உள்ளூர் செய்திகள்

புத்தளம் மீன்வாடியில் 100 கோடி பெறுமதியான மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

  • Aug 8, 2025 - 10:29 AM
  • 0 Comments

கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்வாடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறு கோடிக்கு மேற்பட்ட பெறுமதி வாய்ந்த சட்டவிரோத மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமாக இருந்த மீன்வாடிக்குள் வைத்திருந்த பொதிகளை பொலிஸார் சோதனை செய்தனர். அதன் போது புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு உபயோகப்படும் மருந்து வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான மருந்துகள் […]

உள்ளூர் செய்திகள்

52 வயது மனைவி மீது சந்தேகம் ஓட..ஓட.. வெட்டிசாய்த்த கணவன்

  • Aug 8, 2025 - 09:45 AM
  • 0 Comments

இரத்தினபுரி தெல்வல பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு தமிழ்ப் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 52 வயதான பரமசிவம் காளியம்மா எனும் மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது, அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், அவரது கணவன் தேயிலை இலை வெட்டும் கத்தியுடன் வந்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரை காப்பாற்றும் நோக்கில் சுமார் 100 மீட்டர் தூரம் ஓடிய போதிலும், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் உயிரற்ற இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது

  • Aug 8, 2025 - 09:00 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் அக்கரை கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் கரையில் ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்று (07-08) கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஐவர் படுகாயம்

  • Aug 8, 2025 - 08:50 AM
  • 0 Comments

பொரளை சஹஸ்புராவில் அமைந்துள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் நேற்றிரவு (07-08) இரவு 8.40 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் டி-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் […]

உள்ளூர்

யாழ் சுன்னாகம் பொலிசாரால் பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு.

  • Aug 8, 2025 - 01:13 AM
  • 0 Comments

யாழ் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதே மாத்திரைகளை சுன்னாகம் பொலிசார் நேற்று(07) இரவு கைப்பற்றியுள்ளனர். யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் நகர்பகுதியில் போதைமாத்திரைகளை விற்பனைக்கு இளைஞர் ஒருவர் எடுத்து வருவதாக குறித்த பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினர் 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர் தொடர்ந்து 25 வயதான சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர் ஒருவர் […]

உள்ளூர்

பொலிஸாரின் அதிரடி சோதனையில் 800 பேர் கைது.

  • Aug 8, 2025 - 01:03 AM
  • 0 Comments

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 675 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் மற்றும் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 6,129 பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 25,755 நபர்கள், 10,602 வாகனங்கள் மற்றும் 7,998 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளின்போது, 4 சட்டவிரோத துப்பாக்கிகளை […]

உள்ளூர்

யாழில் ரயிலில் சிக்கி பெண்ணின் கால் துண்டான துயரம்.

  • Aug 8, 2025 - 12:57 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் நேற்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்றபோது கால் தடுமாறி விழுந்தார். இதனால், அவரது ஒரு கால் ரயிலில் சிக்கி துண்டானதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த யுவதி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதையும் படியுங்கள்>ஜனாதிபதியை […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக CID-இல் முறைப்பாடு.

  • Aug 8, 2025 - 12:51 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரமாக, அவரது சட்டத்தரணியான அகலங்க உக்வத்தே இந்த முறைப்பாட்டை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் இவ்வகை பதிவுகள், ஜனாதிபதியின் தனிமனிதக் கௌரவத்தையும், அரசியல் பிம்பத்தையும் சீரழிக்கும் நோக்கத்துடன் பரப்பப்படுவதாகவும், அவை முழுமையாக பொய்யானவை எனவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பொது […]

கட்டுரை

யாழில் இன்றும் ஆலயம் தொடங்கி-அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சாதியப் பாகுபாடு.

  • Aug 8, 2025 - 12:18 AM
  • 0 Comments

தவராசா சுபேசன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் இன்றும் சாதியப் பாகுபாடு பாரிய தாக்கங்களையும் – எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆலயம் தொடங்கி அரசியல் வரை சாதியப் பாகுபாடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்று தொழில்நுட்பத்தின் அதி உச்ச வளர்ச்சி காரணமாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நடக்காத ஒன்றை நடந்ததாக நம்பச் செய்யும் அளவிற்கு தொழில்நுட்ப உலகு வளர்ச்சி கண்டு விட்டது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்த ஒருவரை மீளவும் உயிர்ப்பிக்க முடியாதே தவிர ஏனைய அனைத்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 43 பொருட்களை மக்கள் பார்வையிட்டனர்

  • Aug 6, 2025 - 07:32 PM
  • 0 Comments

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்ட வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 54 பிற பொருட்களில் 43 பொருட்கள் 2025 ஆகஸ்ட் 5 பிற்பகல் பொதுமக்களுக்கு, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமையுடன் காட்டப்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இதில் பங்கேற்றும், 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடிய தங்கள் உறவினர்களின் எந்தப் பொருளையும் அடையாளம் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp