உள்ளூர் செய்திகள்

பிரசரும் சுகரும் கூடியதையடுத்து ரணில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

  • Aug 23, 2025 - 07:17 AM
  • 0 Comments

சிறை காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணிலின் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு

  • Aug 22, 2025 - 07:33 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது வரை மின்சாரம் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, வழக்கின் தீர்ப்பை அரை மணி நேரம் ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு மாலை 5.30 அளவில் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆயூதங்களும் வெடிபொருட்களும் மீட்பு

  • Aug 22, 2025 - 07:26 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. அந்த காணியில் வெடிபொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் இன்று (22) நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களும் ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்புப் பணிகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றன. இதில் யாழ்ப்பாணம் பொலிஸார், பொலிஸ் விசேட […]

உள்ளூர் செய்திகள்

ரணிலின் பிணைக் கோரிக்கை ஒத்திவைப்பு

  • Aug 22, 2025 - 07:07 PM
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரை மணித்தியாலயத்திற்கு குறித்த உத்தரவு தொடர்பான அறிவிப்பை ஒத்திவைப்பதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலைக்காக நீதி கோரிய மாநகரசபையின் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

  • Aug 22, 2025 - 07:04 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாநகர சபையின் மூன்றாவது மாதாந்த அமர்வு நேற்று (21-08) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ்வமர்வில், 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலைக்காக நீதி கோரி, அப்போதைய இராணுவ முகாம் அமைந்த இடம் புதைகுழி தோண்டப்பட வேண்டும் எனும் பிரேரணை முன்வைக்கப்பட்டு, சபையினரின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி முன்வைத்த இந்த பிரேரணையில், 186 பொதுமக்கள் – […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மட்டு மேயர் மிரட்டப்பட்டாரா?

  • Aug 21, 2025 - 09:53 PM
  • 0 Comments

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பில் ஹர்த்தால் காரணமாக மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்றைய  மாநகர சபை அமர்வில், முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் சபை நடைமுறைகளில் அனைத்து முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு, அனுமதிகள் வழங்கப்பட்டன. உறுப்பினர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் நீதிமன்றம் முன்பாக பெண் ஒருவர் பட்டப்பகலில் கடத்தல்.

  • Aug 21, 2025 - 09:38 PM
  • 0 Comments

செவ்வாய்க்கிழமை (19) காலை, மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த 27 வயது பெண் ஒருவர், தனது சகோதரியுடன் நீதிமன்றத்திலிருந்து வெளியேறியவுடன், ஒரு குழுவினரால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகவலின்படி, குறித்த பெண் 2023 ஆம் ஆண்டு தனது காதலருடன் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டிருந்தார். பின்னர் கணவன் வெளிநாடு சென்ற நிலையில், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால், மனைவி விவாகரத்து கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

  • Aug 21, 2025 - 08:56 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், யாழ்ப்பாணத்துக்கென தனிப்பட்ட துறைமுகம் இல்லாததால் மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், 165 மில்லியன் ரூபா செலவில் கொழும்புத் துறைமுகத்தையும் நவீனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத நிலையால், […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் இன்றும் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

  • Aug 21, 2025 - 08:37 PM
  • 0 Comments

இந்தச் சம்பவம் பண்டாரகம துன்போதிய பாலத்திற்கு அருகில் இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் இடம்பெற்றது. அடையாளம் தெரியாத ஒருவர் காரில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. டி-56 வகை துப்பாக்கி பயன்படுத்தி, குறித்த நபர் மீது 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த 3 தமிழ் இளைஞர்களுக்கு வலை விரித்துள்ள டிஐடியினர்

  • Aug 21, 2025 - 08:15 PM
  • 0 Comments

தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்கில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களை கைது செய்ய, பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரி புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் றுரு-56 வகை துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அவர் மற்றும் அவரது குழுவினர் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் பொலிஸாரால் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp