செய்திகள்

கல்முனை அஸ்-ஸுஹரா பாடசாலையின் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா..!

  • Mar 20, 2026 - 02:28 AM
  • 0 Comments

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அஸ்-ஸுஹரா பாடசாலையின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நீண்டகாலத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் 2026 ஆண்டிற்கான வருடாந்த இப்தார் நிகழ்வும் கடந்த புதன்கிழமை(18.03.2026) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு..!

  • Mar 19, 2026 - 12:36 PM
  • 0 Comments

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார். இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், “தற்போது நிலவும் யுத்தம் போன்ற இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 10 இற்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைப் பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன. உள்ளூர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மத நூல்களை பாடசாலைகளில் நேரடியாகச் சென்று விநியோகிக்கும் நடைமுறைகளை தவிருங்கள்..! வடக்கு ஆளுநர் உத்தரவு

  • Mar 19, 2026 - 12:19 PM
  • 0 Comments

பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் அது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – மாணவர்கள் போராட்டத்தில்..!

  • Mar 19, 2026 - 12:14 PM
  • 0 Comments

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இன்றை தினம்(19.03.2026) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 10ஆம் திகதி , பொலிஸ் வாகனத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்து , துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனை அஸ்-ஸுஹரா பாடசாலையின் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா..!

  • Mar 19, 2026 - 11:02 AM
  • 0 Comments

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அஸ்-ஸுஹரா பாடசாலையின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நீண்டகாலத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் 2026 ஆண்டிற்கான வருடாந்த இப்தார் நிகழ்வும் கடந்த புதன்கிழமை(18.03.2026) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் உயர்கிறதா எரிபொருள் விலை..?

  • Mar 19, 2026 - 10:09 AM
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தெற்கு பார்ஸ் (South Pars) எரிவாயு வயலில் உள்ள ஈரானின் பெட்ரோ கெமிக்கல் வளாகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை ஒரு கொள்கலனுக்கு 109.91 டொலரை எட்டியது. இது கடந்த செவ்வாய்க்கிழமை விலையை விட 5% உயர்வாகும். அதேபோல், பிரித்தானியாவின் எரிவாயு விலையும் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை..!

  • Mar 19, 2026 - 10:03 AM
  • 0 Comments

சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு என சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார். ரியாத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இவ்வாறான தாக்குதல்கள் மூலம் டெஹ்ரான் எவ்வித நன்மையையும் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் சிக்கலா..?

  • Mar 19, 2026 - 09:58 AM
  • 0 Comments

வேறு கைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2026 மார்ச் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் QR குறியீட்டை மீளப் பெறும் போது, அந்தப் பதிவை மேற்கொண்ட கைபேசி இலக்கம் பயன்பாட்டில் இல்லாமை அல்லது வேறு ஒருவரிடம் இருப்பதனால் பொதுமக்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய அம்சம் அமைப்பில் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று..!

  • Mar 19, 2026 - 09:44 AM
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம், இன்று (19.03.2026) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் குமார ஜயகொடி தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கமைய, இன்று காலை குறித்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். இதேவேளை, உலகில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp