முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு அரச வீடு இல்லை மாதம் 30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்- ஜனாதிபதி

  • Jan 20, 2025 - 05:47 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தை அரசுடமையாக்குவோம். அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும். வேண்டுமாயின் மாத வாடகை செலுத்தி அவர் அங்கு வசிக்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை பகுதியில் நேற்று (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் […]

உலகம்

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது

  • Jan 19, 2025 - 10:36 PM
  • 0 Comments

கனடாவில் வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் தொழிற்சந்தையில் 91000 புதிய தொழில் வாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை 0.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம தெரிவித்துள்ளது எனினும், ஒப்பீட்டளவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2024ம் ஆண்டு ஆரம்பத்தை விடவும் வேலையற்றோர் எண்ணிக்கை வீதம் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சனத்தொகை அதிகரிப்பிற்கு நிகரான […]

உலகம் வினோத உலகம்

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா? தெரியாவிட்டால் வாசியுங்கள்

  • Jan 19, 2025 - 10:21 PM
  • 0 Comments

எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.. 1.சிங்கப்பூர் – 195 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 2. ஜப்பான் – 193 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 3. பின்லாந்து,பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின்- 192 நாடுகளுக்கு விசா தேவையில்லை . 4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே- 191 நாடுகளுக்கு விசா தேவையில்லை. […]

உலகம்

அமெரிக்காவில் நாளை ஜனாதிபதியாகும் டிரம்புக்கு எதிராக தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

  • Jan 19, 2025 - 10:13 PM
  • 0 Comments

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நாளை ஜனவரி 20 பதவியேற்கிறார். இந்நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து தலைநகர் வாஸிங்க்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். பீப்புள்ஸ் மார்ச் அமைப்புடன் இணைந்து சவுத் ஏசியன் சர்வைவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றன. வாஸஷிங்க்டன் டிசியில் மூன்று வௌ;வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே மூன்று போராட்டக்குழுவினர் இணைந்து கோசங்களை எழுப்பினர். நாங்கள் […]

சினிமா

தண்டேல் திரைப்படத்தின் பாடல் வெளியானது

  • Jan 19, 2025 - 10:04 PM
  • 0 Comments

திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ்இ தெலுங்குஇ மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது. படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் […]

முக்கிய செய்திகள்

நெல் களஞ்சியசாலைகளை இராணுவத்தினர் சுத்தப்படுத்துகின்றனர்

  • Jan 19, 2025 - 09:55 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆலோசனைக்கமைய நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் […]

முக்கிய செய்திகள்

21 ஆயிரம் பொலிஸாரே உள்ளனர், ஆகையால் அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்- ஜனாதிபதி

  • Jan 19, 2025 - 09:41 PM
  • 0 Comments

மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய, ஊழல் நிறைந்த அரசியலை ஒழிக்க பாடுபடுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். களுத்துறை, கட்டுகுருந்த, வெட்டுமகட பாகிஸ்தான் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். ‘நாங்கள் நவம்பர் 21 ஆம் தேதி அமைச்சரவையில் 21 அமைச்சர்களுடன் பதவிப் […]

முக்கிய செய்திகள்

யாழ். குருநகர் சிறிய சூறாவளி : 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்

  • Jan 19, 2025 - 08:32 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், குருநகர் ஜே 68 மற்றும் ஜே 69 கிராம சேவையாளர் பிரிவுகளில் 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மூவர் காயமடைந்துள்ளனர். அதேவேளை 49 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. சேத விபரங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் தொடர் மழையின் எதிரொலி குளங்கள் திறந்துவிடப்பட்டுள்ளது

  • Jan 19, 2025 - 08:06 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குளங்கள் நிரம்பி நீர்மட்டம் அதிகரித்து வான்பாய்வதால் ஆற்றை அண்டிய தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் இன்று (19) மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் […]

செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

  • Jan 19, 2025 - 07:58 PM
  • 0 Comments

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் இன்று (19) தனது 75ஆவது வயதில் காலமானார். இவர் ‘ராவய’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராக கடமையாற்றினார். 1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான வர்ணனைக்கு பெயர் பெற்ற இவர், இலங்கை ஊடகங்களில் ஒரு முக்கிய நபராக தனது இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான அவரது அர்ப்பணிப்பு அவருக்கு பரவலான மரியாதையைப் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp