முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிக்கு வேலை கிடைக்கவில்லை தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

  • Feb 5, 2025 - 06:59 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் நேற்று (4-02-2025 ) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய தங்கவேல் விபுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண […]

உலகம் முக்கிய செய்திகள்

சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு- ஐவர் காயம்!

  • Feb 5, 2025 - 01:24 AM
  • 0 Comments

சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டு நேரப்படி நேற்று (04) பிற்பகல் 1 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதேநேரம், ஆபத்து இன்னும் குறையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என காவல்துறையினர் […]

செய்திகள் விளையாட்டு

இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம் !

  • Feb 5, 2025 - 01:15 AM
  • 0 Comments

இந்திய அணியுடனான முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் ஜேமி ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்திய அணிக்கு எதிராகக் கடந்த ஜனவரி மாதம் ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது ஜேமி ஸ்மித் மைதானத்தை விட்டு வெளியேறினார். அந்த தொடரை இந்தியா அணி 4 இற்கு 1 என்ற அடிப்படையில் வென்றதுடன் இறுதி இரண்டு போட்டிகளிலும் ஜேமி […]

செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று போராட்டத்தில் குதித்த பிரித்தானிய வாழ் தமிழர்கள்!

  • Feb 5, 2025 - 12:57 AM
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அந்நாட்டில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டமானது நேற்றைய தினம் (04.02.2025) பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கீழ் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு, பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. இதன்போது, ‘தமிழ் ஈழமே எமது நாடு’, ‘தமிழ் ஈழம் ஒன்றே […]

முக்கிய செய்திகள்

ஆட்சியாளர்கள் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியமாகவும் பெற்றுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்

  • Feb 4, 2025 - 08:51 PM
  • 0 Comments

இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். தனது”X” தளத்தில் பதிவொன்றை இட்டு, இலங்கை மட்டும் அண்மைய ஆண்டுகளில் ருளுயுஐனு இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், மனிதாபிமான […]

முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்-கர்தினால் 

  • Feb 4, 2025 - 06:46 PM
  • 0 Comments

யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர, தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்து, புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடமும், தற்போதைய அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்வதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) காலை பொரளை அனைத்து புனிதர்கள் […]

முக்கிய செய்திகள்

யாழ் சிறைச்சாலையிலிருந்து பெண் உட்பட 17 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை!

  • Feb 4, 2025 - 06:22 PM
  • 0 Comments

சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார். 77ஆவது சுதந்திர தினமான இன்று ஜனாதிபதியினது பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு நகர்புறத்தில் தேசியக் கொடிகள் பறக்கவிட் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது

  • Feb 4, 2025 - 06:10 PM
  • 0 Comments

அத்துடன் முல்லைத்தீவில் அமைந்துள்ளள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டும், இலங்கையின் தேசியக் கொடிகள் அப்பகுதி நகர சுற்று வட்டாரத்தில் பறக்கவிடப்பட்டும் சுற்றுவட்ட வீதி அலங்கரிக்கப்பட்டும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது        

முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண மக்கள் மட்டக்களப்பில் சுதந்திரதினத்தை ‘கரி நாள்’ நாளாக பிரகடனப்படுத்தி போராட்டம்

  • Feb 4, 2025 - 05:46 PM
  • 0 Comments

பல்வேறு அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது. செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் […]

முக்கிய செய்திகள்

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமும் கரிநாள் அறிக்கை வாசிப்பும்

  • Feb 4, 2025 - 05:24 PM
  • 0 Comments

சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சிச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த போராட்டத்தில் சுதந்திர தின அறிக்கை வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி தமிழ் தேசத்தின் கரி நாள் என நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம். இத்தீவின் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ் தேசத்தை ஆக்கிரமித்திருந்த […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp