முக்கிய செய்திகள்

காணிகளை விடுவிப்பதாக வாயால் வடை சுடுகின்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

  • Jan 31, 2025 - 08:51 PM
  • 0 Comments

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அதே வேளை அபிவிருத்தியில் பின்னடைவை சந்தித்துள்ள வடகிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினது நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் பொருளாதார ரீதியில் கிராமங்களை வலுப்பெற செய்வதே எமது நோக்கம் என ஜனாதிபதி அனுர குமார மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் (31) விஜயம் செய்த ஜனாதிபதி, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாhர்;. அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட […]

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா என்ற நீண்ட சரித்திரம் சரிந்தது

  • Jan 31, 2025 - 08:43 AM
  • 0 Comments

மாவை சேனாதிராசா 1942 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரத்தில் பிறந்தார். மாவையண்ண மாவை மாவை சேனாதிராஜா என அவர் அழைக்கப்பட்டாலும் அவரின் இயற் பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா என்பதாகும் ஆகும் இவர் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மாவை சேனாதிராஜா 1961 ம் ஆண்டு நமைப்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றி […]

முக்கிய செய்திகள்

கொள்கலன்கள் விடுவிப்பில் மோசடி இடம்பெறவில்லையென்கிறார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

  • Jan 31, 2025 - 06:37 AM
  • 0 Comments

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் உரிய சாட்சியங்களுடன் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய வேண்டுமே தவிர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் பயனில்லையென்கிறார் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சுங்கத்திணைக்களமும் தெளிவுப்படுத்தியுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் […]

முக்கிய செய்திகள்

ஊழல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதியென்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க

  • Jan 31, 2025 - 06:15 AM
  • 0 Comments

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஊழல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் முன் நிறுத்தப்படுவார்கள் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று (30-01-2025 ) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மகிந்தவை பாதுகாக்க வேண்டும்- எஸ்.பி.திசாநாயக்க

  • Jan 31, 2025 - 06:04 AM
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டாலும் அதன் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. காலி முகத்திடல் அரகலய பூமியில் புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (30-01-2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் வெகுவிரைவில் தீர்வு […]

உலகம் முக்கிய செய்திகள்

குடிப்பதற்காக விற்கப்படும் புலியின் 250 கிராம் சிறுநீரின் விலை 1800 இலங்கை ரூபாவாகும்

  • Jan 30, 2025 - 08:46 PM
  • 0 Comments

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை அரச அனுமதியுடன் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு மிருகக்காட்சி சாலையை பார்வையிட சென்ற ஒருவர், புலியின் சிறுநீரகத்தில் மருத்துவ குணம் உள்ளதாகவும், இதை பயன்படுத்தினால் முடக்கு வாத நோயை குணப்படுத்த முடியும் என்று கூறி 250 கிராம் சிறுநீர் பாட்டிலின் விலை சுமார் 50 யுவான் இலங்கை மதிப்பில் ரூ.1800)-க்கு விற்கப்படுவதாக சமூக […]

உலகம் முக்கிய செய்திகள்

துபாயில் 10 நட்சத்திர ஓட்டலில் ஒரு இரவு தங்க 30 லட்சம் ரூபா அறவிடப்படுகின்றது

  • Jan 30, 2025 - 08:28 PM
  • 0 Comments

உலகின் ஒரே 10 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல் என அழைக்கப்படுவது துபாயில் அமைந்துள்ள ஜூமேரா புர்ஜ் அல் அரப் ஓட்டலாகும். துபாயில் ஏற்கனவே புர்ஜ் கலிபா போன்ற உயரமான கட்டிடங்கள் உள்ள நிலையில், அங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவில் இந்த ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓட்டலின் உயரம் 321 மீட்டர் ஆகும். இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கு 30 லட்சம் (இலங்கை ரூபாயில்) செலவாகும். இங்கு வரும் விருந்தினர்களுக்கு பல சொகுசு விடுதிகள், […]

உலகம்

ஸ்வீடனில் குரானை எரித்தவர் சுட்டுக் கொலை கொலை செய்யப்பட்டுள்ளார்

  • Jan 30, 2025 - 08:11 PM
  • 0 Comments

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 2023-ம் ஆண்டில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் ஒரு எதிர்ப்பாளர் குரானை எரித்துள்ளார். இத்தகைய செயலை அனுமதித்ததற்காக ஸ்வீடனை பல இஸ்லாமிய நாடுகள் கடுமையாக விமர்சித்தன. ஈராக்கில் பிறந்த அகதியான சல்வான் மோமிகா என்பவர் முஸ்லிம்களின் புனித நூலை எரித்தார். இந்தச் செயலைத் தொடர்ந்து ஒரு இனம் அல்லது தேசியக் குழுவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஸ்வீடனில் மீண்டும் மீண்டும் […]

முக்கிய செய்திகள்

மாவையின கனவை அரசு தமிழ் மக்களுக்காக நிறைவேற்றும் – அமைச்சர் சந்திரசேகர்

  • Jan 30, 2025 - 07:11 PM
  • 0 Comments

அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி […]

முக்கிய செய்திகள்

கண்டி ஹோட்டல் ஒன்றில் மதுபானத்தை எடுத்துச்சென்று குடித்த குரங்குகள்!

  • Jan 30, 2025 - 06:53 PM
  • 0 Comments

கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்த குரங்கு கூட்டம் ஒன்று அங்கிருந்த மதுபான போத்தல்கள் மற்றும் சிப்ஸ், முறுக்கு அடங்கிய உணவு பொதிகளை எடுத்துச் சென்றுள்ளது. மதுபான போத்தல்களை எடுத்துச் சென்ற குரங்குகள் மதுபானத்தை அருந்தும் காட்சிகள் ஹோட்டலுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன. அந்த குரங்குகள் சிப்ஸ், முறுக்கு அடங்கிய உணவு பொதிகளை உண்ணும் காட்சிகளும் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இவ்வாறான விடங்களுக்கு அதிகம் முகங்கொடுப்பதாக […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp