முக்கிய செய்திகள்

ரோகிங்யா அகதிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அனுப்பி வைக்கமுடியாதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

  • Feb 1, 2025 - 07:00 PM
  • 0 Comments

மனித சமூகம் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக கூடிய நாட்டிற்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தடுத்துவைக்கபட்டுள்ள ரோகிங்யா அகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார் என கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பின் […]

முக்கிய செய்திகள்

வடக்கு ஆளுநரை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சந்தித்தார்

  • Feb 1, 2025 - 06:49 PM
  • 0 Comments

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்குமிடையில் நேற்று வெள்ளிக்கிழமை (31-02-2025) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் விவசாயிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வெள்ள அனர்த்தம்காரணமாக ஏற்பட்டுள்ள நெல் அழிவுகளுக்குரிய இழப்பிடுகள் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படுதல், நெல்லுக்கான விலையை நிர்ணயித்தல், நெல் சந்தைப்படுத்தலில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்தல், காட்டுயானைகளால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியவிடயங்கள் தொடர்பாக […]

முக்கிய செய்திகள்

போதை பொருள் விற்பனையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் நல்லுறவு உள்ளதென அநுர அரசு ஒப்புதல்

  • Feb 1, 2025 - 06:28 PM
  • 0 Comments

பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் போதை பொருளை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நிலையில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். சட்டவிரோத போதை பொருள் பாவனயை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொலிசார் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் […]

முக்கிய செய்திகள்

மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு சுமந்திரன், அஞ்சலி செலுத்தினார்

  • Feb 1, 2025 - 06:07 PM
  • 0 Comments

அமரர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். கொழும்பிலிருந்து சுமந்திரன் யாழ் நோக்கி வரும் போது மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து வந்து மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.    

உலகம் முக்கிய செய்திகள்

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலா தொற்று

  • Feb 1, 2025 - 07:25 AM
  • 0 Comments

ஆப்பிரிக்க நாட்டின் எபோலா ஆற்றங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1976-ம் ஆண்டு எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 2014 முதல் 2016-ம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11 ஆயிரம் பேர் இறந்தனர். பின்னர் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு […]

உலகம் முக்கிய செய்திகள்

பல நாடுகளை வென்ற மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்

  • Feb 1, 2025 - 07:01 AM
  • 0 Comments

மகா அலெக்சாண்டர், பல நாடுகளை வென்று தனது நாட்டிற்குத் திரும்பியபோது, அவர் நோய்வாய்ப்பட்டார், அது அவரை மரணப் படுக்கைக்கு அழைத்துச் சென்றது. அவர் தனது தளபதிகளைக் கூட்டி, ‘நான் விரைவில் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன், எனக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன, தயவுசெய்து அவற்றைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்’ என்று கூறினார். இந்த கடைசி விருப்பங்களுக்கு கட்டுப்படுமாறு ராஜா தனது தளபதியிடம் கேட்டார்: 1) ‘என் மருத்துவர்கள் மட்டுமே எனது சவப்பெட்டியை சுமக்க வேண்டும்’ என்றார். 2) ‘எனது சவப்பெட்டியை […]

செய்திகள் முக்கிய செய்திகள்

இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் விசாவுக்கு இலங்கை கோரிக்கை

  • Feb 1, 2025 - 06:04 AM
  • 0 Comments

இலங்கையில் பெறும் சாரதி அனுமதிபத்திரத்தினை இத்தாலியில் அனுமதிக்கும் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவும் இத்தாலியில் தொழில் விசா பிரச்சினையை தீர்த்து இலங்கையருக்கு இத்தாலியில் வேலை வாய்ப்பினை பெறுவது தொடர்பில் விஜித்த ஹேரத் இத்தாலி தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார். அமைச்சர் விஜித்த ஹேரத்திற்கும் இலங்கைக்கான இத்தாலி நாட்டு தூதுதவர் டெமியானோ பிரென்கோவக் ஆகியோருக்கிடையில் அண்மையில் வெளிவிவகார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது இத்தாலியில் தொழில் விசா பெற்றுக்கொள்வதை இடை நிறுத்தியுள்ளமை தொடர்பில் அமைச்சர் கேட்டறிந்தபோது, இத்தாலி அரசாங்கம் பல நாடுகளுக்கு தொழில் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் சுகாதார சீர்கேட்டால் சிசு மரண வீதம்,எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு- கபில ஜயரத்தன

  • Feb 1, 2025 - 05:40 AM
  • 0 Comments

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளது. வருடம் தோறும் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் கபில ஜயரத்தன தெரிவித்தார். இலங்கை மருத்துவ சங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்போது வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ள அதே வேளை வருடாந்தம் […]

முக்கிய செய்திகள்

அமரர் மாவை சேனாதிராஜாவுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி

  • Jan 31, 2025 - 09:41 PM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவுக்கு முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான சுற்றுவட்டப் பாதையில் இன்று (31) அஞ்சலி செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு பிரதேச இலங்கை தமிழரசுக் கட்சித் தொண்டர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார். துக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் முல்லைத்தீவு பிரதான சுற்றுவட்டப்பாதை வளாகம் கறுப்பு மற்றும் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு மாவை சேனாதிராஜாவின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் […]

முக்கிய செய்திகள்

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் தீய பொருட்கள் இல்லையென எவ்வாறு அரசு சொல்ல முடியுமென எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்

  • Jan 31, 2025 - 09:17 PM
  • 0 Comments

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்nருந்த 80 சதவீத கொள்கலன்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார் அத்துடன் இது நாட்டின் வரி வருமானத்தில் பாரிய இழப்பை ஏற்பட்டுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக எழுந்துள்ள துறைமுக கொள்கலன் நெரிசல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (31) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp