முக்கிய செய்திகள் விளையாட்டு

பெண்களுக்கான கடினப்பந்து கிரிகெட் மாதிரி போட்டி யாழ்ப்பாணத்தில் நடைப்பபெற்றது

  • Feb 4, 2025 - 06:10 AM
  • 0 Comments

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் ( நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் ளுpழசவள குழச னுநஎநடழிஅநவெ ரூ PநயஉநJSAC) unicef செயற்றிட்டத்தினூடாக அண்மையில் வடக்கின் இளம் பெண்களுக்கான மாபெரும் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டி (Northern Cricket Carnival) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது இந்த துடுப்பாட்ட போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்கள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 70 யுவதிகள் விளையாடினர் இந்நிகழ்வில் unicef நிறுவன சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சர்மிலி சதீஸ், பிரதேச செயலர்கள், […]

முக்கிய செய்திகள்

1 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் அம்பாறையில் இளைஞன் கைது

  • Feb 4, 2025 - 05:51 AM
  • 0 Comments

நேற்று இரவு (3-02-2025) அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபராவார். குறித்த பகுதியில் அண்மைக்காலமாக கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபரிடம் இருந்து 1 மில்லி கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை கூட வனவள திணைக்களம் நடைமுறைப்படுத்தவில்லையென ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

  • Feb 4, 2025 - 05:43 AM
  • 0 Comments

முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட துவரங்குளம் மற்றும், அக்குளத்தின் கீழான வயல் நிலங்களையும் மக்களிடம் கையளிக்கும் விடயத்தில் நீதிமன்றம் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு பிரதேச செயலகமும், வனவளத் திணைக்களமும் தமக்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்து மக்களுக்குரிய குறித்த குளத்தையும் குளத்தின் கீழான வயல் நிலங்களையும் அவர்களிடமே கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். மாந்தைகிழக்குப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் திங்கட்கிழமை (03-02-2025) இடம்பெற்ற […]

செய்திகள் முக்கிய செய்திகள்

‘கிளீன் ஸ்ரீலங்காவை கிளீனாக செயற்படுத்த 300 மில்லியன் யென் நிதியுதவியளிக்கின்றது ஜப்பான்

  • Feb 4, 2025 - 05:26 AM
  • 0 Comments

ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் 300 மில்லியன் ஜப்பான் யென் நிதி உதவியை வழங்குவதற்கான ஒரு பரிமாற்றக் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. ஜப்பானின் இவ் உதவிக்கான கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில்தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளியுறவுக்கான நாடாளுமன்ற துணை அமைச்சர் திருமதி அகிகோ இகுயினா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் குறிப்புகளில் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டா மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் […]

முக்கிய செய்திகள்

ஐ.எம்.எப்புடன் புதிய இணக்கப்பாட்டை ஏற்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதித் அதனை நிறைவேற்ற தவறியுள்ளார்- சஜித் பிரேமதாஸ

  • Feb 3, 2025 - 06:49 PM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது கூறியது. இப்போது முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட அதே ஒப்பந்தத்தை அதே வழியில் முன்னெடுத்து வருகின்றது. இவற்றுக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதா என […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் நாளை ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது

  • Feb 3, 2025 - 06:30 PM
  • 0 Comments

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (4) ஆர்ப்பாட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை குடியரசின் சுதந்திர தினமானது நாளை 04ஆம் திகதி கொண்டாடப்படவேண்டிய ஒரு தினம் என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பில் 8வது சரத்தில் கூறப்பட்டுள்ளதுடன், அன்றைய […]

முக்கிய செய்திகள்

வடகிழக்கு விவசாயிகளை அரசுக்கு விவசாயிகள் போல தெரியவில்லையா என செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்

  • Feb 3, 2025 - 06:18 PM
  • 0 Comments

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகள் மீது கருணை […]

முக்கிய செய்திகள்

சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை ; கரிநாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது

  • Feb 3, 2025 - 06:03 PM
  • 0 Comments

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவாதப்பூதத்திற்கு தரைவார்க்கப்பட்ட நாளாகும். சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் பேரினவாத மூலோபாயத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. மாறாக சிங்களக்குடியேற்றங்கள் அகற்றப்படவோ நிறுத்தப்படவோ அல்லது பௌத்தமயமாக்கல் அகற்றப்படப் போவதில்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகட்கு நீதிவழங்கவோ போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ எந்தவாய்ப்பும் இல்லை. இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபயவை அரசாங்கம் கைதுசெய்யவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

  • Feb 3, 2025 - 05:48 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அசாத் மௌலானாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது நீக்கப்பட்டுள்ளது. […]

முக்கிய செய்திகள்

யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கிய ஒருவர் பலி மற்றொருவர் காயம்

  • Feb 3, 2025 - 01:27 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முதலைக்குடாவில் வசிக்கும் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாதப் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp