அமெரிக்க ஜனாதிபதியாக 2020-ம் ஆண்டில் டிரம்ப் தெரிவாகியிருந்தால் உக்ரைன் போர் நடந்திராது – ரஸ்சிய ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார். அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். உக்ரைன் மீதான ரஸ்சியாவின் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் டிரம்ப், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போர் ஏற்பட்டிருக்காது. இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்தவேண்டும். உடனடியாக […]









