உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தபால் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

  • Aug 24, 2025 - 08:34 PM
  • 0 Comments

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று நிறைவுக்கு வந்தது. அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டின்பேரில் பணிப்புறக்கணிப்பு உடனடியாக முடிவுக்கு வந்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார். கடந்த 17ஆம் திகதி முதல் 19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள்

மக்களின் காணிகள் மக்களுக்கே என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

  • Aug 24, 2025 - 08:24 PM
  • 0 Comments

வடக்கு மக்களுக்குரிய காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாகவும், தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘ரணில் விக்கிரமசிங்கவை யாரும் தொட முடியாது, அவர் சர்வதேசத்தில் வல்லவர், அவரோடு விளையாட முடியாது என எதிரணியினர் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் இன்று அவர்மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் […]

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பில் 1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்று நினைவேந்தப்பட்டனர்

  • Aug 24, 2025 - 08:15 PM
  • 0 Comments

1990ஆம் ஆண்டு சித்தாண்டி பகுதியில் நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வு இன்று சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தலை சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அ.அ. அமலநாயகி, சட்டத்தரணி த. ஜெயசிங்கம், பிரதேச சபை உறுப்பினர் சி. வவானந்தன், சித்தாண்டி, முறக்கொட்டசேனை, சந்திவெளி பகுதிகளிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், […]

உள்ளூர் செய்திகள்

ரணிலின் கைதிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன

  • Aug 24, 2025 - 08:06 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கடும் கண்டனத்தை வெளியிட்டன. ‘அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஊடகச் சந்திப்பில், அரசாங்கம் சட்டத்தை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது. இன்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் […]

உள்ளூர் செய்திகள்

சுமந்திரன் யாழில் இருந்து பேசுகிறாரா அல்லது ரணில் வீட்டிருந்து பேசுகிறாரா என பிமல் ரத்நாயக்க கேள்வி

  • Aug 24, 2025 - 07:53 PM
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் தெரிவித்திருப்பது கவலைக்கிடமானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ‘சுமந்திரன் யாழிலிருந்தே பேசுகிறாரா, இல்லை ரணிலின் இல்லத்திலிருந்தே பேசுகிறாரா?’ என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது: ‘கறுப்பு ஜூலை கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்க வேண்டும். அதோடு, மத்திய […]

உள்ளூர் கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் கைதான போது நீதிமன்றில் நடந்த வாதப்பிரதி வாதங்களின் சாரம்சம்

  • Aug 24, 2025 - 10:38 AM
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, அரச நிதி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாஜிஸ்திரேட் நிலுபுலி லங்கபுரா, விக்கிரமசிங்க பக்கம் வாதாடிய சட்டத்தரணிகள் முன்வைத்த காரணங்கள் ஜாமீன் வழங்க போதுமானதாக இல்லை எனத் தீர்ப்பளித்தார். விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) விசாரணைக்காக ஆஜராகியபோது கைது செய்யப்பட்டு, பின்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஜாமீன் தொடர்பான விசாரணை பல மணி […]

ஆசிரியர் கருத்துக்கள் செய்திகள் முக்கிய செய்திகள்

மிஸ்டர் க்ளீன் என்ற ரணில் நிதி மோசடியென கைது

  • Aug 24, 2025 - 10:21 AM
  • 0 Comments

பல தசாப்தங்களாக ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற பெயரில் அரசியலில் அறியப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, ஊழலால் களங்கமில்லாத தலைவராகக் கருதப்பட்டார். ஆனால் 2015இல் மத்திய வங்கி பத்திர மோசடி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது. பல முறை பிரதமராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய அவர், 2022இல் ‘அரகலய’ போராட்டத்துக்குப் பின் திடீர் சூழ்நிலையில் ஜனாதிபதியானார் இப்போது அவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏற்பட்ட கைது ஆகும். வாழ்நாளில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தபால் ஊழியர்களின் 2 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்ற முடியாதுள்ளது

  • Aug 24, 2025 - 10:05 AM
  • 0 Comments

இலங்கையின் தபால் சேவைகள் கடந்த ஆகஸ்ட் 17 முதல் முடிவில்லா வேலைநிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 கோரிக்கைகளில் 17ஐ அரசு ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், மேலதிக நேரக் கூலி வழங்கப்படாததும், விரல் ரேகை இயந்திரம் மூலம் வருகை பதிவு செய்வதை ஊழியர்கள் எதிர்ப்பதும் காரணமாக வேலைநிறுத்தம் தொடர்கிறது. தபால் மாஸ்டர் ஜெனரல் ருவான் சத்குமாரா தெரிவித்ததாவது, ’17 கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் மேலதிக நேரக் கூலியும் விரல் ரேகை விதிமுறையும் அரசின் கொள்கை காரணமாகத் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மகிந்த ராஜபக்சவை கைது செய்ய போவதில்லை- பொது பாதுகாப்பு அமைச்சர்

  • Aug 24, 2025 - 09:53 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்ய எந்தத் திட்டமும் இல்லையென பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவையும் அரசாங்கம் கைது செய்யும் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில், அவர் இவ்வாறு விளக்கமளித்தார். ‘எவரையும் கைது செய்வதற்கான முயற்சி எதுவும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. எங்களின் நோக்கம் அது அல்ல. மாறாக, இதுவரை கவனிக்கப்படாமல் போன முன்னாள் குற்றச்செயல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன,’ என்று […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மகனாக வளர்த்த பெறாமகன் சொந்த வீட்டிலேயே கொள்ளை

  • Aug 24, 2025 - 09:37 AM
  • 0 Comments

மட்டக்களப்பில் 18 வயது இளைஞர் ஒருவர் தன்னை தாய்தந்தையற்று வளர்த்த உறவினரின் வீட்டிலிருந்த 16 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய சம்பவத்தில், குறித்த இளைஞனும், அவரது நண்பனும், திருடிய தங்கத்தை வாங்கிய நகைக்கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (21-08) இடம்பெற்றதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தாய் தந்தையை இழந்த குறித்த இளைஞனை அவரது உறவினர்கள் வீட்டில் தங்கவைத்து, பிள்ளையாய் வளர்த்து, படிக்கச் செய்து பராமரித்து வந்தனர். ஆனால், வீட்டில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp