்திகள்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி நுவரெலியாவில் வெடித்த போராட்டம்!

  • Jan 10, 2025 - 11:34 PM
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை […]

உள்ளூர்

யாழ் பல்கலையில் மலையகத் தியாகிகள் மற்றும் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்கள் !

  • Jan 10, 2025 - 10:53 PM
  • 0 Comments

தேயிலைச் செடிகளின் நடுவே உழைப்புச் சுரண்டல்களுக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கி அடிமைப்படுத்தப்பட்ட மலையக தமிழ் மக்களினுடைய சமூக அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தம்முயிர் தந்த எம்மவர்களை நினைவேந்தும் மலையக தியாகிகள் தினம் ஜனவரி 10 அனுஷ்டிக்கப்படுகின்றது. 1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா அரச காவல்துறையால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 2025 ஆம் ஆண்டுடன் ஆண்டுகள் 51. இன்றுவரையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்டதொன்றாகவே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் மது போதையில் துவிச்சக்கர வண்டி செலுத்தியவருக்கு 25 ஆயிரம் தண்டம்!

  • Jan 10, 2025 - 10:32 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற சமயம் அச்சுவேலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது , தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , நீதிமன்று அந்நபருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பருத்தித்துறையில் மரக்கறி பொதுச் சந்தை திறப்பு!

  • Jan 10, 2025 - 10:19 PM
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை (10.01.2025) திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை […]

முக்கிய செய்திகள்

உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51வது ஆண்டு நினைவேந்தல்!

  • Jan 10, 2025 - 12:09 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீவிகே சிவஞானம் தலைமையில் இடம்பெற்றதுள்ளது இதன்பொழுது உயிரிழந்த ஒன்பது உறவுகளையும் நினைவு கூறி அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் சி.வீ.கே சிவஞானத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு அக வணக்கமும் செலுத்தப்பட்டது .வடமாகாண அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான […]

முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் அலுவலகத்தை மக்கள் நம்பும் வகையில் மாற்ற வேண்டும் – தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர்

  • Jan 10, 2025 - 10:44 AM
  • 0 Comments

காணாமல்போனோர் அலுவலகம் உட்பட தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பொறிமுறைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர் முனீர்முலாபிர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்றவற்றை முன்னைய அரசாங்கம் அரசியல் நியமனங்களிற்காக பயன்படுத்தியது என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் தற்போதைய அரசாங்கத்தின் இந்த பொறிமுறைகள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை உண்மையான நோக்கமாக கொண்டு செயற்படும் என குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் தற்போது மாறிவிட்டன,பத்துவருடங்களிற்கு முன்னர் காணப்பட்ட நிலை தற்போதில்லை,இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-CPJ

  • Jan 10, 2025 - 10:37 AM
  • 0 Comments

இலங்கையை சேர்ந்த சுயாதீன தமிழ் ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாகரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணையை நடாத்த வேண்டும். அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின்(CPJ) திட்ட இயக்குநர் Carlos Martinez de la Serna வியாழக்கிழமை அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

  • Jan 10, 2025 - 10:17 AM
  • 0 Comments

இன்று (10); யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த 75 வயதுடைய குமரேஸ்வரன் யோகலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp