உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னாரில் 15 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

  • Aug 17, 2025 - 03:50 PM
  • 0 Comments

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 15வது நாளாக இன்று சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது. பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இன்று போராட்டத்தில் கலந்து, தமது ஆதரவை வெளிப்படுத்தினர். மன்னாரைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் இதன் ஒரு பகுதியாக பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் தலையில் கருப்பு பட்டி அணிந்து, பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தி […]

உள்ளூர் செய்திகள்

இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் : அரசியலமைப்பு விவகாரமே உள்வாங்கப்பட்டுள்ளது

  • Aug 17, 2025 - 10:08 AM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஒன்றை பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன. இதில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், மேலும் 13ஆவது திருத்தத்தின்படி மாகாணசபைத் தேர்தல்களை காலந்தாழ்த்தாமல் விரைந்து நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்பே அளித்த வாக்குறுதிகளுக்கிணங்க, அரசியலமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் நல்லூர் ஆலய பின் வீதி பகுதியில் வாள்வெட்டு : இளைஞன் காயம், ஐவர் கைது

  • Aug 17, 2025 - 09:43 AM
  • 0 Comments

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் உள்ள வீதி தடைக்கு அருகில் நேற்று (16-08) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. நல்லூர் ஆலய கார்த்திகை திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு திரண்டிருந்தனர். இவ்வேளையில், கும்பல் ஒன்று வீதி தடைக்கு அருகிலுள்ள அரசடி பகுதியில், மக்கள் கூட்டம் மத்தியில் இளைஞன் ஒருவரை குறிவைத்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தியது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடகிழக்கு கடையடைப்பிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது

  • Aug 16, 2025 - 03:25 PM
  • 0 Comments

அக்கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத்தீவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் மரணத்திற்கு நீதி கோருவதும், இஸ்ரேலிய நபர்களுக்கு விசா விலக்கு வழங்கப்பட்டிருப்பது கவலைக்கிடமானது என்பதையும், அவர்கள் இஸ்ரேலிய படை வீரர்களே என சந்தேகம் எழுப்பப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் தமிழ் அரசுக் கட்சியின் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது நீதி மற்றும் பொறுப்புக் கூறலைக் கோரும் அமைதியான எதிர்ப்பாகும் என்றும், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக இன்று 14ஆம் நாளாக தொடர்கின்றது போராட்டம்

  • Aug 16, 2025 - 03:08 PM
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (16-08) 14ஆம் நாளாகவும் சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெற்றது. மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக, வங்காலை மற்றும் தலைமன்னார் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து, பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்ற பதாகைகளை ஏந்தியவாறு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடகிழக்கு கடையடைப்புக்கு ஆதரவு வழங்குமாறு மட்டு மாநகரசபை முதல்வர் கோரிக்கை

  • Aug 16, 2025 - 09:45 AM
  • 0 Comments

தமிழர் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வரும் 18 ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கடையடைப்புக்கு மட்டக்களப்பு மாநகரிலுள்ள வர்தகர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.மாநகரசபையில் நேற்று (15-08) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மாநகரசபை முதல்வர் இந்த கடையடைப்புக்கு ஆதரவு கோரியுள்ளார். இலங்கை தமிழரசு கட்சி முன்னெடுத்துள்ள வடக்கு கிழக்கில் கடையடைப்பு போராட்டம் எதிர்வரும் 18-08 ம் திகதி திங்கட்கிழமை இடம்;பெறவுள்ளது. எனவே அன்றைய […]

உள்ளூர் செய்திகள்

பிரதமர் பதவியில் மாற்றமா? மனம் திறந்தார் பிரதமர் ஹரிணி

  • Aug 16, 2025 - 09:34 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசில் குழப்பம் உள்ளது என எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி ஆட்சியை பிடிக்கக் கூடாது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள் அளித்த அமோக ஆதரவை பெற்ற அரசை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமரை மாற்ற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது ஜனாதிபதியின் முடிவில் இருக்கும். இதுபற்றிய எந்த அவசரமும் எதிர்க்கட்சிகளுக்கு தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார் பிரதமர் பதவியை எந்த சந்தர்ப்பத்திலும் […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு மக்கள் ஒப்புதலென எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.?

  • Aug 16, 2025 - 09:23 AM
  • 0 Comments

மன்னார் மற்றும் பூநகரியில் உள்ள இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து இந்தியாவின் அதானி நிறுவனம் விலகியுள்ள நிலையில், சர்வதேச விலைமனு கோரல் மூலம் வேலைத்திட்டங்களுக்காக அந்த காணிகளை மீண்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். மன்னாரில் 250 மெகாவோட் மற்றும் பூநகரியில் 234 மெகாவோட் திறன் கொண்ட திட்டங்களுக்கு அதானி நிறுவனத்திற்குச் காணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது அவை வேறொரு நிறுவனத்திற்கும் வழங்க இயலுமமெனவும் பொருத்தமான விலையில் விலைமனுவை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கே ஒதுக்கப்படும் எனவும் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கை தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) புதிய பாய்ச்சலுக்கு தயாராகின்றது.

  • Aug 16, 2025 - 09:12 AM
  • 0 Comments

இலங்கை உள்ளூர் கண்டுபிடிப்புகளைக் காப்பாற்றவும் 2030க்குள் 15 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை நோக்கி விரிவடையக்கூடிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பு அளிக்கவும் ரூ.100 மில்லியன் (சுமார் 333,000 அமெரிக்க டாலர்) ஆரம்ப முதலீட்டுடன் தேசிய யுஐ நிதியினை தொடங்க உள்ளது, என்று Biometric Update வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை தனது டிஜிட்டல் பொருளாதாரத்தை பெருக்குவதனை நோக்கி செயல்படுகிறது, இதில் செயற்கை நுண்ணறிவு (AI) முக்கிய வளர்ச்சி மூலக்கூறு என வலியுறுத்தப்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தவர் தானியங்கி துப்பாக்கியுடன் கைது

  • Aug 16, 2025 - 08:45 AM
  • 0 Comments

கொழும்பில் பாதாள உலக தாக்குதலை மேற்கொள்ளவிருந்த சந்தேக நபர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகிக்கப்படும் நபர் ஓய்வுபெற்ற இராணுவ கமாண்டோ படை சார்ஜென்ட் மேஜர் ஒருவர் ஆவார். அவரிடம் செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்தன. சந்தேக நபர் மாலபேயில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கைதான நபரிடமிருந்து பல இராணுவ கமாண்டோ உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், டுபாயில் உள்ள இராணுவ கமாண்டோ படையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp