முக்கிய செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே அரசின் நோக்கம் என பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Jan 19, 2025 - 07:37 PM
  • 0 Comments

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தை நேற்று (18) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், ஒரு நாட்டின் நீதி முறைமையில், நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதற்கான வசதிகளுக்காக செய்யப்படும் […]

செய்திகள்

தொடர் மழை காரணமாக கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

  • Jan 19, 2025 - 05:39 PM
  • 0 Comments

தற்போது நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை (25) நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

சீனாவுக்குள் இலங்கை சிக்கவில்லையென்கிறார் ஜனாதிபதி அநுர

  • Jan 19, 2025 - 05:12 PM
  • 0 Comments

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிராகரித்துள்ளார் உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம், வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக கருதுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் சின்ஹூவாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி […]

முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு வரைவுக்காக 7 பேரை நியமித்துள்ளதாக தமிழரசுக் கட்சி தெரிவிப்பு

  • Jan 19, 2025 - 04:31 PM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசு கட்சி இறுதியாக கோட்டாபய ராஜபகஸ அரசாங்கத்தின் நிபுணர் குழுவுக்கு சமர்ப்பித்த அரசியலமைப்பு வரைவினை அடிப்படையாகக் கொண்டு மேலதிக உள்ளடக்கங்களை ஆராய்வதற்காக கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, கட்சி மட்டத்திலும் துறைசார்ந்த நிபுணர்கள் மட்டத்திலும் ஆராய்ந்து மேம்பட்ட வரைவினை இறுதி செய்ததன் பின்னர் அடுத்தகட்டமாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தமிழ் அரசு கட்சி தயாராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

முக்கிய செய்திகள்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தினை அடைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்- யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

  • Jan 19, 2025 - 04:09 PM
  • 0 Comments

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும. அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள், ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்துப் பணியாற்ற வேண்டும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார் பொங்கு தமிழ் மக்கள் எழுச்சிப் பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு நாள் நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் சிறிய சூறாவளி – சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்தது

  • Jan 19, 2025 - 03:52 PM
  • 0 Comments

குருநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய சிறியளவிளான சூறாவளி காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த கட்டிடங்களையும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் , உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.    

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

  • Jan 19, 2025 - 03:37 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்; மழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு நவகரி பிரதேசத்தில் 92 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாகரை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின இதனால் மக்களின் இயல்பு […]

வினோத உலகம்

அண்டசராசரத்தின் கருந்துளைப் பற்றிய தகவல் ஒன்று

  • Jan 19, 2025 - 07:47 AM
  • 0 Comments

ஒரு கரண்டியில் சீனியை எடுத்தால் அதன் எடை சுமார் 15 தொடக்கம் 30 கிராம்தான் இருக்கும். ஒரு ஸ்பூன் கிரானைட் கல்லை எடுத்தால் அதன் எடை 250 nhடக்கம் 280 கிராம்தான் இருக்கும். சூரிய மண்டலத்திலிருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்துப்பார்த்தால், அதன் எடை 29 கிலோ கிராம் அளவு இருக்குமாம் அதே நேரம் நீயூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அளந்தால் அது எவரெஸ்ட் சிகரத்தை விட எடை கூடியதாக இருக்குமாம் ஆனால் […]

செய்திகள்

இன்றைய வானிலை அறிவித்தலின்படி வடகிழக்கடங்கலாக நாட்டில் மழை

  • Jan 19, 2025 - 07:05 AM
  • 0 Comments

வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வுகூறியுள்ளார் இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp