மட்டக்களப்பில் மினி சூறாவளியால் வீடுகள் சேதம்!
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் கட்டுமான ங்கள் உள்ளிட்டவற்றுக்கு
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் கட்டுமான ங்கள் உள்ளிட்டவற்றுக்கு
திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்கா அருகேயுள்ள கடற்கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் திடீரென விஜயம் மேற்கொண்டு, அந்த காணியின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார். அந்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான தீர்மானத்திற்காக எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி சட்ட மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி இன்று நேரில் பார்வையிட்டார். கடந்த ஜூலை 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ‘ஆயுபு’ என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் பணியில் […]
கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று யாழ்ப்பாணம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கு மாகாண பிரதம செயலாளர் […]
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களுடன், இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களை கையாளுவதற்காக தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் கூட்டத்தில் பங்கேற்றது. பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சி. சிறீதரன், ஞா. சிறீநேசன், […]
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 4ஆம் திகதி பார்வையிட தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார். இந்த விஜயத்தில், ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் இரண்டு பணிப்பாளர்களும், யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்களும் அடங்கிய குழுவினர் பங்கேற்கவுள்ளனர். செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன. அதே நேரத்தில், காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி […]
திருகோணமலையில் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பணிநேரத்தில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்குமாறு விடுத்துள்ள உத்தரவு தொடர்பில் அவர் எழுதிய கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் செய்யப்பட்ட மத சுதந்திரம் மற்றும் கலாச்சார அடையாள உரிமைகளை மீறும் செயற்பாடாக […]
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி அடையாளம் காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆகஸ்ட் 5, 2025 அன்று பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில், இந்த பொருட்கள் செம்மணி அகழ்விட வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இவை தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் நீதிமன்றத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. […]
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது யு320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு ‘யாழ்ப்பாணம் நகரம்’ எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது. தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், தமிழர் வாழ்வில் மிக்க முக்கியத்துவம் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா நடைபெறும் காலக்கட்டத்தில் இவ்வகை முயற்சியை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போது நிலவுகின்றது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். வடக்கு பகுதியில் அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகள் தொங்கவிடுவதற்கே நிதி வழங்கிய புலம்பெயர் தமிழர்கள் மிகப்பெரிய முதலீட்டாளர்களாகக் கருதும் அரசாங்கம், நாட்டை பாதுகாக்க போரில் பங்கேற்ற பாதுகாப்புப் படையினரை போர்க்குற்றவாளிகளாக மதிப்பது சோகம் என அவர் தெரிவித்தார். முன்னாள் கடற்படைத் தளபதி சிறையில் […]
போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் வடக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு இன்று விஜயம் செய்த அவர், அங்கு உத்தியோகத்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது இவ்வாறு கருத்து வெளியிட்டார். அமைச்சருடன் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த […]