உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரூம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

  • Aug 12, 2025 - 03:32 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் உரிமைகளை ரத்து செய்யும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரேணுகா பெரேரா தாக்கல் செய்துள்ளார். இதில், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். மனுதாரர் தனது மனுவில், கடந்த 7ஆம் திகதி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைத்ததாகவும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டரீதியாக ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்மொழியப்பட்ட […]

உள்ளூர் செய்திகள்

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறிலிருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு

  • Aug 11, 2025 - 08:02 PM
  • 0 Comments

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது. குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பலத்த பாதுகாப்புடன் முத்தையன்கட்டு இளம் குடும்பஸ்த்தரின் இறுதி கிரியைகள் நடைபெற்றது

  • Aug 11, 2025 - 06:36 PM
  • 0 Comments

முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இராணுவ முகாமிற்கு சென்ற இளம் குடும்பஸ்தரான கபில்ராஜ்ஜின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. அங்கு போலீசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் கவர்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகக் காக்கப்பட்டன. முத்தையன்கட்டுகுளம் இடதுகரையில் உள்ள இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்ட ஒரு இளைஞர் கடந்த 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்று முகாமிற்கு சென்றார். அதன்பின் இராணுவத்தினரால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நால்வர் தப்பி ஓடியனர்; ஆனால் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் சவுக்கடி கடற்கரையில் நபர் ஒருவர் மர்ம மரணம்

  • Aug 11, 2025 - 05:23 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி கடற்கரைப் பகுதியில், செங்கலடியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. உயிரிழந்தவர் ‘லக்கி’ என அழைக்கப்படும், செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஏறாவூரில் உள்ள உறவினரின் தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று (10-08) மாலை வீட்டை விட்டு வெளியேறிய அவர், இரவு வீடு […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு — 9வது நாளாகத் வலுக்கின்றது

  • Aug 11, 2025 - 04:50 PM
  • 0 Comments

மன்னார் பஜார் பகுதியில், 2ஆம் கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்களின் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளை எட்டியது. பல்வேறு கிராம மக்களும் இதில் கலந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை கோபுரங்களுக்கான பாகங்கள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டபோது, தள்ளாடி சந்தியில் மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் தள்ளாடி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் பொது அமைப்புகள், […]

உள்ளூர் செய்திகள்

அரச ஒத்துழைப்புடன் வெளிநாட்டு நிதியுதவியுடன் காத்தான்குடி மற்றும் மண்முனைப்பற்று பகுதிகள் விருத்தி செய்ய நடவடிக்கை

  • Aug 11, 2025 - 03:01 PM
  • 0 Comments

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய விடயங்களை விவாதித்தனர். வீதி அபிவிருத்தி, உள்ளூர் சுற்றுலா வளர்ச்சி, கல்வி மேம்பாடு, பொருளாதார உயர்வு, இளைஞர்களுக்கான பயிற்சிகள் மற்றும் தொழில்வாய்ப்பு உருவாக்கம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சிகள், பாரம்பரிய வேலைத்திட்டங்களின் மீளமைப்பு, விளையாட்டு மைதான அபிவிருத்தி, மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் […]

விளம்பரம்

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் பிரபல பாடகர் கார்த்திக்

  • Aug 11, 2025 - 02:14 PM
  • 0 Comments

இம்மாதம் 23 ம் திகதி கார்த்திக் மனோ சைந்தவி உட்பட இன்னும் சில பாடகர்கள் யாழ்ப்பாணம் வருகின்றார்கள். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் ஏற்பாட்டாளர். கே.ரி. பிரசாத்  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் பிரபல பாடகர் கார்த்திக்

  • Aug 11, 2025 - 02:12 PM
  • 0 Comments

இம்மாதம் 23 ம் திகதி கார்த்திக் மனோ சைந்தவி உட்பட இன்னும் சில பாடகர்கள் யாழ்ப்பாணம் வருகின்றார்கள். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் ஏற்பாட்டாளர். கே.ரி. பிரசாத் தொடர்புகளுக்கு 077 610 0795

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை பெண்”Miss Tourism Universe” போட்டியில் “Queen of the International Tourism” பட்டத்தை வென்றுள்ளார்

  • Aug 11, 2025 - 01:46 PM
  • 0 Comments

இலங்கை பெண் ஆதித்யா வெலிவத்த பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2025 “Miss Tourism Universe” போட்டியில்“Queen of the International Tourism” பட்டத்தை வென்று நாடு திரும்பினார். ஆகஸ்ட் 8-ஆம் தேதி மணிலா, பிலிப்பைன்ஸில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் 17 நாடுகளின் 17 அழகிகள் போட்டியிட்டனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஆதித்யா வெலிவத்த, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். தாய்லாந்து, பேங்கொக் நகரத்திலிருந்து இன்று (11-08) அதிகாலை 12:20 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் […]

உள்ளூர் செய்திகள்

யாழ் கொடிகாமத்தில் ஏ9 வீதியில் டிப்பர், லொரி, கார்…. விபத்து ஒருவர் பலி, பலர் காயம்

  • Aug 11, 2025 - 12:22 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம்–கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (10-08) இடம்பெற்ற பல வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியது. உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் வந்த […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp