முக்கிய செய்திகள்

அரசு சொல்லும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் மகிந்த அரச வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் – அமைச்சர் நளிந்த

  • Jan 22, 2025 - 06:23 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸஷ நாம் கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதே உசிதமானது. அவருக்கு மாத்திரமின்றி ஏனைய சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இது பொறுந்தும். விரைவில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சகல முன்னாள் ஜனாதிபதிகளதும் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், […]

முக்கிய செய்திகள்

கிளீன் சிறிலங்காவால் நாறுகின்றது பாராளுமன்றம்

  • Jan 22, 2025 - 06:06 AM
  • 0 Comments

தாஜுதீனையும் லசந்த விக்கிரமதுங்கவையும் கொலை செய்தது நாமல் இராஜபக்ஸ என அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் கிளீன் சிறிலங்கா திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அரசாங்கத்துடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் நாமலுக்குமிடையில் இடையில் கடும் தொனிளிலான வாக்குவாதம் நடைப்பபெற்றது பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நாமல் ராஜபக்ஸ உரையாற்றும்போது தெரிவித்த விடயங்கள் தொடர்பிலே வாக்குவாதம் ஏற்பட்டது. சுபையில் […]

செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஆதரவளிக்கின்றது ஜேவிபி அரசாங்கம்

  • Jan 22, 2025 - 05:42 AM
  • 0 Comments

நாடாளுமன்ற ளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தம் வெளியிட்டுள்ள பிமல் ரத்நாயக்க இந்த சம்பவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்தள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சபை முதல்வரும், சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார் பாராளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தார். இதற்கு […]

முக்கிய செய்திகள்

பாராளுமன்ற விவாதம் எதற்காக என் புரிந்துகொள்ளாதவர்களே இப்போது எதிர்க்கட்சியாக இருக்கின்றார்கள்- பிரதமர் ஹரினி

  • Jan 22, 2025 - 05:28 AM
  • 0 Comments

மக்களை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் முன்னர் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை விளங்கிக்கொள்ள முடியாதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். Clean Sri Lanka  வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் விவாதத்தின் முதல் நாளில் (21) கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் பாராளுமன்றம் கூடிய நாளிலிருந்து இந்த எதிர்க்கட்சியின் பொறுப்புக்கள் என்ன என்றும், இந்த எதிர்க்கட்சி எந்த […]

முக்கிய செய்திகள்

சட்டத்தரணி சுமந்திரனை விசாரணைக்குட்படுத்துமாறு சிறிதரன் எம்பி பாராளுமன்றத்தில் முழக்கம்

  • Jan 22, 2025 - 05:03 AM
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டை பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளார் என்ற தொனிப்பிட சிறிதரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி போராடுவதற்காக பாராளுமன்றம் அனுப்பபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனக்கு சுமந்திரனிடமிருந்து நீதி வேண்டி நேற்று பாராளுமன்றத்pல் சபாநாயகரிடம் விநயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் […]

செய்திகள்

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் 11971 பேர் பாதிப்பு முகாம்களில் 921 பேர் தஞ்சம்

  • Jan 21, 2025 - 07:35 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளனர். 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மாவட்டத்திற்குள்ளேயே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை தொடரூந்து சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ம் திதி ஆரம்பித்த கன மழையினால் மாவட்டதிலுள்ள பெரிய குளமான நிரம்பியதையடுத்து தேவைக்கு எற்றால் போல வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது. அத்துடன் 3037 குடும்பங்கனைச் […]

செய்திகள்

இராணுவத்தினரும் பொலிஸாருமே துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்- அமைச்சர் ஆனந்த விஜேபால

  • Jan 21, 2025 - 07:15 PM
  • 0 Comments

அண்மைய காலங்களில் நாடெங்கும் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில்; ஒரு இராணுவ மேஜர், உட்பட 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் குற்றச் செயல்கள் தொடர்பில் நீண்டநேரம் விளக்கமளித்த அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மக்கள […]

முக்கிய செய்திகள்

திருகோணமலையில் அம்பியூலன்ஸ் விபத்து இரண்டு பேர் காயம்

  • Jan 21, 2025 - 06:47 PM
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாலத்தோப்பூர் பகுதியில், அம்பியூலன்ஸ் வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அம்பியூலன்ஸ் அருகில் உள்ள வாய்க்காலினுள் வீழ்ந்துள்ள அதே வேளை அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து இனறு; (21) இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்  

முக்கிய செய்திகள்

டிஜிட்டல் பிளாட்போம் எம்பி. அர்ச்சுனா கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

  • Jan 21, 2025 - 06:30 PM
  • 0 Comments

யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம் ரம்பாவ பகுதியில் இன்றைய தினம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார். இதன்போது,போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர். பின்னர், அர்ச்சுனா […]

செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் கைது அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில்

  • Jan 21, 2025 - 04:18 PM
  • 0 Comments

அரச காணிக்கான போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp