உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

  • Aug 5, 2025 - 11:16 AM
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள், கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04-08) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டன. சுமார் 103 கிலோகிராம் (ஈரமான எடை) கொண்ட இந்த கஞ்சா பொதிகளின் சந்தை பெறுமதி 23 மில்லியன் ரூபாயாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினர் கைப்பற்றிய கஞ்சா பொதிகள், மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் இன்று மேலும் 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

  • Aug 4, 2025 - 07:41 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வாய்வில், இன்றைய தினம் (ஓகஸ்ட் 4) புதிதாக 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன், ஏற்கனவே கண்டறியப்பட்ட 6 தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக கடந்த 15 நாட்களாக இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதியாக நடைபெறும் அகழ்வில், இன்றைய தினம் வரையிலான கணக்கில் 61 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளது

  • Aug 4, 2025 - 07:21 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அகழ்வாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள்இ பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் முன்னிலையில் நாளை (ஓகஸ்ட் 5) பிற்பகல் 1.30 முதல் மாலை 5 வரை காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம்இ ‘பொருட்களை அடையாளம் காண வரக்கூடிய பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைஇ மருத்துவ சேவைகள்இ உளவள உதவிகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரிட்டனில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது

  • Aug 4, 2025 - 05:11 PM
  • 0 Comments

பிரித்தானியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞர் தொடர்பான விசாரணை அறிக்கையின் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்வான்சி நகரைச் சேர்ந்த 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா, தனது இரு மருமகள்களை காப்பாற்றும் முயற்சியில் நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்தார். பிரெகான் பீக்கன்ஸ் எனப்படும் சுற்றுலா பகுதியில் அமைந்துள்ள ஸ்க்வட் ஒய் பன்வர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற மோகன், வானிலை இனிமையாக இருந்த காரணத்தால் சிலர் நீருக்குள் இறங்கிய நிலையில், இரு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி தமிழ் தேசிய தலைவர்கள் ஒன்றுபட வேண்டுமெனகிறார் அருட்தந்தை மா. சத்திவேல்

  • Aug 4, 2025 - 04:43 PM
  • 0 Comments

செம்மணி புதைகுழிகளைத் தொடர்பாக வௌவேறு அரசியல் நோக்கங்களால் பிளவுகளை உருவாக்கும் செயல்களைத் தவிர்த்துஇ தமிழ்த் தேசியமாக நின்று ஒன்றிணைந்த அரசியல் செயற்பாடுகள் தேவைப்படுவதாக அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை விடுவிக்கக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளரான இவர்இ இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அறிக்கையில்இ செம்மணி பகுதியில் தினசரி அகழ்ந்து எடுக்கப்படும் மனித எச்சங்கள் மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்துவதாகவும்இ அந்த அகழ்வுகள் தமிழர்களுக்கு நீதி தேடும் குரலாகவும் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியை மனித உரிமை ஆணைக்குழு குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

  • Aug 4, 2025 - 04:20 PM
  • 0 Comments

செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழிகள் தொடர்பான அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு குழுவினர் நேரில் பார்வையிட்டுள்ளனர். இக்குழுவில் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தனராஜ், பேராசியர் பாத்திமா பர்ஸான ஹனீபா மற்றும் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் ஆகியோர் அடங்கினர். அவர்கள் சமீபத்தில் செம்மணி பகுதியை அணுகி நடைபெற்று வரும் அகழ்வு பணிகளை பரிசோதித்தனர். இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்கள், புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் ஜி.பி.ஆர். ஸ்கானர்; மூலம், ஸ்கான் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

  • Aug 4, 2025 - 02:09 PM
  • 0 Comments

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நடவடிக்கையை அடுத்து , […]

உள்ளூர் செய்திகள்

மகிந்தவுக்கு தமது சொந்த வீடுகளை அறுதியுறுதியோடு வழங்க காத்திருக்கும் சிங்கள மக்கள்

  • Aug 4, 2025 - 12:09 PM
  • 0 Comments

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் சட்டமூலம் ஒன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியான […]

உள்ளூர் செய்திகள்

மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகன் கைது

  • Aug 4, 2025 - 11:53 AM
  • 0 Comments

இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 74 வயதுடைய மாமியாரே கொலை செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தினை தொடர் தகவல்களில்இ இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார்

  • Aug 4, 2025 - 11:22 AM
  • 0 Comments

குருணாகலின் வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) இடம்பெற்றது. 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வாரியபொல பொலிஸாரால் தொடரப்பட்டு வருகின்றன.    

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp