உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும் சம்மாந்துறையில் நடைப்பெற்றது

  • Aug 24, 2025 - 09:29 AM
  • 0 Comments

(நூருல் ஹுதா உமர்) பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும் நேற்று (23-08) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு பன்னூலாசிரியர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் இடம்பெற்றது. 1996ஆம் ஆண்டு நவமணி பத்திரிகையில் கிழக்கு மாகாண செய்தியாளராக பணியாற்றத் தொடங்கிய எஸ்.எல். றியாஸ், தனது எழுத்து பணி மூலம் ஊடக உலகில் பிரகாசித்தார். அதே ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி மற்றொருவர் காயம்

  • Aug 24, 2025 - 09:19 AM
  • 0 Comments

கொழும்பு புறநகர் பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் மாலனி புளத்சிங்கள வீதியில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர் கல்கிஸ்ஸையைச் சேர்ந்த கிஹான் துலான் பெரேரா (25) என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முன்னதாக பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை […]

உள்ளூர் செய்திகள்

தாய்லாந்தை தமிழர் பகுதிகளில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் வேண்டுகோள்

  • Aug 24, 2025 - 09:09 AM
  • 0 Comments

உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து சிறப்பாகச் செயல்படுகின்றது என்பதையும், அந்த அனுபவத்தை வடக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்ய தாய்லாந்து முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கேட்டுக்கொண்டார். உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து சிறப்பாகச் செயல்படுகின்றது என்பதையும், அந்த அனுபவத்தை வடக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கைக்கான தாய்லாந்து […]

கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமை பறிப்பு

  • Aug 23, 2025 - 08:12 PM
  • 0 Comments

1977-க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த யூ.என்.பி அரசு, விசேஷத் தலைவர் ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோவின் அரசியல் மற்றும் பொது உரிமைகளை ஏழு ஆண்டுகளுக்கு நிறுத்தியது. நீதியின் பெயரில் அரசியல் தண்டனைதானா? இல்லையா அதிகார துஷ்பிரயோகமா என்ற விவாதம் இன்றும் தொடர்கின்றது 1980 அக்டோபர் 16 அன்றைய நாள் இலங்கை அரசியல் வரலாற்றில் விவாதம் குன்றாத நாளாகவே நினைவுகூரப்படுகின்றது. அந்த நாள்தான், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு ‘உiஎiஉ னளையடிடைவைல’—அதாவது பிரஜாஃஅரசியல் உரிமை […]

கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் கைது கிளீன் சிறிலங்காவை உயர்த்துமா? அல்லது வீழ்த்துமா?

  • Aug 23, 2025 - 07:42 PM
  • 0 Comments

(தாமரைச்செல்வன்)இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், முன்னாள் ஜனாதிபதியை ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்திருப்பது இதுவரை நடைபெறவில்லை. 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டு – 2023ஆம் ஆண்டு தனது மனைவியின் லண்டன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியது. இச்சம்பவம் வெறும் ஒரு கைது அல்ல இலங்கை அரசியலின் வரலாற்றில் சட்டத்தின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்காமைக்கு குமுருகிறார் சுமந்திரன்

  • Aug 23, 2025 - 07:16 PM
  • 0 Comments

பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் யாரும் மேலானவர்கள் அல்ல என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்த பின்பு, அவருக்கு பிணை வழங்குவதை எதிர்த்தது முறையான ஆலோசனை அற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  • Aug 23, 2025 - 07:04 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் பயணம் மேற்கொள்வதற்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சாட்டிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (22-08) அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஏழு புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தனர்.

  • Aug 23, 2025 - 08:07 AM
  • 0 Comments

இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மேம்படுத்துவது ஒவ்வொரு தூதுவரின் பிரதான பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அவர், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி சமமாகச் சேவைகளை வழங்க வேண்டும் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும் சவால்களை நன்கு […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

  • Aug 23, 2025 - 07:50 AM
  • 0 Comments

கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். 2023 செப்டம்பரில், ஹவானாவில் நடைபெற்ற பு77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின் லண்டன் பயணத்தில் அவர் தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதாகவும், அப்பயணத்தில் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நேற்று காலை […]

உள்ளூர் செய்திகள்

வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழின் நகலை ஐ.தே.கட்சி வெளியிட்டுள்ளது.

  • Aug 23, 2025 - 07:36 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க நேற்று (22-08) கைது செய்யப்பட்ட நிலையில், 2023 செப்டம்பரில் இங்கிலாந்துக்குச் சென்றபோது அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அந்த அழைப்பிதழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராப்டரினால் கையொப்பமிடப்பட்டு, விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகும். பட்டமளிப்பு விழா மற்றும் விருந்திற்கான இந்த அழைப்பிதழை கட்சி வெளியிட்டுள்ளது. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp