உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

  • Jan 14, 2025 - 10:11 PM
  • 0 Comments

அடுத்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>இலங்கையில் […]

முக்கிய செய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

  • Jan 14, 2025 - 05:08 PM
  • 0 Comments

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார் மேலும் டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு […]

முக்கிய செய்திகள்

யாழ் தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம்

  • Jan 14, 2025 - 03:39 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்த போராட்டம் திங்கட்கிழமை (13) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சட்டத்தரணி ந.காண்டீபன், கட்சியின் […]

முக்கிய செய்திகள்

வீட்டில் பொங்காமல் மனதுக்குள் பொங்கியழுத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

  • Jan 14, 2025 - 03:19 PM
  • 0 Comments

அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராக உள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொங்கல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வடக்கு கிழக்கில் […]

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை- – நீதி அமைச்சர்

  • Jan 14, 2025 - 01:30 PM
  • 0 Comments

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கும் […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுர சீனா சென்றடைந்தார்

  • Jan 14, 2025 - 12:33 PM
  • 0 Comments

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின்அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(14 ) சீனா நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங் வரவேற்றதோடு சீன இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

செய்திகள்

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • Jan 14, 2025 - 02:26 AM
  • 0 Comments

தமிழர்களினால், வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் முதன்மையானது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் அறுவடை […]

முக்கிய செய்திகள்

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை விடுதி ஒன்றில் கடத்தியவருடன் தங்கியுள்ளார்

  • Jan 13, 2025 - 11:57 AM
  • 0 Comments

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றார்.

முக்கிய செய்திகள்

சீனத் தலைவரும் இலங்கைத் தலைவரும் நாளை பேச்சுவார்த்தை

  • Jan 13, 2025 - 11:45 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்கிற்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு 14ஆம் திகதி செய்வாய்க்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விஜயத்தின் போது இருநாடுகளுக்குமிடையில் முதலீடு, மின்துறை, மீன்பிடி, மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரதான துறைகளை உள்ளடக்கிய வகையில் 7 ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன. இலங்கைக்கும் – சீனாவுக்கும்; இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும். இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே […]

முக்கிய செய்திகள்

அநுர அரசு உள்ளுராட்சிமன்றத் தேரத்தலை பிற்போட முடியாது – மஹிந்த தேசப்பிரிய

  • Jan 13, 2025 - 11:31 AM
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp