உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழரசின் கதவடைப்பு அழைப்பிற்கு திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு ஆதரவு

  • Aug 16, 2025 - 07:44 AM
  • 0 Comments

எதிர்வரும் திங்கட்கிழமை (18-08) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு. சசிக்குமார் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது. இத்துடன், திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் இந்த ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த தொடர்பில் அவர் தெரிவித்ததாவது: வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்தையும், முல்லைத்தீவில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோருவதையும், செம்மணி போன்ற இனப்படுகொலை சம்பவங்களுக்கு நீதி […]

உள்ளூர் செய்திகள்

தமிழ் அரசின் வடகிழக்கு தழுவிய ஹர்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான சுயேட்சை குழு ஆதரவு.

  • Aug 15, 2025 - 11:16 PM
  • 0 Comments

எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ.சு.சசிக்குமார் அவர்களின் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்ததோடு இக் குறித்த ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் முழுமையான ஆதரவினை வழங்கும்படி கோரியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எமது வடகிழக்கு தமிழர் தாயக பகுதியில் அதீத ராணுவப் பிரசன்னமும் முல்லைத்தீவில் இறந்த இளைஞனுக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்த ஹர்த்தால் அழைப்பை வர்த்தகர்கள் புறக்கனிக்கவேண்டும்- மறவன்புலவு சச்சிதானந்தம்

  • Aug 15, 2025 - 07:30 PM
  • 0 Comments

தமிழ் மக்களின் தோல்வியுற்ற அரசியல் போராட்டத்திலிருந்து மீண்டு, பொருளாதார முன்னேற்றத்தை மீட்டெடுக்கும் இந்த காலகட்டத்தில், ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றவை என்று சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார். யாழ்ப்பாண ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் பேசியதாவது: தற்போது அழைக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டம், ‘கடைந்தெடுத்த கயவர்கள்’ விடுத்த அழைப்பு ஆகும். இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இன்றைய சூழலில் கடையடைப்பு தேவையற்றது; இது காலத்திற்குப் பொருந்தாத போராட்டம். முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவத்தில், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பு ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து நெரிசல்

  • Aug 15, 2025 - 06:48 PM
  • 0 Comments

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்தும், கொழும்பு பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் காற்றாலை, கனியமணல் அகழ்வுக்கெதிராக 13ஆவது நாள் போராட்டம்

  • Aug 15, 2025 - 06:41 PM
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் காற்றாலை மற்றும் கனியமணல் திட்டங்களுக்கு எதிராக உறுதியான மற்றும் இறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 13ஆவது நாளாகவும் இன்று (15-08) மன்னார் பிரதான சுற்றுவட்டப் பகுதியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பல்வேறு கோசங்களை எழுப்பி, எதிர்ப்புச் செய்திகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அண்மையில் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பில், காற்றாலை திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக […]

உள்ளூர் செய்திகள்

அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதியை அதிகாரிகள் சரியாக பயன்படுத்தவில்லை – ஜனாதிபதி

  • Aug 15, 2025 - 06:08 PM
  • 0 Comments

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை உரிய திட்டங்களுக்கு முறையாக பயன்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. நிதி ஒதுக்கப்பட்டுள்ள கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கம், கிளிநொச்சி, மன்னார் உள்ளிட்ட இடங்களில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னாரில் வருடாந்த மடு திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு

  • Aug 15, 2025 - 05:35 PM
  • 0 Comments

மன்னாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று காலை 6.15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனை ஆரம்பமாகியது இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மடு கோவிலில் குவிந்துள்ளனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வசதிகளை இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை வீரர்கள் வழங்குகிறார்கள்.

உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு ஹர்த்தாலுக்கு காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும்- தவிசாளர்

  • Aug 15, 2025 - 05:16 PM
  • 0 Comments

காரைதீவு பிரதேச சபையின் ,ரண்டாவது அமர்வு நேற்று (14-08-2025) தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது. அமர்வின் தொடக்கத்தில், முல்லைத்தீவு முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தவிசாளர் பாஸ்கரன், வடகிழக்கில் தமிழர்களுக்கு ஏற்படும் அநீதிகளை கண்டித்து, இராணுவத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழரசு கட்சியின் ஹர்த்தாலுக்கு அனைத்து உறுப்பினர்களும், பொதுமக்களும் முழுமையான ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்தார். காரைதீவின் பொதுமக்கள் […]

உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு கதவடைப்பபை புறக்கனிக்கின்றது வவுனியா வர்த்தகர் சங்கம்

  • Aug 15, 2025 - 04:52 PM
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை சங்கத் தலைவர் கே. கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். வடகிழக்கில் அதிகரித்து வரும் இராணுவப் பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டிலில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலை மேற்கொள்ள இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, வவுனியா மாவட்ட வர்த்தகர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நீதிகோரிய கடையடைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்மென காரைதீவு பிரதேச சபை அமர்வில் கோரிக்கை

  • Aug 14, 2025 - 07:31 PM
  • 0 Comments

(நூருல் ஹதா உமர்) காரைதீவு பிரதேச சபையின் 04ஆம் சபையின் இரண்டாவது அமர்வு இன்று (14-08) சுபாஸ்கரன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களும் பிரசன்னத்துடன் அமர்வில் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் தொடங்கிய அமர்வில், முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவ தாக்குதலில் காணாமல் போன நிலையில் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ்க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அமர்வில் பிரதேச சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தொகையில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp