முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு பொலிஸ் ஆணைக்குழு நேற்று வகுப்பெடுத்தது

  • Jan 23, 2025 - 09:00 AM
  • 0 Comments

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸாரின் சில இடமாற்றங்களைச் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கம் கொடுத்துள்ளது […]

விளையாட்டு

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் லக்ஸியா சென் 2வது சுற்றுக்கு தகுதி

  • Jan 23, 2025 - 08:46 AM
  • 0 Comments

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஸியா சென், ஜப்பானின் டகுமா ஒபயாஸியுடன் உடன் மோதினார். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஸியா சென் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்

உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை இஸ்ரேல் போட்டுதள்ளியது?

  • Jan 23, 2025 - 08:27 AM
  • 0 Comments

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கிடையே, இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி; சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஸேக் முகமது அலி ஹமாதி. அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து […]

இந்தியா

சீமானுக்கு எதிராக போராடிவர்களில் 878 பேர் மீது வழக்குப் பதிவு

  • Jan 23, 2025 - 08:18 AM
  • 0 Comments

தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஸ்ணன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே அறிவித்தப்படி சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை […]

உலகம்

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ – 31 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றம்

  • Jan 23, 2025 - 08:10 AM
  • 0 Comments

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாக பரவிய காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் சுடர்விட்டு எரிந்தது பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை […]

இந்தியா

மனைவியை கொலை செய்து அவயங்களை வெட்டி குக்கரில் வேக வைத்த கணவன் கைது

  • Jan 23, 2025 - 08:02 AM
  • 0 Comments

ஐதராபாத்தில் மனைவியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 35 வயதுடைய தனது மகள் ஒருவாரமாக காணவில்லை என்று பெற்றோர் போலீசில் முறைப்பாடு செய்தனர் அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய போலீசாருக்கு பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று கணவனுக்கும் […]

முக்கிய செய்திகள்

அம்பாறை ,மட்டக்களப்பில் அடிக்கடியும் வடக்கு, திருமலையில் இடைக்கிடையும் மழை

  • Jan 23, 2025 - 07:15 AM
  • 0 Comments

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார் இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் […]

முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் நிட்சயம் நீக்கப்படும் – பிரதி அமைச்சர் சுனில் வடகல

  • Jan 23, 2025 - 07:04 AM
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியதாக பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார் இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் […]

முக்கிய செய்திகள்

சமஸ்டியே சரியான தீர்வென தமிழ்த்தேசிய அரசியல் கட்சியினர் கனடாவிடம் கூட்டாகத் தெரிவிப்பு

  • Jan 23, 2025 - 06:53 AM
  • 0 Comments

ஒற்றையாட்சி முறைமையே இனப்பிரச்சினையாக அடிப்படைக்காரணமாக விளங்குவதால் தம்மால் ஒருபோதும் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாதென கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனிடம் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர் தமிழர் தரப்பு சமஸ்டித்தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வலுவான அழுத்தங்களை கனடா பிரயோகிக்கவேண்டும் எனக் அவர்கள் கனடாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் சமஸ்டி முறைமை தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவசியமான நிதியளிப்பையும் கனடாவிடம் கேட்பதற்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மறந்துவிடவில்லை இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ […]

முக்கிய செய்திகள்

யாழ். மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் தகுதியற்றவர்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Jan 23, 2025 - 06:31 AM
  • 0 Comments

யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபரொருவர் நியமிக்கப்பட்டார். நியமனம் செய்யப்பட்ட குறித்த அதிபர் சேவைக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கின்றார். இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலையீட்டால் அவரின் பதவி தடை செய்யப்பட்டது. தற்போது பதில் அதிபராக இருப்பவர் முற்றிலும் தகுதியற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அரசியல் தலையீடுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார். இப்போது அவர் கல்வி அமைச்சராக இருக்கின்றார். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp