உள்ளூர் செய்திகள்

சட்டவிரோத படுகொலைகள் இலங்கையில் தொடர்கின்றன – மனித உரிமை ஆணைக்குழு கவலை

  • Aug 13, 2025 - 10:53 AM
  • 0 Comments

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவர அறிக்கையில், கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அறிக்கையில், பொலிஸாரின் காவலில் இருந்தபோது பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றபோது பல்வேறு கொலைச்சம்பவங்கள் நடந்ததாகவும், இந்நேரங்களில் சந்தேகநபர்கள் தங்களை தாக்கினர் அல்லது தப்பிக்க முயன்றனர் என்றே பொலிஸார் விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பேருந்துகளில் AI பாதுகாப்பு முறை – சாரதிகளுக்கு நேரடி எச்சரிக்கை

  • Aug 13, 2025 - 09:46 AM
  • 0 Comments

பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக 40 தொழில்நுட்ப கருவிகளை அரச மற்றும் தனியார் பேருந்துகளில் நிறுவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறினார். இந்த  AI தொழில்நுட்பம் மூலம், சாரதிகள் சோர்வாக இருந்தாலும், தூக்கத்தில் இருந்தாலும், நித்திரைக் கலக்கம் ஏற்பட்டாலும், அல்லது பணிநேரத்தில் செய்யக் கூடாத பிற செயல்களில் ஈடுபட்டாலும், உடனடியாக அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும். இத்தகைய […]

உள்ளூர் செய்திகள்

ஈழத் தமிழர் பிரச்சினைகள் ஜெனீவா மேடையில் – இலங்கை மீது உலக நீதியின் பார்வை

  • Aug 13, 2025 - 09:34 AM
  • 0 Comments

ஜெனீவா மனித உரிமைச் பேரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழர் தரப்பினரும் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து, மொரீசியஸ் வெளிவிவகார அமைச்சர் தனஜே ராம்ஃபுல் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் சில உயர் அதிகாரிகளை பிரித்தானிய தமிழர் பேரவை சந்தித்து உரையாடியுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக் கூறலில் இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி செயல்பட்டு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹர்த்தால் விடயத்தில் தடுமாறும் சுமந்திரன் வெற்றிகரமாக பின்வாங்கினார்.

  • Aug 12, 2025 - 08:02 PM
  • 0 Comments

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்துஐயன் கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறாது என்றும், அடுத்த திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உயிரற்ற பெண்ணின் உடல் மீட்பு

  • Aug 12, 2025 - 07:12 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து இன்று மாலை ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் கடலில் மிதந்து இருந்த சடலத்தை கண்டுபிடித்து உடனடியாக அவசர தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளித்தனர். உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு அச்சுவேலி போலீசார் மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகள் வந்து ஆரம்ப விசாரணைகளை நடத்திக் கொண்டு உள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் ஒன்றும் சொர்க்கமும் இல்லை அங்கு சாவதற்கு பறவைகளுமில்லை- எரிசக்தி அமைச்சர்

  • Aug 12, 2025 - 05:39 PM
  • 0 Comments

மன்னாரில் நடைமுறைக்கு வரும் காற்றாலை மின்திட்டம் பறவைகளுக்கும் இயற்கை சமநிலைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இதற்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பறவைகளுக்கு ஆபத்து ஏற்படும் எனப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், தாம் அந்தப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோதும் இதுபோன்ற எந்த சான்றுகளும் காணப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். மேலும், மன்னார் முதல் பூநகரி வடக்கு வரை, அரசகாணி வரையிலான பகுதி தரிசு நிலமாக உள்ளதுடன், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி 7 கோடி கஞ்சாவுடன் கைது

  • Aug 12, 2025 - 05:19 PM
  • 0 Comments

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில், பெரும் தொகையான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில், பெரும் தொகையான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி வழிகாட்டலிலும், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகாவின் ஆலோசனையிலும், போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் கஞ்சா உற்பத்திக்கு அனுமதி

  • Aug 12, 2025 - 04:20 PM
  • 0 Comments

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு முதலீட்டு சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் தம்மிக்க அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். அவரின் விளக்கத்தில், முதலீட்டு சபையின் திட்டத்தின் படி இந்த அனுமதி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 37 பேர் விண்ணப்பித்த நிலையில், ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. […]

உள்ளூர் செய்திகள்

காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை- ஜெகதீஸ்வரன் எம்பி

  • Aug 12, 2025 - 04:06 PM
  • 0 Comments

மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான விடயங்களைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் நாளை (13-08) நடைபெற உள்ளது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் பகுதியில் இத்திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, ஜனாதிபதியுடன் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினரிடமிருந்து முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நாளை ஜனாதிபதி செயலகத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் […]

உள்ளூர் செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமனம்!

  • Aug 12, 2025 - 03:56 PM
  • 0 Comments

நாட்டின் 37ஆம் பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி அங்கீகாரம் வழங்கியது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp