உள்ளூர் செய்திகள்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறுகின்றது- மத்திய வங்கி ஆளுநர்

  • Aug 14, 2025 - 03:29 PM
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார மீட்சி, ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட வேகமாக முன்னேறி வருகிறது என மத்திய வங்கி ஆளுநர் கலாநதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளுக்கு மீண்டும் செல்லும் என்றார் நெருக்கடியின் உச்சத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் எதிர்பார்த்ததைவிட விரைவாக முடிவுகளைத் தரும் நிலைக்கு வந்துள்ளன என்றும், சர்வதேச ஊடகத்திற்கு அவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஒரு நாடு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவுடன், உற்பத்தி இழப்பை மீட்டெடுக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். எங்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூருக்கு பாதயாத்திரை இன்று தொடங்கியது.

  • Aug 14, 2025 - 03:20 PM
  • 0 Comments

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை இன்று தொடங்கியது. வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் நடைபெறும் இந்த பாதயாத்திரை ஆலயத்தின் தர்மகர்த்தா சாமி அம்மா தலைமையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இன்று 14ஆம் திகதி ஆரம்பமான பாதயாத்திரை, நல்லூர் கந்தசாமி கோவிலின் தேர் திருவிழா நாளில் நல்லூரை அடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. காலை கோவிலில் விசேட பூஜைகள் நடைபெற்றதன் பின்னர், பக்தர்கள் வவுனியாவைச் சேர்ந்த பல்வேறு ஆலயங்களை தரிசித்து பாதயாத்திரையை தொடங்கினர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு

  • Aug 14, 2025 - 03:13 PM
  • 0 Comments

தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சி உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க இதுகுறித்து கூறியதாவது: ‘நாட்டு மக்களுக்கு தலைமைத்துவம் அவசியம். எனவே, முதலில் நாம் ஒன்றிணைந்து கூட்டு எதிரணியாக செயல்படுவோம். அதன் பின்னர் பயணத்தை தீர்மானிக்கலாம். அரசாங்கம் ஆட்சியில் ஒரு வருடமாக இருக்கிறது. ஆனால் பிரச்சினை ஏற்பட்டால், மக்கள் பிரதிநிதி கடிதம் […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் – பொலிஸார் குவிப்பு

  • Aug 14, 2025 - 02:59 PM
  • 0 Comments

இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நடந்தது. சம்பவத்தின் போது அந்த பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியதால், பொலிஸார் குவிந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதையும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதையும் எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, முத்துநகர் பகுதியில் உள்ள 600 ஏக்கர் வயல் நிலத்தை இந்திய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வன நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த […]

உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்

  • Aug 14, 2025 - 02:46 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க், இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான அரசாங்கத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்த பொறுப்பை நீண்டகாலமாக ஏற்க மறுத்துள்ளதை கண்டித்து, ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தியுள்ளார். அதன் மூலம், இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை விடுவித்தல், பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல், காணாமல் போனவர்கள் […]

உள்ளூர் செய்திகள்

சொக்லேட்டை உண்ண களவாடிய வயோதிபரை கொலை செய்த பரிதாப சம்பம் கண்டியில நடந்துள்ளது

  • Aug 14, 2025 - 02:19 PM
  • 0 Comments

கண்டி மாவட்டம், பேராதனை பகுதியில், கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. போலீசார் தெரிவிக்குவதற்கு ஏற்ப, இந்த கொலையைச் செய்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவ விவரங்கள், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாக இருந்தார்; பிள்ளைகள் திருமணமாகி வேறு பகுதிகளில் குடியேறிய பிறகு, அவர் தனது மனைவியுடன் தனியாக […]

உள்ளூர் செய்திகள்

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவேந்தல்

  • Aug 13, 2025 - 09:25 PM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் , கல்முனை தொகுயின் தலைவருமாகிய அ.நிதான்சன் அவர்கள் உணர்வு பூர்வமாக அனுஸ்டித்தார். இப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று (12) மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது. அம்பாறை மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலை நினைவேந்தலானது வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருமலையில் தமிழ் முஸ்லீம் மக்களின் 2500 ஏக்கர் காணிகளை அபகரிக்க அரசு திட்டம்

  • Aug 13, 2025 - 05:57 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள், அந்த பகுதிகளில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை வெளியேற்றி, அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் […]

உள்ளூர் செய்திகள்

இராணும் விவசாயம் செய்யும் காணியில் உரிமையாளர்கள் வறுமையில் வாடுகின்றனர

  • Aug 13, 2025 - 04:06 PM
  • 0 Comments

வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அவர்கள் குறிப்பிட்டதாவது, யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இராணுவத்தினர் தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளனர். இக்காணிகளில் இராணுவத்தினரே விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் காணி உரிமையாளர்கள் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் குற்றச்சாட்டு

  • Aug 13, 2025 - 03:39 PM
  • 0 Comments

ஜெர்மனிய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர், ‘சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். அவர்கள் ஏற்கனவே இறந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தால், உடல்கள் வளைந்து காணப்படாது’ என்று கூறியுள்ளார். மேலும், சிலரின் கைகால்கள் வளைந்த நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கங்களை நம்ப முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ‘அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள். அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை. அவர்கள், ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகும் என நினைக்கிறார்கள். ஆனால் நாடு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp