முக்கிய செய்திகள்

அரசாங்கம் அலாக்காக அடித்தது பெல்டி அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை- அரசாங்கம்

  • Jan 25, 2025 - 06:00 PM
  • 0 Comments

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக அமைச்சரவை முடிவெடுக்கவிலலையென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஆதானி காற்றாலை திட்டத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டணங்களை மட்டுமே மறு ஆய்வு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார் ஆதானி திட்டம் தொடர்பாக தற்போது நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்தும் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். […]

முக்கிய செய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உலகலாவிய பணி ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

  • Jan 25, 2025 - 05:46 PM
  • 0 Comments

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உலகலாவிய பணி ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பை மற்றும் பாதணிகள் இன்று சனிக்கிழமை (25) திருகோணமலையில் உள்ள ஜூப்லி மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண நிருவாக சபை பணிப்பாளர் யேசுதாசன் ரொகான்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சுமார் 150 மாணவ மாணவிகளுக்கான பாடசாலை உபகரணங்கள் நன்கொடைகளாக வழங்கப்பட்டன. ஆத்துடன் வாழும் போது வாழ்த்துவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் பல சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் பொன்னாடை […]

முக்கிய செய்திகள்

இளங்கலைஞர் மன்ற கட்டிடம் புனரமைக்கப்பட்டு மீள திறந்துவைக்கப்பட்டுள்ளது

  • Jan 25, 2025 - 05:27 PM
  • 0 Comments

வடக்கு மாகாண அவைத்தலைவரும் இளங்கலைஞர் மன்றத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துக்ககொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திறந்துவைத்தார். கௌரவ விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் மன்றக் காப்பாளருமான செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனும் ஈழத்தின் சிரேஸ்ட இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணனும் கலந்துகொண்டணர். இன்று சனிக்கிழமை (25) முதல் திங்கட்கிழமை (27) வரை காலை மாலை நிகழ்வுகளாக நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

ஸ்கானர் இயந்திரத்தின் உதவியுடன் கிளிநொச்சியில் புதையல் தோண்டிய 10 பேர்; கைது

  • Jan 25, 2025 - 05:14 PM
  • 0 Comments

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு தயாரான நிலையில் இருந்த 10 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைபபின் போது கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட பயன்படுத்திய் நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நிலத்தினை ஏறத்தாழ 1000 அடி ஸ்கான் செய்யக்கூடிய ஸ்கானர் […]

முக்கிய செய்திகள்

யாழ் இந்துக் கல்லூரியின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான டெங்கு விழிப்புணர்வு ஆவணப்படம் வெளியிடப்பட்டது

  • Jan 25, 2025 - 04:59 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தின் தயாரிப்பு மற்றும் ஒளிப்படமாக்கலில் உருவான டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ஆவணக் குறும்படம் கடந்த திங்கட்கிழமை (20) வெளியிடப்பட்டது. யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக […]

முக்கிய செய்திகள்

அமெரிக்க நீதிமன்றம் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்தது

  • Jan 25, 2025 - 08:39 AM
  • 0 Comments

அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார் இந்த உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ம் திகதி முதல் அமலுக்கு வரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறுவை சிகிச்சை வழியாக […]

முக்கிய செய்திகள்

மன்னார் நீதிமன்ற இரட்டை கொலைபற்றிய மற்றொரு திடுக்கிடும் தகவல்

  • Jan 25, 2025 - 06:47 AM
  • 0 Comments

மன்னார் நீதிமன்ற வாசலில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர் இந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர் இராணுவ புலனாய்வாளர்கள் என அiடாளம் காணப்பட்ட நிலையில் மேலும் ஒரு சந்தேக நபரை அண்மையில் பொலிஸார் கைது செய்தனர். […]

முக்கிய செய்திகள்

வடக்கிலும் கிழக்கின் மட்டக்களப்பு, திருகோணமலையிலும் மழை பெய்யும் சாத்தியம்

  • Jan 25, 2025 - 06:30 AM
  • 0 Comments

இன்றைய (25-01-2025) வானிலை ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் […]

இந்தியா

ஆமைக்கறி புகழ் சீமான் உண்மையை எதிர்கொள்ள முடியாது பிதற்றிவருகின்றார்

  • Jan 25, 2025 - 06:20 AM
  • 0 Comments

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் படம் போலியானது, அதை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் புயலைக் தெரிவித்திருந்தார் சமீப காலமாக பெரியார் குறித்த எதிர்மறையான கருத்துக்களை கூறி வரும் சீமானின் சர்ச்சை லிஸ்டில் இந்த எடிட்டிங் விவகாரமும் சேர்ந்துள்ளது. பிரபாகரனை சந்தித்தது, அவருடன் பேசியது குறித்த கதைகளை பல முறை மேடைகளில் சீமான் பேசி வந்துள்ளார். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp