முக்கிய செய்திகள்

சிவபூமி திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

  • Feb 2, 2025 - 06:02 PM
  • 0 Comments

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளர்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  

முக்கிய செய்திகள்

நீதித்துறை வாழ்க்கை நிறைவுறாது முடிவுறுகிறது : மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆதங்கம்

  • Feb 2, 2025 - 05:57 PM
  • 0 Comments

வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று சனிக்கிழமை (01-02-2025 ) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் நீதவானாக 9 ஆண்டுகள், வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 3 ஆண்டுகள் கடமை புரிந்துள்ளேன். திருகோணமலையில் 2008- 2010 இல் மேல் நீதிமன்ற […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மாவை கண் கலங்கியதாக றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

  • Feb 2, 2025 - 07:37 AM
  • 0 Comments

இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தவர் மாவை சேனாதிராஜா மூத்த அரசியல்வாதியான அவரின் மறைவு ஆழ்ந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தைகளை விரைவில் நிறைவு செய்யவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்

  • Feb 2, 2025 - 07:23 AM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்துக்குள் நிறைவுக்கு வரவுள்ளது உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முக்கியத்துவமளித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு இருகட்சி தலைவர்களும் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இரு கட்சிகளினதும் இணைவு எவ்வாறானதாக இருக்கும் என்பதை தற்போது; குறிப்பிட முடியாது என தெரிவித்த அவர் […]

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா சமாதானத்தை எப்போதும் விரும்பியதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

  • Feb 2, 2025 - 07:07 AM
  • 0 Comments

எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் சமாதானத்துக்கான கரங்கள் நீட்டப்பட்ட போதெல்லாம் மாவை சேனாதிராஜா சமாதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸ தெரிவித்துள்ளார். மாவை. சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான உறுப்பு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மரண செய்தி அதிர்ச்சியளித்தது எமக்கு எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் […]

முக்கிய செய்திகள்

சோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் அபாயகரமானவையென்கிறார் நளின் பண்டார

  • Feb 2, 2025 - 06:48 AM
  • 0 Comments

இலங்கை போக்குவரத்துசபையின் தலைவரை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அச்சுறுத்தியதன் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளார் தற்போதைய அமைச்சர்களுடன் பணியாற்ற முடியாத நிலையில் ஒவ்வொரு அதிகாரிகளும் பதவி விலகிக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அதிக அபாயம் மிக்க கொள்கலன்களும் அரசாங்கத்தின் அனுமதியுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிக அபாயம் மிக்க பொருட்களைக் கொண்ட சிவப்பு முத்திரையிடப்பட்ட 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் எவ்வித சோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. ஆளுனர் […]

முக்கிய செய்திகள்

திருகோணமலை தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்

  • Feb 1, 2025 - 08:09 PM
  • 0 Comments

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), […]

முக்கிய செய்திகள்

மறைந்த மாவைக்கு நாமல் அஞ்சலி

  • Feb 1, 2025 - 07:38 PM
  • 0 Comments

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது பொதுஜன பெரமுனவின் வடக்குக்கான அமைப்பாளர் கீதனாத் காசிலிங்கமும் மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முக்கிய செய்திகள்

மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் 

  • Feb 1, 2025 - 07:28 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு எழுத்து மூலம் இது வரை அநுர அரசு அறிவிக்கவில்லை. எனவே அவரை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற்றுவதற்காக புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு சுனில் வட்டகல வேண்டுகோள் விடுத்துள்ளார்     […]

முக்கிய செய்திகள்

நிராயுதபாணியானார் மகிந்தவின் 2வது புத்தா யோசித்த

  • Feb 1, 2025 - 07:14 PM
  • 0 Comments

அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி யோசித ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகளை ஆரம்ப கட்டத்தில் ஒப்படைத்திருந்தார் இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp