முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸவை 2 வாரத்துக்குள் கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது – மஹிந்தவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே

  • Jan 28, 2025 - 05:24 AM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை இன்னும் இரு வாரங்களில் கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது ராஜபக்ஸ குடும்பத்தினரை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கும் வகையில் அரசியல் பழிவாங்கல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யோசித்த ராஜபக்ஸவை நிதி சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் […]

முக்கிய செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கேத்தரினுக்குமிடையில் கலந்துரையாடல்

  • Jan 27, 2025 - 08:42 PM
  • 0 Comments

இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட், இன்று (27) பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில், வறுமை ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி மற்றும் பொருளாதார சமநிலை ஆகியவை உள்ளடங்கலாக அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமை திட்டங்கள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலிற்கான முயற்சிகள் மற்றும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சி திட்டம் பற்றிய கருத்து பரிமாற்றமும் தேசிய முன்னேற்றத்திற்கான வழிநடத்தல்களின் போது சமூக பொறுப்புகள் மற்றும் […]

முக்கிய செய்திகள்

நாளை முதல் வடக்கு உட்பட சில நாட்களுக்கு மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

  • Jan 27, 2025 - 07:33 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (28-01-2025) செவ்வாய்க்கிழமை தொடக்கம் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது; ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் […]

முக்கிய செய்திகள்

ரமழான் மாதத்தையிட்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

  • Jan 27, 2025 - 07:14 PM
  • 0 Comments

புனித ரமழான் மாதத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இந்த பேரீச்சம் பழங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.  

முக்கிய செய்திகள்

தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படுமென கொள்கலன் லொறி சாரதிகள் சங்கம் எச்செரிக்கை

  • Jan 27, 2025 - 06:59 PM
  • 0 Comments

துறைமுகத்தில் கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதங்கள் இந்த வாரத்திற்குள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக கொள்கலன் லொறி சாரதிகள் சங்கம் எச்சரித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கொள்கலன் லொறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள, கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதங்கள் கொள்கலன் லொறி சாரதிகளை கடுமையாக சிரமப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாதது உட்பட லொறி சாரதிகள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த வாரத்திற்குள் இந்த தாமதங்கள் […]

முக்கிய செய்திகள்

தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

  • Jan 27, 2025 - 06:20 PM
  • 0 Comments

தமிழரசு கட்சியின் முடிவுக்காக, இன்று திங்கட்கிழமை (27) நடைபெற விருந்த தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஏற்பாட்டில், தமிழ் தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட இருந்தது. இந்நிலையில் தமிழரசு கட்சி தமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை என தெரிவித்தது. அதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் ஆகியோர், தமிழரசு […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் தூக்கிலிட்டு நாயை கொன்ற பெண் கைது

  • Jan 27, 2025 - 06:07 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (25-01-2025) நாயொன்று மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. நாய் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன் அதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இளைஞரின் சடலம் மீட்பு

  • Jan 27, 2025 - 05:51 PM
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று திங்கட்கிழமை (27) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

திருகோணமலை கடலில் மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகித்துள்ளனர்

  • Jan 27, 2025 - 05:28 PM
  • 0 Comments

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் கடலுக்கு கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவரின் சடலம் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் இன்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார் நேற்று (26-01-2025) ஞாயிற்றுக்கிழமை பகல் வள்ளமொன்றில் ; மீன்பிடிக்கச் சென்ற இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த 53 […]

முக்கிய செய்திகள்

சிவப்பு அரிசி மற்றும் தேங்காய் விலை தொடர்பில் என்ன நடைபெறுகின்றதென பொறுத்திருந்து பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

  • Jan 27, 2025 - 04:57 PM
  • 0 Comments

காலி, கட்டுஹெம்பலாவில் உள்ள மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் வீட்டிற்கு நேற்று (26) காலை சென்றிருந்த போதே அவர் மேலுள்ளவாறு தெரிவித்துள்ளார். அங்கு மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு குறித்து கவலைகளை தெரிவித்ததோடு, ஒரு தேங்காய் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரணில் இவ்வாறு தெரிவித்த போது கடந்த முறை 10 கிலோ சிவப்பு அரிசியை வழங்கியவர் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp