உள்ளூர் செய்திகள்

யாழ் நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட 22 பேரின் ஆட்கொணர்வு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

  • Jul 30, 2025 - 02:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்குப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரை தொடர்புடைய ஆட்கொணர்வு மனு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடம் சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் வருவதால், வழக்கு அங்குள்ள நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இவ்வழக்கிற்கு இன்று (30) தீர்ப்பு வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், நீதிவான் விடுமுறையில் இருந்த காரணத்தினால், தீர்ப்பு வழங்கும் நாள் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் […]

உள்ளூர் செய்திகள்

ஐக்கிய நாடுகள் அமைப்பு எமது கோரிக்கையை புறந்தள்ளுகிறது- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்

  • Jul 30, 2025 - 02:03 PM
  • 0 Comments

உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது என்றும், தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு புறந்தள்ளுகிறது என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் உள்ள பழைய பேருந்து நிலையப்பரப்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்கள் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், உள்ளக விசாரணை முறையைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறோம். இருப்பினும் அதையே மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை செய்கிறார். இனப்படுகொலை இடம்பெற்ற ஒரு […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதை குழியில் இன்று 07 எலும்புக்கூட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

  • Jul 29, 2025 - 07:42 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 புதிய எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுகளில் 03 தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 09 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் அடிப்படையில், இதுவரை 34 எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழப்பட்டுள்ளன. அகழ்வுகள் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சி – அருட்தந்தை மா.சத்திவேல்

  • Jul 29, 2025 - 07:04 PM
  • 0 Comments

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை பார்த்தறிந்துள்ளனர்

  • Jul 29, 2025 - 06:28 PM
  • 0 Comments

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ இளைஞர் அணி தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் டெல்லிஇ பீகார்இ கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இக்குழுஇ அபிவிருத்தி திட்டங்கள்இ பொருளாதார நவீனத்துவம்இ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்இ ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கலாசார […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ச இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

  • Jul 29, 2025 - 05:38 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று ( ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக அவர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை நேற்றைய தினம் (28) மீண்டும் அழைக்கப்பட்டபோது நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மாலைத்தீவு விஜயத்தை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கேட்டு இன்று பேரணி நடைப்பெற்றது

  • Jul 29, 2025 - 05:26 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மல்லாவியில் இளைஞர் ஆனந்தராசா சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி இன்று மல்லாவி பொது அமைப்புகள்இ வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியுள்ளனர். பேரணியில் பங்கேற்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்இ குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில்இ மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். கடந்த ஆண்டு சஜீவன் படுகொலை செய்யப்பட்ட நிலையில்இ வவுனிக்குளம் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநரை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

  • Jul 29, 2025 - 03:59 PM
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ( காலை யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தாம் தெரிந்துகொள்வதே இந்தப் பயணத்தின் நோக்கமென தூதுவர் தெரிவித்தார். வடக்கில் இன்னும் பின்தங்கியுள்ள கிராமங்களில் வீதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என ஆளுநர் சுட்டிக்காட்டினார். போருக்குப் பின்னர் தொழிற்சாலைகளின் பற்றாக்குறை வேலைவாய்ப்பை சவாலாக மாற்றியுள்ளதாகவும் கூறினார். விவசாயம், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஸ எம்.பி இன்று நாடு திரும்பியுள்ளார்.

  • Jul 29, 2025 - 03:42 PM
  • 0 Comments

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை கைது செய்ய பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்தில், தனிப்பட்ட தேவைக்காக நேற்று (28-07) நாமல் ராஜபக்ஸ வெளிநாடு சென்றிருந்தார். 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சகோதரன் கொலை சகோதரி மீது சந்தேகம்- பொலிஸார்

  • Jul 29, 2025 - 12:50 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் முதலாம் ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர், தனது சகோதரியுடன் வசித்து வந்த வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது 56 வயதுடைய சகோதரி, நபர் கொல்லப்பட்டதற்கான சூழ்நிலையை விளக்கும் வகையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இரவு மூவர் வீட்டுக்குள் வந்து தண்ணீர் கேட்டதாகவும், தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றபோது அவர்கள் தன்னை கட்டிப்போட்டு நகைகளை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp