சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பிரகடனம் வாசிக்கப்பட்டது
இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அனுஷ்டித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரகடனமும் வாசிக்கப்பட்டது. அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள்! ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் […]









