முக்கிய செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

  • Jan 17, 2025 - 12:42 PM
  • 0 Comments

பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக விசாரணைகள் நடத்தப்பட்டு இதன் அடிப்படையில் மூன்று பணியாளர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஸானி ரோஹணதீரவின் பரிந்துரைக்கு அமைய குறித்த மூன்று பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அண்மையில் ஒப்புதல் வழங்கினார். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்ற […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ் சி.ஐ.டி.யில் ஆஜர்

  • Jan 17, 2025 - 12:30 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

முக்கிய செய்திகள்

கல்வியில்லாதவர்கள் இரண்டு கண்களும் இல்லாதவர்கள்- வடக்கு மாகாண ஆளுநர்

  • Jan 17, 2025 - 12:21 PM
  • 0 Comments

கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தேவையுடைய 217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் நேற்று (16) நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். […]

முக்கிய செய்திகள்

இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

  • Jan 17, 2025 - 11:43 AM
  • 0 Comments

ரஸ்சியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொடை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (17-01-2025) உத்தரவிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உதயங்க வீரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் விபத்து  சாரதி பலி 19 ரஸ்சியர்கள் காயம்

  • Jan 17, 2025 - 11:34 AM
  • 0 Comments

தெற்கு அதிவேக வீதியில் இன்று (17-01-2025) காலை ரஸ்சிய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் சொகுசு பேரூந்து சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியுடன்; மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பஸ் சாரதி உயிரிழந்துள்ள அதே வேளை சுமார் 19 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர். தங்காலை நோக்கிச் செல்லும் வீதியில் 138 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் அதிவேகமாக பயணித்த பேரூந்து பாரவூர்தியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் […]

முக்கிய செய்திகள்

வடக்கு மீனவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்- முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்

  • Jan 17, 2025 - 08:58 AM
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற அயலவர்கள் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் பேசாமை தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் சூட்டு சம்பவம்; பொலிஸாரே முழுப் பொறுப்பும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

  • Jan 17, 2025 - 08:48 AM
  • 0 Comments

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று 16ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள அதேவேளை இருவர் படுகாயமடைந்துள்ளனர் இதற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கையொன்றை விடுத்துள்ளாhர் ஆதில் அவர் தெரிவித்துள்ளதாவது மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகவும், காட்டு மிராண்டித்தனமான ஒரு விடயமாகும். இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் […]

முக்கிய செய்திகள்

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு எழுச்சி நாள்!

  • Jan 17, 2025 - 08:12 AM
  • 0 Comments

பொங்குதமிழ் நிகழ்வானது 17ஆம் திகதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இன்று (17-01-2025) நண்பகல் 12 மணியளவில் பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபியில் அனைத்து மாணவர்களும் உணர்வுடன் ஒன்று திரண்டு இந்த பொங்குதமிழ் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர்.    

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் பாஸ்கரன் மீதான தாக்குதல் சம்பவத்தில் கிளிக்கோடு விளையாடும் பொலிஸார்

  • Jan 17, 2025 - 07:57 AM
  • 0 Comments

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது வழக்கை பொலிஸார் திசை திருப்ப எடுத்த முயற்சியினை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கரனை தலைக்கவசத்தால் தலையில் தாக்கப்பட்டது. தொடர்பாகவும் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (15) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடத்தை பொலிசார் […]

இந்தியா சினிமா

தல அஜித்தின் விடாமுயற்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

  • Jan 16, 2025 - 10:43 PM
  • 0 Comments

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி.’ இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp