உள்ளூர் செய்திகள்

யாழ் நெடுந்தீவில் கத்திக்குத்து ஒருவர் பலி, நால்வர் படுகாயம்’

  • Aug 11, 2025 - 12:10 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவர் மீது பலமுறை கத்திக்குத்து நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலாளியை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உட்பட நால்வருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களும் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் மேற்கொண்ட நபர் சம்பவத்திற்குப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தீயில் சிக்கினான் சிறுவன் தாயும் தந்தையும் தாயின் காதலனும் சட்டத்தில் சிக்கினர்

  • Aug 11, 2025 - 11:51 AM
  • 0 Comments

இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09-08) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஏழு வயது சிறுவன் பலியாகியுள்ளார். தீ பரவிய நேரத்தில் வீட்டில் இருந்த சிறுவன் கடுமையாக காயமடைந்து, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளில், உயிரிழந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் தாயுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படும் நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லையில் இராணுத்தினரால் கொல்லப்பட்ட இளைஞரின் உடல் கொழும்புக்கு அனுப்பபடவுள்ளது

  • Aug 10, 2025 - 05:56 PM
  • 0 Comments

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (10-08) மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைக்கு பின், மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாத நிலையில், மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்பு அனுப்பப்பட உள்ளன. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், முல்லைத்தீவு–ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியைச் சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ். அவர் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போனதாக உறவினர்கள் புகார் செய்திருந்தனர். சடலம், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடக்கில் இராணுவச் சூழல், தொடர்கின்றதென்கிறார் முருகையா கோமகன்

  • Aug 10, 2025 - 05:41 PM
  • 0 Comments

முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம், இராணுவத்தினரின் அடக்குமுறையையும் அராஜகத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் அராலியில் ஊடகங்களுக்கு அளித்த கருத்தில் அவர், தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்ந்து நிலவி வருவதை சுட்டிக்காட்டினார். யுத்தகாலத்தில் காணப்பட்ட அளவிலான இராணுவச் சூழல், இன்று வரை இப்பகுதிகளில் நீடித்து வருவதாகவும், அதேசமயம் தென்பகுதிகளில் இத்தகைய பரவலான இராணுவப் பங்களிப்பு எங்கும் இல்லை என்றும் அவர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று உயிரிழந்த பெண்ணின் வழக்கை எந்த பொலிஸ் பிரிவு கையாள்வதென குழப்பம்

  • Aug 10, 2025 - 05:27 PM
  • 0 Comments

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று முன்பகல் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிந்தைய விசாரணையில், விபத்து நிகழ்ந்த பகுதி எந்தப் பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது தொடர்பாகப் பொலிஸாரிடையே கடும் குழப்பம் ஏற்பட்டது. விபத்து நடந்த இடம் அக்கராயன், கிளிநொச்சி அல்லது மாங்குளம் பொலிஸ் பிரிவில் எதற்குட்பட்டது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் சிக்கினர். இந்தத் தெளிவின்மை காரணமாக பொலிஸ் நடவடிக்கைகள் தாமதமடைந்ததோடு, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் அராலியில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று ‘விடுதலை நீர் சேகரிப்பு’ நடைபெற்றது.

  • Aug 10, 2025 - 05:13 PM
  • 0 Comments

நெடுங்காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பொருட்டுஇ இன்று அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் ‘விடுதலை நீர் சேகரிப்பு’ நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு முன் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டுஇ பின்னர் அராலி பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த விடுதலை நீரை பானையில் ஊற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த முயற்சியை ‘குரல் அற்றவர்களின் குரல்’ அமைப்பு முன்னெடுத்துஇ அதன் செயற்பாட்டாளர் மு. கோமகன்இ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னாரில் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பில் தாதி உட்பட மூவர் கைது

  • Aug 10, 2025 - 04:57 PM
  • 0 Comments

மன்னாரில் பட்டதாரி இளம் தாயான மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிந்துஜா, மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கின் காரணமாக […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரும் இணைந்தனர் இந்நாள் ஜனாதிபதிக்கு எதிராக

  • Aug 10, 2025 - 04:42 PM
  • 0 Comments

அரசாங்கம் முன்மொழிந்துள்ள, முன்னாள் ஜனாதிபதிகளின் சில உரிமைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் ஆரம்பகட்ட ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர். இதற்காக, அனைவரும் இணைந்து சுமார் 50 சட்டத்தரணிகள் கொண்ட குழுவை அணுகி, சட்டபூர்வ நிலைமை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலர் சாலையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இது ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்தது. இந்த […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் முதலாவது பணக்காரனாக இஸாரா நாணயக்கார முதலிடத்தைப் பிடித்துள்ளார்

  • Aug 10, 2025 - 04:31 PM
  • 0 Comments

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார். இதன் மூலம், அவர் தம்மிக்க பெரேராவை முந்தி நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலில், இந்திய தொழிலதிபர் முகேஸ் அம்பானி 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் மிகப்பெரிய செல்வந்தராக இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானின் ஸாஹித் கான் 13.5 பில்லியன், […]

உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காணுமாறு கோரிக்கை

  • Aug 10, 2025 - 04:14 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடைபெற்று வரும் வழக்கு இலக்கம் யுசுஃ804ஃ23-இன் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த புதைகுழி 1994 முதல் 1996 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காணாமல் போனோர் அலுவலகம், 2016ஆம் ஆண்டின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp