முக்கிய செய்திகள்

ஈழத்து நாடகத்தின் பெரு விருட்சமான குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்

  • Jan 17, 2025 - 09:11 PM
  • 0 Comments

ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன் குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார். குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நடிகராக நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப்போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக […]

முக்கிய செய்திகள்

– வடக்கில் காணாமல் போனவர்களினால் நாம் பாதிக்கப்ட்டதனைப் போல தெற்கிலும் சிங்கள தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக லீலாதேவி ஆனந்த நடராஜா ஜெனிவாவில் தெரிவிப்பு

  • Jan 17, 2025 - 09:02 PM
  • 0 Comments

நாட்டின் ஏனைய பாகங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தன் பின்னரேயே, எமது அன்புக்குரியவர்கள் காணாமல்போனதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும், மாறாக அவர்களும் போரில் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டோம் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிராகப் போராடும் குழுவினால் முதன்முறையாக ஏற்பாடு […]

முக்கிய செய்திகள்

கோட்டாவிடம் சீ.ஐ.டியினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்

  • Jan 17, 2025 - 08:32 PM
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (ஊஐனு) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ ஒன்றரை மணி நேரம் விசாரணைக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண முதலாளிகள் அவர்களின் ஊழியர்களை ஏமாற்றிவருகின்றார்கள் என முறைப்பாடு

  • Jan 17, 2025 - 07:08 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவது கூறியுள்ள போதும் அதற்கான பணம், சம்பளத்திலிருந்து பெறப்பட்டாலும், கட்டியதற்கான பற்றுச்சிட்டுகளோ, அல்லது வைப்பிலிட்டமைக்கான ஆதாரங்கள் வழங்காது ஊழியர்களை ஏமாற்றி அவர்களிடம் வேலை வாங்கி வருவதாக ஊழியர்கள் பலர் ஊழியர் சேமலாப நிதியம் உதவி பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்கள். குறித்த விடயங்கள் தொடர்பில் ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘யாழ்ப்பாணத்தில் நாம் ஒரு நிறுவனத்தில் பல […]

முக்கிய செய்திகள்

யாழ். பல்கலையில் 24 வது ஆண்டு பொங்குதமிழ் பிரகடனத்தின் எழுச்சிநாள் நிகழ்வுகள்

  • Jan 17, 2025 - 06:58 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெற்ற பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து, பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாணவர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என பொங்குதமிழ் பிரகடனம் இன்று (17.01.2001) செய்யப்பட்டமை […]

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லையெனில் அவர்களை காணாமலாக்கியது யாரென? – அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

  • Jan 17, 2025 - 03:27 PM
  • 0 Comments

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று கூறுவார்களாயின், அவர்களை காணாமலாக்கியது யார் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (17) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் […]

செய்திகள்

ஈழத் தமிழ் நாடக அரங்க ஆளுமைகளின் பெருநூல் தொகுப்பு

  • Jan 17, 2025 - 02:46 PM
  • 0 Comments

தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் நாடக அரங்கக் கலை ஆளுமைகளின் கலையுலக வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பாக ‘ஈழத்து நாடக அரங்க ஆளுமைகள்’ என்னும் பெருநூலினை ‘ சங்கநாதம்’ கலையகத்தினர் உருவாக்க உள்ளதனை அனைத்து கலைஞர்களுக்கும் தெரிவிக்கின்றனர் இந் நூல் ஈழத் தமிழ் நாடக அரங்கக் கலை வளர்ச்சிப்போக்கினச் சொல்லும் வரலாற்று ஆவணமாக இத்துறையில் ஈடுபட்டிருந்தோர் மற்றும் இயங்குவோரின் கலையுலக வாழ்கை வரலாற்றின் எழுத்துப் பதிவாகவே இடம்பெற இருப்பதை கவனத்திற் கொள்ளளாம். இந் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் தொடரூந்து; சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளது

  • Jan 17, 2025 - 01:37 PM
  • 0 Comments

தொடரூந்து; இயந்திர சாரதிகளின் பற்றாக்குறையினால் இன்று வெள்ளிக்கிழமை (17) பல தொடரூந்து; சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும், 42 சாரதிகள் மட்டுமே பணியில் உள்ளதாகவும் தொடரூந்து; திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக 68 தொடரூந்து; இயந்திர சாரதிகள் தேவை. எனினும் தற்போது 42 பேர் மட்டுமே பணிக்கு உள்ளனர். இவர்களில் 27 பேர் சுகயீன விடுமுறையில் உள்ளதாகவும் மேலும் 12 பேர் இரண்டு சேவைகளில் தங்களை ஈடுப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாக தொடரூந்து; சேவைகள் திணைக்களம் […]

இந்தியா

குளிர்பானத்தில் விசம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த காதலி

  • Jan 17, 2025 - 01:27 PM
  • 0 Comments

இந்தியாவின் கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியிலேயெ இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது சரோன் ராஜ் (வயது 23), பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார் இவர் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா (22) என்பவரை காதலித்து வந்தார். இவர் குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். காதலியின் வீட்டிற்கு காதலன் சென்ற போது காதலியும் அரவது பெற்றோரும் காதலன் குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்துள்ளனர் அதன் பின்னர் வயிற்றுவலி […]

முக்கிய செய்திகள்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளை சந்தித்தார்

  • Jan 17, 2025 - 12:54 PM
  • 0 Comments

மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடந்த 15 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி சந்தித்துள்ளார். இது குறித்து மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி எக்ஸ் தளத்தில், மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மிகச் சிறந்த உறவுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தொடர்ந்து அமைதி மற்றும் பாதுகாப்பு, […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp