உள்ளூர் செய்திகள்

தமிழர்களுக்கு நீதி வேண்டுமென பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை வெளியீடு

  • Jul 31, 2025 - 11:40 AM
  • 0 Comments

பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கூட்டு செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள், சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், அதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டுவரவும் முக்கிய வாய்ப்பை அளிக்கின்றன என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கருத்தை எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சி உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர் தமிழர்களுக்கு நீதி, […]

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்

  • Jul 31, 2025 - 12:29 AM
  • 0 Comments

திருமதி ஜயமிலன் அனிதா பூநகரி வாடியடியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி ,பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜயமிலன் அனிதா 28.07.2025 பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மகேஸ்வரி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும் ,ஜயமிலனின் பாசமிகு மனைவியும் டெனிசா, கஸ்மியா ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவகுமார்,தயாழினி ரகுமணன்,யாழினி,மதுவந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும் விஜிதினி, அமரர் சர்மிலன்,வினோதினி, தாரணி,நிதி,சிவமதி, ஜெய எட்வின்,ரவீந்திரன்,முரளீதரன் ,ரவி ஆகியோரின் மைத்துனியும், ஆதித்தன்,தர்மிகா, தமிழி ,பானுஜா,தமிழ்ச்செல்வி ,இசைச்செல்வி, […]

உள்ளூர் செய்திகள்

யாழ் செம்மணியில் 25ஆம் நாளான இன்று 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

  • Jul 30, 2025 - 07:18 PM
  • 0 Comments

செம்மணி சிந்துப்பாத்தி ,ந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் இன்று நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளதாவது இன்றைய தினத்துடன் மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் 25ஆம் நாளாக முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளின்போது, மூன்று மனித எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 115 எலும்புத் தொகுதிகள் […]

உலகம் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரஸ்சியாவில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து ஆழிப்ரேரலை உருவானது

  • Jul 30, 2025 - 05:39 PM
  • 0 Comments

ரஸ்சியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், பெட்ரோ பாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்க் நகரத்திலிருந்து சுமார் 136 கிலோமீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டது. அதின் தாக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி, மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். வீடுகளில் உள்ள பொருட்கள் தரையில் சரிந்து விழுந்தன் ஜன்னல்கள் உடைந்தன் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. துரிதமாக மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 27 வயது இளைஞன் மர்ம மரணம். பாம்பு தீண்டியதா?

  • Jul 30, 2025 - 04:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 27 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் கண்டரியப்பட்ட நிலைமையின் அடிப்படையில்இ குறித்த இளைஞர் அருகிலுள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பும் வழியில்இ வீட்டின் முன்புறம் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் உடனடியாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றும்இ அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இறந்தவர் செல்வச்சந்திரன் மிமோஜன் என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் தொடர்பில் மாநாடு நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

  • Jul 30, 2025 - 04:38 PM
  • 0 Comments

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பாக வழக்கு மாநாடு ஒன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்காக சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு, மாநாட்டில் பங்கேற்க வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கானது நீதிமன்றத்தினால் முன்பே வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இன்று அழைக்கப்பட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன. நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

லலித் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோரது வழக்கில் சாட்சியமளிக்க கோட்டா தயாரென அறிவிப்பு

  • Jul 30, 2025 - 04:20 PM
  • 0 Comments

2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான ஆட்கொணர்வு மனுவைமூலம் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது கோட்டாபய ராஜபகஸ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நீதிமன்றத்தில் இத்தகவலை அறிவித்தார். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முடியாது என்பதால், அதற்கு பதிலாக கொழும்பிலுள்ள […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலையில் கஞ்சா தோட்டம் முற்றிகை

  • Jul 30, 2025 - 03:58 PM
  • 0 Comments

திருகோணமலையில் மொரவெள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டம் பயிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சா தோட்டம் விசேட அதிரடிப்படையினரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், குறித்த பகுதியில் நுட்பமான முறையில் கஞ்சா பயிரிடப்பட்டு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெற்றுக் கொண்டு நீர் பாய்ச்சுதல் வழியாக கஞ்சா வளர்ப்பு செய்யப்பட்டிருந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து […]

உள்ளூர் செய்திகள்

கல்முனை வடக்கு உப பிரதேசசெயலக வழக்கு 2026 ஜனவரி மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

  • Jul 30, 2025 - 03:46 PM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி வழக்கு தொடர்ந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் இருந்தனர். அவர்களது பிரதிநிதிகளான ஜனாதிபதி சட்டத்தரணிகள் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான குழு மற்றும் தவராசா கலையரசன் […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு இளைஞர் காயம்.

  • Jul 30, 2025 - 02:39 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்று (29-07) செவ்வாய்க்கிழமை மாலை இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, முச்சக்கரவண்டியில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட வன்முறை கும்பல் அவரை வழிமறித்து வாளால் வெட்டிக் காயப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது. காயமடைந்த இளைஞர் வீதியில் சென்ற பொதுமக்களால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp