உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் முரண்களை இரு சமூக தலைவர்களும் தீர்க்கமுடியும்- ரிஸாட் பதியுதீன் எம்.பி.

  • Aug 6, 2025 - 07:19 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் தொடர்பான பிரேரணை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தாலும், அவற்றுக்கு தீர்வு கிடைப்பதில்லை எனவும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் இவ்விடயங்களைத் தீர்க்கும் முயற்சியை விட, அவற்றை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கம் அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அனுபவங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன என்றும் கூறினார். ஓட்டமாவடி பிரதேச சபையை தமது கட்சியே வென்றிருந்த போதும், ஆட்சி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மகிந்தவின் பெறாமகன் சஸிந்திர ராஜபக்ச விளக்கமறியல்

  • Aug 6, 2025 - 07:08 PM
  • 0 Comments

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) காலை சஷிந்திர ராஜபக்சவை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருமலை சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமும் அகழ்வதற்கு மூதூர் நீதிமன்றம் உத்தரவு

  • Aug 6, 2025 - 06:33 PM
  • 0 Comments

சம்பூர் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பான அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (6) நடைபெற்ற வழக்கு மாநாட்டில்இ மூதூர் நீதவான் தஸ்னீம் பௌஸான்இ கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதியின் ஆலோசனையுடன் இராணுவ பாதுகாப்பு பணியாளர்களின் உதவியுடன் முறையான அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இதன் மூலம்இ சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை கண்டறிதல் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றம் […]

உள்ளூர் செய்திகள்

பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அதானியின் மின் கோபுர பாகங்கள் மன்னரை வந்தடைந்தது

  • Aug 6, 2025 - 02:12 PM
  • 0 Comments

காற்றாலை மின் கோபுர பாகங்களை ஏற்றிய பாரிய வாகனங்கள், மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்துள்ளன. இந்த காற்றாலை மின் கோபுர பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது எனக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (3-08) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் போராட்டம் நீடித்தது. நேற்றைய தினம் (5-08) காலை மன்னார் பஜார் […]

உள்ளூர் செய்திகள்

மன்னார் மக்களை வேட்பாளர் அநுர நம்ப வைத்தார் ஜனாதிபதி அநுர ஏமாற்றினார்- கஜேந்திரன்

  • Aug 6, 2025 - 01:48 PM
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலின்போது மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காற்றாலை திட்டம் மன்னாரில் நடைமுறைப்படுத்தப்படாது என உறுதியளித்திருந்த போதிலும், தற்போது அந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவது மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலை திட்டத்தை நிறுத்தும் கோரிக்கையுடன், மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து […]

உள்ளூர் செய்திகள்

செம்மணிக்கு நீதி வழங்க சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வலியுறுத்தியுள்ளார்.

  • Aug 6, 2025 - 01:16 PM
  • 0 Comments

செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் அளவு மிகப்பெரிய பேரழிவாகும் எனவும், அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கும் பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை நாடும் ஒரு குடும்பம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். […]

உள்ளூர் செய்திகள்

சோமரத்ன ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்தென்கிறார் அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஸ

  • Aug 6, 2025 - 12:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாக, கிருஸாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபகஸ் தெரிவித்துள்ளார். இதனை அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம, ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   அக்கடிதத்தில், யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட சித்திரவதைக்கூடங்கள் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் இன்று 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • Aug 5, 2025 - 09:28 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வாய்வில், இன்றைய தினம்  புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி; கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 65 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என […]

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு கடத்தப்பட்ட 558 கிலோ மாட்டிறைச்சியை மடக்கிப்பிடித்தது மாநகரசபை

  • Aug 5, 2025 - 12:03 PM
  • 0 Comments

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 558 கிலோகிராம் மாட்டிறைச்சி மாநகரசபையினரால் நேற்று (04-08) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்தில் சுகாதார சீர்கேடான நிலையில் இந்த இறைச்சி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட இறைச்சி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லப்படும் முன்னரே, பொதுமக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாநகரசபையின் பிரதிமுதல்வரும், சபை உறுப்பினரும் இடையீடு செய்து இறைச்சியைக் கைப்பற்றியுள்ளனர். சுமார் 558 கிலோகிராம் […]

உள்ளூர் செய்திகள்

ஐநாவுக்கு அனுப்பி கடிதத்தில் 115 தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் 11 மதத்தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளனர்

  • Aug 5, 2025 - 11:32 AM
  • 0 Comments

செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைய, உரிய கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் நடைபெற வேண்டும் எனவும், மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் உறுப்புநாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்தில், வடகிழக்கு மாகாணங்களில் இயங்கும் தமிழ் கட்சிகள் மற்றும் 115 சிவில் அமைப்புகளுடன், 11 மதத்தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். செப்டெம்பர் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp