முக்கிய செய்திகள்

கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது

  • Jan 30, 2025 - 06:46 PM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் விபத்து குடும்பஸ்தர் உயிரிழந்தார்

  • Jan 30, 2025 - 06:31 PM
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தினையடுத்து உழவி இயந்திரத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

  • Jan 30, 2025 - 06:22 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் செய்யவுள்ள நிலையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டனர் இந்நிலையில் நேற்றுபுதன்கிழமைஇ நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்இ வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன்இ போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன்இ தற்காலிக சுகாதார உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் எஸ்.ஜெஸ்மின் ஆகிய ஐவரின் பெயரை குறிப்பிட்டு இ நாளைய தினம் யாழ்ப்பாண […]

முக்கிய செய்திகள்

இந்திய துணைத் தூதர் சாய் முரளி மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

  • Jan 30, 2025 - 06:06 PM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சோ. சேனாதிராஜாவின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.        

இந்தியா

தாயுடன் தகாத உறவு வைத்த ஆண் ஒருவரை கொலை செய்து குடலை உருவி துண்டு துண்டாக வெட்டிய மகன்கள்

  • Jan 30, 2025 - 09:05 AM
  • 0 Comments

தாய் உடன் தகாத உறவை வைத்திருந்த கொத்தனாரை, அந்த பெண்ணின் இரண்டு மகன்கள் கத்தியால் குத்தி, குடலை உருவி எடுத்து வானத்தை நோக்கி வீசியதுடன், துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கிராமம் ஒன்றில் விதவை தாயும் அவரது மகன்களான சஞ்சய் தாகூர் (வயது 27), ஜெயேஸ் தாகூர் (23) ஆகிய இரண்டு மகன்கள் வசித்து வந்துள்ளனர். இந்த பெண்ணிற்கு மேசன் வேலை செய்து வந்த 53 வயதான ரடன்ஜி […]

உலகம் முக்கிய செய்திகள்

சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அகமது அல் ஸரா தெரிவு

  • Jan 30, 2025 - 08:25 AM
  • 0 Comments

சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஜரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கை துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ஹசன் அப்துல் கானி அறிவித்துள்ளார். நாட்டில் உள்ள ஆயுதமேந்திய பிரிவுகள் கலைக்கப்படுவதையும் அவர் அறிவித்தார். அவை அரசு நிறுவனங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும், புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்படும் வரை தற்காலிக சட்டமன்ற குழுவை அமைக்க அல் ஸராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அகமது அல் […]

இந்தியா

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு இம்முறை 2500 பேர் செல்ல முடிவு

  • Jan 30, 2025 - 08:11 AM
  • 0 Comments

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது. திருவிழா அழைப்பிதழானது யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் மூலம் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, ராமேசுவரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு […]

இந்தியா

மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசைக்கு புனித நீராட சென்றவர்களில் 30 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம்

  • Jan 30, 2025 - 07:46 AM
  • 0 Comments

மௌனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் நேற்று (29-01-2025) அதிகாலை மகா கும்பமேளாவின் சங்கம் பகுதியில் குவிந்தனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் வருகை தந்ததை அடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர். நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்த நிலையில், பல மணி நேரம் கழித்து, மகா கும்பமேளாவின் டி.ஐ.ஜி. வைபவ் கிருஸ்ணா உயிரிழந்தவர்களின் விவரங்களை தெரிவித்தார். ‘ஒரே நேரத்தில் கூட்டம் […]

முக்கிய செய்திகள்

தண்ணியில் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்றப்பட்டவர் மீண்டும் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்

  • Jan 30, 2025 - 07:16 AM
  • 0 Comments

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை அங்கிருந்த இளைஞர்கள் காப்பாற்றி மீட்டு வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர் 33 வயதுடைய இளம் குடும்பஸ்த்தரான கணேசமூர்த்தி ரமேஸ் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் நேற்று (29) ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணேசமூர்த்தி ரமேஸ் பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்கள் மீண்டும் காப்பாற்றும் நோக்கில் […]

முக்கிய செய்திகள்

டீஜிட்டல் ட்ரென்ட எம்பி அர்ச்சுனா 2 லட்சம் ரூபா பிணையில் விடுதலை

  • Jan 30, 2025 - 07:04 AM
  • 0 Comments

நேற்று மாலை (29-01-2025) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 20 ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp